களுப்பான தோட்டப் பாடசாலைக்கு அமைச்சர் இராதாகிருட்டிணன் வருகை

களுப்பான தோட்டப் பாடசாலைக்கு அமைச்சர் இராதாகிருட்டிணன் வருகை   கேகாலை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கும்  பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல்  துணைக்கருவிகளை கையளிப்பதற்கும்   மாநிலக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்  பள்ளிக்கு வருகை புரிந்தார்.  யாழ்ப்பானம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின்  இலண்டன் வாழ் பழைய மாணவர்களின் “ஏணி” தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர் க.குமணன,; எம்.மரியதாசு, கோலை மாவட்ட ம.ம.மு அமைப்பாளர்  செகநாதான் மாகாண  அவை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள்,…

அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 1/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு

ஆட்சியாளர்கள் – அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு, த.தா.கை.க.கா.ஆ.உ.தே.க.கு.ச (FFSHKFDR – Tamil Homeland)  கூட்டாக வலியுறுத்தல்!   இலங்கையில் மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல், கைது, தடுத்து வைத்தல்’ போன்றவை அரசியல் தலைமைகளாலும், படைத் தலைமைகளாலும், அரசுச் சார்புத் துணை ஆயுதக் குழுக்களாலும், மிகப் பொறுமையாக நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் ஆட்சியாளர்கள் – அரசு ஆகியவற்றின் நலன் சார்ந்த ‘அரசியல் நிகழ்ச்சி நிர’லின்படியே இவை நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்திருக்கும் வவுனியா மாவட்டக்…

கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2 – ஈழத்து நிலவன்

கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2   எமது மக்களைப் பாதுகாப்பதற்காக வரலாற்றுத் தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள்! – அடிமைத் தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்! – ஈழத்து நிலவன்   தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தி அவர்களை ஒடுக்கும் வழமையான இலங்கை ஆட்சியே இதுவும் எனத் தன்னை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது மைத்திரிபால சிறிசேன – இரணில் ஆட்சி. இன அழிப்பின் நுண்மையான பின்னணிகள்   திடீர் இறப்புகள்,…

கல்வியே கண் – கி. பாரதிதாசன்

“கல்வியே கண்”     செல்லும் இடமெல்லாம் சீர்களைச் சேர்த்திட வெல்லும் அடலேறாய் விஞ்சிட – தொல்லுலகில் யாண்டும் புகழ்பரவத் தீண்டும் துயரகல வேண்டுமே கல்வி விளக்கு! சாதிச் சழக்குகளை மோதி மிதிக்கின்ற நீதி நிலத்தில் நிலைத்திட! – ஆதியிலே ஆண்ட அறநெறிகள் மீண்டும் அரங்கேற வேண்டுமே கல்வி விதை! கல்வி உடையவரே கண்ணுடையர் என்றழகாய்ச் சொல்லி மகிழும் சுடர்க்குறளே! – முல்லைமலர்க் காடொளிரும் வண்ணம் கருத்தொளிர, எப்பொழுதும் ஏடொளிரும் வண்ணம் இரு! நல்லோர் திருவடியை நாடி நலமெய்த! வல்லோன் எனும்பெயர் வந்தெய்த! –…

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? – க.சச்சிதானந்தன்

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்?   பிள்ளை: காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? காக்கை: காணாத இடமெல்லாம் காணப் போனேன் கண்டு வந்த புதினங்கள் சொல்லக்கேளும் செட்டியார் வீட்டிலே கலியாணம் சிவனார் கோயில் விழாக்கோலம் மேரி வீட்டிலே கொண்டாட்டம் மீன் பிடித்துறையிலே சனக்கூட்டம் கண்டிப் பக்கம் குளிரோ கடுமை காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை பிள்ளை: அக்கா, அம்மா, அப்பா அவர்கள் சுகமா? காக்கை: பொங்கலன்று வருவாராம் புத்தகம் வாங்கி வருவாராம் பந்தும் வாங்கி வருவாராம் பாவை உமக்குத் தருவாராம் மிகவும் நல்லாய்ப் படியென்று கடிதம்…

துபாயில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவிட வேண்டுகோள்

துபாயில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவிட வேண்டுகோள் ! துபாய் :  மதுரை மாவட்டம் நத்தம் அருகேயுள்ள சிற்றூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் துபாயில் பொருளூர்தி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய்  செபல் அலி (Jebel Ali) பகுதியில் ஏற்படுத்திய  நேர்ச்சியின்(விபத்தின்)போது கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். இந்த  நேர்ச்சியை ஏற்படுத்தியதற்காக நூறாயிரம் திர்ஃகாம் மரணமடைந்தவரின் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த  நேர்ச்சியில் தொடர்புடையவருக்குக் காப்பீட்டு நிறுவனம் சில காரணங்களைக் கூறி இழப்பீடு வழங்க மறுத்து…

குற்றமற்றவர்களைக் கொல்லத் துடிக்கும் மனிதர்களை வரலாறு மன்னிக்கட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04

(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம்-03 தொடர்ச்சி) குற்றமற்றவர்களைக் கொல்லத் துடிக்கும் மனிதர்களை வரலாறு மன்னிக்கட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!)   உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது மட்டுமே, குறையற்றது எனக் கொள்ள முடியாது. இதை நான் சொல்லவில்லை. சொன்னால், இந்திய நீதி அமைப்பு முறையைக் குற்றவாளியெல்லாம் குறை சொல்லலாமா எனச் ‘சிலர்’ கூக்குரல் எழுப்பவர்.   இந்தக்…

அவளும் அப்படித்தான்! – பவித்திரா நந்தகுமார்

அவளும் அப்படித்தான்! அம்மா முத்தமிட தந்தை பாசமாய் வருடி விட தமையன் தங்காள் செல்லச் சண்டையிட பள்ளி சென்று வந்த நங்கைதான் இவள் அவளும் அப்படித்தான் சென்றாள் தமையன் வீடு வரவில்லை என ஏங்கியவள் தொடராகத் தங்கையவளை உயிரற்ற உடலாய் ஆடையின்றிக் கண்டவள் தகப்பனின் உயிர்த் துடிப்பை அறிந்தவள் அப்படித்தான் அவளும்  சென்றாள்  குடும்பம் எண்ணாமல்  தன் இனம் காக்க…. வெறுத்து விடவில்லை அவள் கடும் பயிற்சி கண்டு சோர்ந்து விடவில்லை அவள் இலட்சியக் கொள்கை ஆயுதம் கையில் எடுத்தாள் உடன் தோழிகளோடு மணக்கோலம்…

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை மேம்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை  மேம்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை –  மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்  மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் தற்பொழுது 440 ஆசிரியப் பயிலுநர்கள் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இந்த ஆசிரியப் பயிலுநர்கள் தங்குவதற்கான விடுதிகள்,  கற்றல் சூழல் முதுலியன பெரும் குறைபாடுகளுடன் காணப்படுகின்றன. இதனைக் குறுகிய காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்காகவும் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்காகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு  மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்  இதனைப் பார்வையிட்டார்.  இதன்போது பாராளுமன்ற உறுப்பினரான ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம், கல்வி…

யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ்மொழி நாள் விழா

யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ்மொழி நாள் விழா ஆனி 20, 2047 / சூலை 04, 2016 அன்று  முதன்மை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  தலைமை விருந்தினராக மாநிலக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராசா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்   துணைஅதிபர் த.நிமலன், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் சி.ரகுபதி, தமிழ்ச் சங்கத் தலைவர் விசாகனன், யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் மருத்துவர் (இ)யோகேசுவரன் உட்பட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் வருகை

  மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் அண்மையில்  வருகை புரிந்தார்.  அதுபோது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களுடன் பாடசாலையின்  மேம்பாடு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார். சத்தி சாயி பாடசாலையானது தேசியக் கல்வி முறையைப் பின்பற்றுகின்றது. இப்பாடசாலை இலங்கையில் காணப்படும் சத்திய சாயி பாபா பாடசாலைகளில் ஒரு  முதன்மைப் பாடசாலையாகக் காணப்படுகின்றது. இங்கு இருமொழி கற்கை நெறி நடைபெறுவதோடு  மேலதிகக் கல்விசார் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கின்றது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]