தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்- சுபாசினி திரெம்மல் உரை

செருமனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசு பள்ளிகளே! தங்க நகையே அணியாத நாடு செருமன்! வாழ்க்கையில் கல்விதான் நண்பன்!   “வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்” எனச் செருமனியிலிருந்து வந்திருந்த பெண் ஆராய்ச்சியாளர் சுபாசினி திரெம்மல் பேசினார்.   தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.   விழாவில் செருமனி தமிழ் மரபு அறக் கட்டளைச் செயலரும், கல்வெட்டு…

பொங்கல் விழா 2047 / 2016, கனடா

  தை 03, 2047 / சனவரி 17, 2016 காலை 10.00 முதல்  பிற்பகல் 02.00 வரை   கனடிய மண்ணில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளுள் சிலவான கனடியத் தமிழர் தேசிய அவை, அறிவகம், ஆகிய அமைப்புகளோடு இணைந்து கனடியத் தமிழ் வானொலியும் சேர்ந்து தமிழர் மரபுரிமைத் திருவிழாவாம் தைப் பொங்கல் விழாவை இளம் தமிழர் மனத்தில், தமிழர்நாள் நினைவுகள் தித்திக்கும் வண்ணங்களாகப் பதியும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்த்த உள்ளார்கள். அனைவரும் இந்நிகழ்வுக்கு வருக என அன்போடு அழைக்கின்றார்கள்,…

சிராங்கூன் : பொங்கல் கொண்டாட்டங்கள்

ஒளியூட்டு விழா : மார்கழி 23, 2046 / சனவரி 08, 2016 பொங்கல் கொண்டாட்டங்கள்: மார்கழி 24, 2046 / சனவரி 09, 2016  முதல் தை 03, 2047 / சனவரி 17, 2016 முடிய  

திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம், காரைக்குடி

மார்கழி 22 – 24,  2046 / சனவரி 07 – 09, 2016 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி சிரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை உலகத் திருக்குறள்பேரவை, குன்றக்குடி புதுநூற்றாண்டு புத்தகநிலையம் (என்.சி.பி.எச்சு.), சென்னை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், புதுக்கோட்டை மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம், மலேசியா சாமியா அறநிறுவனம், சிங்கப்பூர்

தமிழர் திருநாள் 2016 பொங்கல் பெருவிழா,பிரித்தன்

தமிழர் திருநாள் 2016 – பொங்கல் பெருவிழா பிரித்தானியாவில்   தமிழர் திருநாள் 2016 / பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத் நினைவில் நிறுத்தும் வகையில் பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா 23.01.2016 அன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் [ Shree Kutch leva patel community, West end Road, Northolt Ub5 6re என்ற முகவரியில்]  நடை பெற உள்ளது. இவ் நிகழ்வில் தமிழ் வணிகர்களாகிய நீங்கள் உங்களுடைய…

அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு

அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வோர் ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா சனவரி 29  ஆம் நாள் தொடங்கி  பிப்பிரவாி 7  ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களை அனுப்பி வைத்தால், அவை தனி அரங்கில் வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும். வெளிநாட்டு வாழ் தமிழ் படைப்பாளிகள் குறித்து வாசகா்கள்…

சார்சாவில் பல் மருத்துவ இலவச முகாம்

சார்சா (உ)ரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்துறை மருத்துவக்கூடத்தில் இலவச பல் மருத்துவ முகாம் சனவரி இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த   மருத்துவர் சிராசுதீன்  பற்களுக்குத் தேவையான அனைத்து விதமான  மருத்துவம்  குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர் 06 – 5685 022 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   – முதுவை இதாயத்து

இலாத்துவிய மொழியில் திருக்குறள்!

இலாத்துவிய மொழியில் திருக்குறள்   காதில் கம்மல், கழுத்தில் ‘ஓம்’ பதக்கத்துடன்மறையாடை(sudithar) உடன், ‘‘ நான் தமிழ் நாட்டை நேசிக்கிறேன்’’ என்றபடியே வரவேற்கிறார் ஆசுட்டிரா! (https://www.facebook.com/astra.santhirasegaram).   இலாத்துவிய நாட்டிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மருமகள். தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் கொண்ட காதலால், இப்போது திருக்குறளை இலாட்விய மொழியில் மொழிபெயர்த்து வருகிறார் இவர். உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட திருக்குறள், இலாட்விய மொழிக்குப் போவது இதுதான் முதல்முறை!   ‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இலாத்துவியாவில்! இரசியாவுக்குப் பக்கத்தில் இருக்கிற…

ஓம்தமிழ் கலைச்சொல் செயலி

  புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஆங்கிலத்தின் ஆதிக்கமே அதிகமுள்ளதால் தமிழின் பயன்பாடு அருகி வருகின்றது. இந்நிலையை மாற்ற கலைச் சொல்லாக்கம் இன்றியமையாததாகின்றது. இச்செயலியின் நோக்கம் கலைச்சொற்களை தொகுத்துத் தமிழின் பயன்பாடை அதிகரிப்பதுதான். புதிய கலைச்சொற்களை ஒன்றிணைத்து அடுத்த பிறங்கடையினரின் தமிழ் வழிக் கல்விக்கு உதவும் வகையில் இச்செயலியை உருவாக்கியுள்ளோம்.   முதற்கட்டமாக இணையத்தில் காணப்படும் கலைச் சொற்களை தொகுத்து இச்சேவைக்கு வித்திட்டுள்ளோம். ஆண்டிராய்டு திறன்பேசியில் நிறுவ https://play.google.com/store/apps/details… ஓம்தமிழ் தரவு:  முகிலன் முருகன்