பொங்கல் விழாக்கள் – சில நெருடல்கள் : வி. சபேசன்

பொங்கல் விழாக்கள் – சில நெருடல்கள்   இம் முறை புலம்பெயர் நாடுகளில் பொங்கல் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இந்தக் கொண்டாட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.   தமிழர்களிடம் எஞ்சியுள்ள தமிழர் திருநாளான பொங்கலுக்கு விழா எடுத்துக் கொண்டாடியவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.   ஆயினும் சில செய்திகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். அடுத்த ஆண்டு பொங்கலை இன்னும் சிறப்பாக, ஒரு தமிழர் திருநாள் விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காகச் சிலவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.   பொங்கல் விழா என்பது தமிழர்…

சீன வானொலித்தமிழ்ப்பிரிவின் 26-ஆவது கருத்தரங்கம்

தை 17, 2047 / சனவரி 31, 2016 காலை 10.00 முதல் மாலை 4.00 வரை சென்னை இதழியல்-தொடர்பியல்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு- புதுச்சேரி தொடர்பியல் ஆசிரியர்கள் பேரவை  அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றம்

ஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்? – ப.மு.அன்வர்

ஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்? ஓசைக் கிளர்ச்சியினால்             உருண்டுவரும் உலகத்தில் ஆசைக் கிளர்ச்சியினால்             அமைவதுதான் உயிர் வாழ்க்கை ஆசைக் கிளர்ச்சி             அடர்ந்தெரியும் நேரத்தும் ஓசையின்றி வாழ்ந்த             ஒருகாலம் குகைக்காலம் ஊழித்தொடக்கத்தில்             ஊமையரின் கூட்டத்தில் பாழைப் பதுக்கியவன்,             பயிலுமொழி பகர்ந்தவன்யார்? அவிழ்ந்தவாய் அசைவில்             அகரம் பிறந்துவர உவந்தொலிகள் ஒவ்வொன்றாய்             ஒலித்துவரக் கற்றவன்யார்? ஒலியலைகள் ஒவ்வொன்றாய்             எழும்பி ஒருங்கிணைந்து தெளிவான சொல்லமையக்             கண்டு தெளிந்தவன்யார்? குறில்நெடிலின் வேற்றுமையைக்             குறித்தறிந்து முதன்முதலில் அறிவறியும்…

வட்டுக்கோட்டை இளைஞர்கள் இல்ல மாணாக்கர்களுக்கு உதவி

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு 50 உடைப்பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இனிய வாழ்வு இல்லத்தின் நிருவாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இல்ல மாற்றுத்திறனாளி மாணவர்களான விழிப்புலனற்றோர், செவிப்புலனற்றோர் வாய்பேச முடியாதவர்கள் என 50 இல்லச் சிறார்களுக்கு உரூபா 65000 பெறுமதியான 50 உடைப்பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கபட்டன. அத்துடன் இல்லச் சிறார்களுக்கு சிறப்பு நண்பகல் உணவும் வழங்கபட்டது. [படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப்பார்க்கவும்!]

கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில் நூல் வெளியிட்டு விழா

  வணக்கம். எதிர்வரும் தை 07, 2047 / 21-1-2016 மாலை, 6.30 மணிக்கு, கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில், அறிஞர் மா.சோ.விக்டர் அவர்களின் “பண்டைய தமிழரின் நில மேலாண்மை” என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது.. அனைவரும் அன்புடன் வருக! தொடர்புக்கு.: செயகோபி 019-3307252., மரு. ஆனந்தஇராசன் 019-2256402. நன்றி  ஆனந்தஇராசன்

சப்பானில் சல்லிக்கட்டை வலியுறுத்தி மாபெரும் ஓவியப்போட்டி!

சல்லிக்கட்டை வலியுறுத்தி சப்பானில் மாபெரும் ஓவியப்போட்டி. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்துகள்!! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு மாசி 01, 2047 / பிப்பிரவரி 13ஆம் நாள் நடைபெறவிருக்கும் நமது பொங்கல்விழாவை முன்னிட்டுச் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வருடம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்குமாகச் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் நடத்தப்படவுள்ளது. நடைபெறும் இடங்கள்: 1.கொஅனா இன்டர்நேசுனல்,கவாசாகி [Kohana International school,Kawasaki] 2.சேய்சின்சோ சமூக கூடம், நிசிகசாய் [Seishinchou community…

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா 2047 / 2016

  அனைவருக்கும் அன்புகலந்த இனிய வணக்கங்கள்! மார்கழிக்குளிரை வென்று தத்தம் மனைகளின் முற்றத்தில் மாக்கோலமதனைத் தீட்டி பசுஞ்சாணப் பிடியதனில் பரங்கிப்பூச் சொருகி வைத்து ஆதவன்தன் வடதிசை பயணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த களைப்பு நீங்க காளைகளை அடக்கி ஆளும் தமிழ்க் காளைகளின் வீரம் பொங்க சீர்கொண்டு வந்திறங்கும் சுறவமகளை வரவேற்று வயற்தாயின் வயிற்றில் விளைந்த நெல்மணி முத்துகள் திரட்டி புத்தரிசிப் பொங்கலிட்டுப் பொங்கலோ!பொங்கல்!! எனத் தீந்தமிழ் மாதரும் தோள்கள் தினவெடுத்த தமிழரும் குதூகலமாய்க் குடும்பத்துடன் தொன்றுதொட்டு தரணிதனில் திகட்டாமல் கொண்டாடி மகிழ வாய்த்ததொரு நன்னாளாம்!-நம்…

நம்வாழ்வு விடிந்திடட்டும் ! – எம்.செயராமன்

      வெள்ளம்  வடிந்தோட வேதனையும் விரைந்தோட உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும் நல்லவை நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும் ! இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல் முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை வாழ்த்திநின்று அயற்சிதனை விட்டெறிந்து அனைவருமே அணைந்துநின்று உயற்சிதர வேண்டுமென்று உளமாரப் பொங்கிநிற்போம் ! நீர்பெருகி நின்றதனால் நீரருந்த முடியாமல் ஊர்மக்கள் யாவருமே உயிர்துடித்து நின்றார்கள் நீர்வற்றிப் போனாலும் நிம்மதியைத் தேடுமவர் சீர்பெற்று வாழ்வதற்கு இப்பொங்கல் உதவிடட்டும் ! மார்கழி மாதமது மனங்குளிர வைத்தாலும் மாமழையும் பேரழிவும் மனம்வருந்தச் செய்ததுவே…

தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்- சுபாசினி திரெம்மல் உரை

செருமனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசு பள்ளிகளே! தங்க நகையே அணியாத நாடு செருமன்! வாழ்க்கையில் கல்விதான் நண்பன்!   “வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்” எனச் செருமனியிலிருந்து வந்திருந்த பெண் ஆராய்ச்சியாளர் சுபாசினி திரெம்மல் பேசினார்.   தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.   விழாவில் செருமனி தமிழ் மரபு அறக் கட்டளைச் செயலரும், கல்வெட்டு…

பொங்கல் விழா 2047 / 2016, கனடா

  தை 03, 2047 / சனவரி 17, 2016 காலை 10.00 முதல்  பிற்பகல் 02.00 வரை   கனடிய மண்ணில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளுள் சிலவான கனடியத் தமிழர் தேசிய அவை, அறிவகம், ஆகிய அமைப்புகளோடு இணைந்து கனடியத் தமிழ் வானொலியும் சேர்ந்து தமிழர் மரபுரிமைத் திருவிழாவாம் தைப் பொங்கல் விழாவை இளம் தமிழர் மனத்தில், தமிழர்நாள் நினைவுகள் தித்திக்கும் வண்ணங்களாகப் பதியும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்த்த உள்ளார்கள். அனைவரும் இந்நிகழ்வுக்கு வருக என அன்போடு அழைக்கின்றார்கள்,…

சிராங்கூன் : பொங்கல் கொண்டாட்டங்கள்

ஒளியூட்டு விழா : மார்கழி 23, 2046 / சனவரி 08, 2016 பொங்கல் கொண்டாட்டங்கள்: மார்கழி 24, 2046 / சனவரி 09, 2016  முதல் தை 03, 2047 / சனவரி 17, 2016 முடிய