16 ஆவது உலகத்தமிழிணைய மாநாடு – முழக்கம், இலச்சினைக்கானபோட்டிகள்

அன்புடையீர், வணக்கம். 16-ஆவது உலகத் தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மிகு தொராண்டோ மாநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது. இவ்வாண்டு கனடாவின் 150 ஆண்டுநிறைவும் ஆகும்.  மாநாட்டின் கருத்து முழக்கங்கள் அல்லது உள்ளுறைத் தலைப்புகள் ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning)என்பதும் தமிழில் தரவு அறிவியல் (Data Science)என்பதும் ஆகும்.  தமிழ்க்கணிமை ஆய்வுலகில்  இயற்கைமொழியியல் ஆய்வுகள் பெருகிவருகின்றன.  ஒளிவருடி எழுத்துணரி நுட்பம், எழுத்துரையிலிருந்து ஒலிவடிவப் பேச்சுரையாக்குவது, திராவிடமொழிகளுக்கிடையே இயந்திர மொழிபெயர்த்தல், மொழியியல் நோக்கில்…

அய்மானில்(Ajman) இரத்தத்தான முகாம்

அய்மானில்(Ajman) இரத்தத்தான முகாம்   அய்மானில்  இரமதாஉறைவகம்(கருஞ்சதுக்கம் / Black Square) பின்புறம் அமைந்துள்ள அரேபியா வாடகை  ஊர்தி அலுவலகத்தில் பங்குனி 28, 2048 / 10.04.2017 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை  இரத்தத்தான முகாம் நடைபெற இருக்கிறது. இந்த  இரத்தத்தான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் முதுவை  இதாயத்து: 050 51 96 433 கீழை ஏ  அமீது யாசின்: 052 777 8341 ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரத்தத்தான…

தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்ற தந்தை செல்வநாயகம்!

தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டுத் தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்றவர் தந்தை செல்வநாயகம்! (ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களது 119-ஆம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை)  தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) அறப் போராட்டம், மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம், இப்பொழுது கடந்த 8 ஆண்டுகளாக அறப் போராட்டம். மீண்டும் தொடக்கப் புள்ளியில் வந்து நிற்கிறோம்.   அறப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்…

நீலிக்கண்ணீரை நிறுத்தட்டும் நடிப்புத் திலகம் இரசனிகாந்து! – இலக்குவனார் திருவள்ளுவன்

நீலிக்கண்ணீரை நிறுத்தட்டும் நடிப்புத் திலகம் இரசனிகாந்து!   நடிப்பையும் தோரணையையும் பொருத்தவரை பெரும்பாலான நேயர்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ளார் இரசனிகாந்து என்பதில் ஐயமில்லை. ஆனால், அதனாலேயே அவரது சொல்லுக்குக் கட்டுப்படும் மக்கள் பெரும்பான்மையர் இருப்பதாக எண்ணினால் தவறு. மக்கள் திலகம் ம..கோ.இரா.வின் (எம்ஞ்சியாரின்) கொடை உள்ளத்துடனும் தமிழ் உணர்வுடனும் ஒப்பிடக்கூட இயலாதவர்தான் இரசனிகாந்து என்பதில் ஐயமில்லை.   பணத்துக்கு விலை போவோரால் எழுதப்பட்ட  தமிழ்உணர்வு வரிகளுக்கு இரசனிகாந்து வாயசைத்துள்ளார். ஆனால்,  சொந்தக்கருத்தாக எப்பொழுதும் தன்னை வாழ  வைக்கும் தமிழ்நாட்டு நலன் சார்ந்தகருத்துகளைத் தெரிவித்தவர் அல்லர்.  மனித…

‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிப் பதிவுகளுக்கான அழைப்பு

வணக்கம். சேக்கம் சமூகசேவை அமைப்பு வழங்கும் ‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிக்கான பதிவுகள்,   பங்குனி 22, 2048, செவ்வாய் ஏப்பிரல் 04,   பங்குனி 23, 2048, புதன்கிழமை, ஏப்பிரல் 5  ஆகிய நாள்களில் இடம்பெறவுள்ளன. உங்களையும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.   முதல்பதிவு வருகை: மாலை 6.00 மணி இரண்டாம் பதிவு வருகை: மாலை 7.30 மணி   இடம் :  இரா அரண்மனை விருந்துக்கூடம்  [ ERAA Palace Banquet Hall, 10 Karachi Dr, Markham, ON. L3S 0B6…

இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்!   இலங்கையைத் தமிழில் குறிப்பிடும் நம்நாட்டுத்தமிழர்களும் இலங்கைத்தமிழர்களும் ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் அரசுமுறைப் பெயரைச் சரியாகக் குறிப்பிடுவதாக எண்ணிச் சிரீ இலங்கா என்றே குறிப்பிடுகின்றனர்.   ஈழம், இலங்கை என்பன தொடர்புடைய பெயர்களே! ஈழத்துப் பூதன்தேவனா் என்னும் புலவர் சங்கக்காலத்தில் வாழ்ந்துள்ளார். ஈழத்து உணவு என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. சங்க இலக்கியத்தில் இலங்கை என்றும் சொல்லாட்சி உள்ளது. ‘தொன்மாவிலங்கை எனச் சிறுபாணாற்றுப்படை குறிக்கிறது. ‘இலங்கை கிழவோன்’ எனப் புறநானூறு(379) குறிப்பிடுகிறது.   ஈழம் என்றால் பொன் எனப் பொருள்….

சவூதி இரியாத்தில் நடைபெற்ற குடும்ப ஒன்று கூடல்

சவூதி இரியாத்தில் நடைபெற்ற குடும்ப ஒன்று கூடல் சவூதி இரியாத்து நகரில் பரங்கிப்பேட்டை இசுலாமிய நல்வாழ்வுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பரங்கிப்பேட்டை குடும்பங்கள் ஒன்றுகூடல் நிகழ்வு 17 மார்ச்சு 2017 அன்று இசுதிராஃகா இலயாலைனா என்னும் மகிழகத்தில் மிகச் சிறப்பாக நிகழ்வுற்றது.   இதில்  அகவை வாரியாக பிள்ளைகளுக்கான ஒப்பித்தல்(கிராஅத்து) போட்டிகள், பேச்சுப் போட்டி, இசுலாமிய வினாவிடை எழுத்துத் தேர்வு, ஆண்கள் பெண்களுக்கான இசுலாமிய எழுத்துத் தேர்வு ஆகிய அறிவுசார் போட்டிகளும், ஆண்களுக்கான  கால்பந்து,  மட்டைப்பந்தாட்டங்களும், மாற்றி எண்ணு(யோசி), ஊமை விளையாட்டு (Dumb Charades)…

சார்சாவில் இரத்தத் தான முகாம்

சார்சாவில் இரத்தத் தான முகாம் சார்சா நகர் மையம்  பின்புறம் உள்ள  நகர் வாடகைஊர்தி(City-Taxi)  அலுவலகத்தில் மாசி 07, 2048 – திங்கட்கிழமை  –  20.03.2017 காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை குருதிக்கொடை முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் முதுவை  இதாயத்து 050 51 96 433 கீழை ஏ  அமீது  யாசின் 052 777 8341 ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா

அன்புடையீர்,   உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மணக்கும் தொராண்டோ பெருநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது.  உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வுரை நிகழ்த்தவிருக்கின்றார்கள்.   தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைலப்புகளிலும்  ஆய்வுக்  கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.   கருத்தரங்க முழக்கங்கள்: ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும்  (Deep Learning) தமிழில் தரவு அறிவியல் (Data Science)     நினைவில் கொள்க: 2 பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி  நாள்: சித்திரை…

ஐ.நா.வின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஆக்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்

விரைவாக நடைபெறும் சமற்கிருதத் திணிப்பு!  மெல்லவும் விழிக்காத தமிழ் மக்கள்! ஐ.நா.வின்  அலுவல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஆக்குக!   பாரதிய  மக்கள்(சனதாக்) கட்சியும்  பேராய(காங்கிரசு)க் கட்சியும் இந்தித்திணிப்பிலும் சமற்கிருதத் திணிப்பிலும் ஒற்றுமை உள்ளவை.  பேராயக்கட்சி மெல்லத்திணிப்பதுபோல் நடிக்கும். பா.ச.க.விற்கு அந்த நடிப்பு பிடிக்காது. ஆனால்,  வேறொரு வேற்றுமை உண்டு.  ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என இந்துமதத்தைத்திணிப்பதிலும் பாசக கவனம் செலுத்தும்.   நம் நாட்டில் இந்தியையைும் சமற்கிருதத்தையும் திணித்துத் திணித்துச் சலிப்பு ஏற்பட்டு விட்டது பா.ச.க.விற்கு. எனவே, உலக…