அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு

(அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 1/3 – தொடர்ச்சி) அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு: காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தின் பெயர் மாற்றம்:   இழப்பீட்டையும் நீதியையும் பெற்றுக் கொடுக்கும் மைய நிறுவனமாகக் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகம்(Office for Missing Persons – OMP) செயல்படும் என்று கூறப்பட்டாலும் கூட, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அது தொடர்பில் குழப்பங்களும், புரிதலின்மையும், நம்பிக்கையின்மையும், நிறைவின்மையும் (dissatisfaction) உண்டு.  ‘காணாமல் போன’ ஆட்களுக்கான அலுவலகம் என்கிற…

மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித்தேர்த்திருவிழா

  மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித் தேர்த் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய  சிற்றூர்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்  மன்பதை மேம்பாட்டு(சமுதாய அபிவிருத்தி) அமைச்சர் பழனி திகாம்பரம் மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  ரோகினி கவிரட்ன  முதலானவர்கள் கலந்துகொண்டனர்.

மலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த கோயம்புத்தூர் சுழற்கழகம்

மலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த கோயம்புத்தூர் சுழற்கழகம்.   நுவரெலியா  சுழற் கழகம் இந்தியாவின் கோயம்புத்தூர் சுழற்கழகத்துடன் இணைந்து இயற்கைப் பேரழிவால் அல்லது  நேர்ச்சிகளால்(விபத்துக்களால்) ஒரு பகுதி கைதுண்டிக்கப்பட்டவர்களுக்குச் செயற்கைக் கைகளை வழங்கியது.   இதன்போது ஆறு செயற்கைக் கைகளைக் கோயம்புத்தூர்  சுழற்கழகத்தின் செயலாளர்  செயகாந்தன், நுவரெலியா  சுழற்கழகத் தலைவர் உசித பண்டாரவிடம் கையளித்தார். பயனாளிகளுக்குக் கைகள் வழங்கப்படுவதையும்  நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் வின்சண்டு அசோகனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிங்களப் படையே வெளியேறு!

 வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று வலியுறுத்தி வடக்கிலுள்ள மாவட்டங்களின் இளைஞர்கள்,  இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நேற்று நகரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள கலை மண்டபத்தில் தங்கியுள்ள படையினருக்கு எதிராக இன்று முற்பகல் 9 மணிக்கு இந்தப் போராட்டம்  தொடங்கப்பட்டது. அங்கிருந்து இந்தப் போராட்டம் ஓமந்தை, திருவையாறு, பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி, இயக்கச்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வழியாகக் காங்கேசன்துறையைச் சென்றடைந்தது.  பேருந்தில் பயணித்த போராட்டக்காரர்கள் ஒவ்வோர் இடத்திலுமுள்ள படைமுகாம்களுக்கு முன்னாலும் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….

யாழ்.பல்கலையில் இனவெறி மோதலைத் தூண்டும் சிங்கள அரசு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் மோதலைப் பயன்படுத்தி இனவெறியைத் தூண்டுவதைக் கண்டனம் செய்!   இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விழா ஒன்றின்பொழுது, மாணவர் குழுக்கள் இரண்டுக்கு இடையில் ஆடி 01, 2047 / சூலை 16, 2016 அன்று நடந்த மோதலை மிகைப்படுத்தி, தமிழர் எதிர்ப்பு இனவெறிச் சீற்றத்தைத் தூண்டி விடுவதற்கு, அரசின் பகுதியினரும் முன்னாள் அதிபர் மகிந்த இராசபக்சவைச் சூழ்ந்து கொண்டுள்ள இனவெறிக் கும்பலும் மேற்கொள்ளும் முயற்சிக்குப் பொதுவுடைமை நிகருரிமைக் கட்சியும் (சோசலிச சமத்துவக் கட்சி – சோ.ச.க.), குமுக நிகருரிமைக்கான (சமத்துவத்துக்கான)…

சிங்கள மயமாக்கப்படும் தமிழர் நிலங்கள்

    “முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான காணிகள் (ஏக்கர்கள்) நிலம் ஓசை இன்றிச் சிங்கள மயமாக்கப்பட்டபடி உள்ளன. இவற்றைக் கேள்வி கேட்க வேண்டிய அலுவலர்கள் எட்டியும் பார்ப்பதில்லை. தடுக்க வேண்டிய அரசியலாளர்கள் உருப்படியாக ஏதும் நிறைவேற்றுவதில்லை” எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.   127 சிற்றூர்(கிராம)ச் சேவகர்கள் பிரிவினையும், 1,15,024 பேரையும் உள்ளடக்கிய 5 மண்டல(பிரதேச)ச் செயலாளர் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டமானது 2614 சதுரப் புதுக்கல் (சதுரக் கிலோ மீற்றர்) பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் காணிகளுக்கும்(ஏக்கருக்கும்)   மேற்பட்ட நிலங்களை சிங்களம் விழுங்கி விட்டது.   இம்மாவட்டத்தின் தென் பகுதியில் இருந்து தமிழ் மக்களின்…

‘இடைத்தரகர்’ அமைப்புகள் விலகிக் கொள்ள வேண்டும்! – தேடு குடும்பம்

‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும்! இல்லையேல் அம்பலப்படுத்தப்படும்! தேடு குடும்பம் – கை.க.கா.ஆ.உ.தே.க.கு. – சங்கத் தலைவி எச்சரிக்கை!   இலங்கை அரசின் மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல், தடுத்து வைத்தல்’ நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குக் ‘கழுவாய் (பரிகார) நீதியும் – முறையான இழப்பீடுகளும்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, உண்மையாகவும் ஒப்படைப்பாகவும்(அர்ப்பணிப்பாகவும்) பணி செய்யும் செயல்பாட்டாளர்கள் யார்; காணாமல் ஆக்கப்பட்டோர் சிக்கலை வெளிநாட்டுத் தூதரகங்களிடமிருந்து நிதி பெறுவதற்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தி வரும் அமைப்புகள் எவை என்பதைக் கடந்த ஏழு ஆண்டுக் காலத்தில்…

பிறக்காத தமிழ்க் குழந்தைக்கு …. : க.சச்சிதானந்தன்

பிறக்காத தமிழ்க் குழந்தைக்கு   அளவிலாத காலமென்னும் அலையின் மீது அலைகளாய் அழிவிலாது தோன்ற நிற்கும் அமரனான பாலனே உரிமை கேட்டு உடைமை கோரி உலகமெங்கும் போற்றவே தருமமென்ற நெறியின் போரில் தமது மண்டை யுடையவே ஒழுகி வந்த இரத்த ஆற்றில் உதய மாகிக் கன்னியர் பழகு பாடற் கருவிலாகும் பாலனே என் செல்வமே கட்டு மீறி உரிமை நாதக் கனல் பிறக்கும் குரலிலும் சொட்டு கின்ற வியர்வை மீதும் தோன்று கின்ற பாலனே மனது தோறும் எழுதி வைத்த மான மென்னும் முத்திரை…

இலண்டனில் 33ஆம் ஆண்டு கருப்பு யூலை நினைவு நாள்

  பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் எதிர்வரும்  ஆடி 10. 2047 / சூலை மாதம் 25  ஆம்  நாள் அன்று இலண்டனில் 33ஆம் ஆண்டு கருப்பு  யூலை நினைவு  நாள் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.   இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்பில் எதுவித  நிலையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது   பன்னாட்டுக் குமுகாயம் தொடர்ச்சியாகப் பல தவறுகளை மேற்கொண்டு வருகின்றது.  குறிப்பாக, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1956, 1958, 1977, 1983ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படட இன அழிப்பு தொடர்பில்  பன்னாட்டுக் குமுகாயத்தின்…

கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 2/2 – ஈழத்து நிலவன்

(கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2  தொடர்ச்சி) கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 2/2    தனது நாட்டில் சிறுபான்மைத் தேசிய இனங்களை அடக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவும் எனச் சிலர் இன்னும் கூறி வருகிறார்கள். இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசு, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று கூறுபவர்களை என்னவென்று அழைப்பது! மாயமானைக் காட்டி, ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தைத் திசை திருப்புவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்! உலக நாடுகளைச்…

களுப்பான தோட்டப் பாடசாலைக்கு அமைச்சர் இராதாகிருட்டிணன் வருகை

களுப்பான தோட்டப் பாடசாலைக்கு அமைச்சர் இராதாகிருட்டிணன் வருகை   கேகாலை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கும்  பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல்  துணைக்கருவிகளை கையளிப்பதற்கும்   மாநிலக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்  பள்ளிக்கு வருகை புரிந்தார்.  யாழ்ப்பானம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின்  இலண்டன் வாழ் பழைய மாணவர்களின் “ஏணி” தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர் க.குமணன,; எம்.மரியதாசு, கோலை மாவட்ட ம.ம.மு அமைப்பாளர்  செகநாதான் மாகாண  அவை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள்,…