அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016

அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016   முடிவு நாள் : பங்குனி 17, 2048  மார்ச்சு 30, 2017 படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி :  ஞானம், கிளை அலுவலகம், எண் 38, 46 ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.

ஊன்விற்று வாழ்வதும்தான் வாழ்வோ? – கு. நா. கவின்முருகு

ஊன்விற்று வாழ்வதும்தான் வாழ்வோ? பிணந்தின்னிக் கூட்டமடா இந்தக் கூட்டம் பிழைப்பிற்கு மானமின்றி விழுவர் காலில்! பணத்தையெண்ணிச் சுரண்டித்தான் மானம் கெட்டார் பாமரரின் உயிர்குடித்தும் லாபம் காண்டார்! குணமிழந்தே நாய்களைப்போல் அலைந்து சுற்றி குலம்செழிக்க குடிகெடுக்க தலைவர் ஆனார் மணந்துகொண்ட இல்லாளோ இணங்கா விட்டால் மக்களுக்கு நல்லவை செய்து வாழ்வார்! பிச்சைக்கே வாக்குவாங்கி கோட்டை போக பாட்டாளி வயிற்றுக்கோ செய்த தென்ன? இச்சைக்காம் நாற்காலி சண்டை, போட்டி இடுப்பிலுள்ள வேட்டிக்கோ கறைகள் உண்டு! எச்சையிலை நாய்களிடம் பட்ட பாடாய் எங்களுக்குத் திண்டாட்டம் விடிய லில்லை! சச்சுவுக்கு…

கேப்பாபுலவு போராட்டத்தினை அனைத்துநாட்டிற்கும் கொண்டு செல்லும் புலம்பெயர் இளையோர், மக்கள்

கேப்பாபுலவு போராட்டத்தினை அனைத்துநாட்டிற்கும் கொண்டு செல்லும் புலம்பெயர் இளையோர், மக்கள்   முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் நிலை கொண்டிருக்கும் படையினரை  அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனக்கோரி கடந்த 20 நாட்களாகத் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். மக்களின் முறைமையான(நியாயமான) கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் நல்லாட்சி அரசாங்கம் எனத் தம்மைத்தாமே கூறும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. பல மிரட்டல்களுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் மிக மோசமான நிலையில் இருந்து கொண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை…

பொங்கி வாடா! – காசி ஆனந்தன்

பொங்கி வாடா! தீயெழுந்து அடுப்பினிலே பாலைச் சுட்டால் சினந்தெழுந்து பால்பொங்கித் தீயணைக்கும்! நீ உவந்து செய்கின்ற பொங்கல் வெற்று நிகழ்வன்று!  வீரத்தின் பாடம் கண்டாய்! தாயிழந்த சேயர்போல் தமிழர் ஈழம் தனையிழந்து சினங்கொண்டு பொங்குகின்றார்! பாய்! சிவந்து களமாடு! பொங்கி வாடா! பகைநொறுக்கித் தமிழீழ மண்ணை மீட்போம்! திரைப்படத்தின் மார்புகளைத் தின்னும் கண்ணால் தீந்தமிழ்த்தாய் ஈழத்தில் சாவின் வாயில் இரைப்படப்போய் விழும்புலிகள் களத்தின் புண்கள் இருந்த மலை மார்புகளைப் பார்ப்பாய்! ஆங்கே நிரைப்பட நாளும் களத்தை நிறைத்தார் வீரர்! நீ என்னடா இங்கே கிழித்தாய்?…

சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்: தொடரும் கேப்பாப்பிலவு போராட்டம்

சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்: தொடரும் கேப்பாப்பிலவு போராட்டம்   விமானப்படைத் தளத்திற்கு முன்பாக உள்ள வீதியில், கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த 9 ஆம்  நாள் முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   குளிரையும் வெயிலையும் பொருட்படுத்தாது தமது பூர்வீக நிலத்தினை மீட்கும் போராட்டத்தில் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள்  2 ஆவது வாரமாகத் தொடர்ந்து  ஈடுபட்டு வருகின்றனர். .அம்மக்கள், சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.r.   மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப் பல்வேறு தரப்பினரும்…

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம், நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 22, 2048 / பிப்பிரவரி மாதம் 4ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம். நம் மொழி,பண்பாடு,வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை முன்னிறுத்திச் செயல்படும் நமது சப்பான் தமிழ்சங்கம் முன்னெடுக்கும் இவ்விழாவிலும் நமது தாய்த்தமிழ் உறவுகள் உவகை கொள்ளும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. அனைவரும்…

முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்

முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்     இன்று கனடா நாட்டில் வசிக்கும் செயசுந்தர் கலைவாணி இணையரின் 10 ஆவது திருமண ஆண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 27 சிறார்களுக்கு 30000 உரூபா பெறுமதியான புத்தாடைகளை வழங்கி வைத்துள்ளார்.   பாரதி பெண்கள் சிறுவர் இல்ல நிருவாகத்தினரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் புத்தாடைகள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்ததாவது தமது இல்லத்தில் 108 பெண் சிறார்கள் உள்ளதாகவும் இவர்கள் யாவரும் போர் வடுக்களை…

ஈழத்தில் நான் : இலக்கியச் சந்திப்பு, ஈச்சிலம்பற்று

தை 12, 2048 புதன் ,சனவரி 25, 2017  மாலை முதல் தை 17, 2048 திங்கள் ,   சனவரி 30, 2017  மாலை வரை வீரம் விளையும் ஈழ மண்ணில் இருப்பேன். அங்குபங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாணாக்கர்க்குக்கல்விப்பொருள் வழங்கும் இந்நிகழ்வும் ஒன்று.     இனிய நந்தவனம் நிறுவம், தமிழ்நாடு அம்பாறை மாவட்டத் தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டுப் பேரவை எழுத்தாளர் இலக்கியச் சந்திப்பும் நூல் வெளியீடும் விருதுகள் வழங்கல் மாணாக்கர்களுக்குக் கல்வித்துணைப் பொருள்கள் வழங்கல் தை 16, 2048   ஞாயிறு சனவரி 29,…

வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம்.

வவுனியாவில் தை 10, 2048  திங்கள்கிழமை 23.01.2017 அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம்.  தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு  முதன்மைக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கைக் குடியரசுத்தலைவர், தலைமையர்(பிரதமர்), எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு, அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை ( தை 07, 2048 / வெள்ளிக்கிழமை 20.01.2017 ) அனுப்பி வைத்துள்ளனர்.   வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் …

ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள், ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா?  ஐ.நா.அவையில் அளிக்க கருத்துகளைத் தெரிவியுங்கள். வணக்கம்!  தமிழக, தமிழீழச் செயற்பாட்டாளர்களுக்கான வேண்டுகோள். பெரும்பாலான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மாவீரர் நாளுக்கான  அதிகளவான முதன்மையைக் கொடுத்துச் செயற்படுகிறீர்கள் அதே  முதன்மையையும் மக்கள்  ஆற்றலையும் அந்த மாவீரர்களின் இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக ஐக்கிய நாடுகள்  அவை சார்ந்த செயற்பாடுகளுக்கும் வழங்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.   நாம் இந்தத் தருணத்திலே அதற்காக அதிகமாக  அதிகமாக உழைக்கவேண்டியுள்ளது.  தமிழர்களுடைய  சிக்கல்களை நாம்  அனைத்துநாட்டுமயப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம், தற்போதைய இறுக்கமான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு…

உழவனைக் கொன்றுவிட்டு உழவர் திருநாள்! – தஞ்சாவூரான்

உழவனைக் கொன்றுவிட்டு உழவர் திருநாள்!   உழவனைக் கொன்றுவிட்டு உழவர் திருநாள்! எழவு வீட்டில் எதற்கு விழா?   நிலம் வெடிக்கும் போதெல்லாம் நெஞ்சு வெடிக்கும் உழவனை உங்களுக்குத் தெரியுமா?   மண்ணை நேசித்தவனை மரணத்தை யாசிக்க வைத்துவிட்டோம்   விடிய, விடிய அவன் உழுதது உங்களுக்காகத்தான் இன்று விடமருந்தி நிலம் விழுந்ததும் உங்களுக்காகத்தான்   இதுநாள் வரை உழவின் சிறப்பைக் கொண்டாடிய நாம் இன்று உழவனின் இறப்பைக் கொண்டாடத் தயாராகிவிட்டோம்   நீங்கள் பொங்கும் பொங்கலில் தளும்புவது அரிசியல்ல… ஒரு ஏழை விவசாயியின்…