(சிங்கப்பூர்) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் – சூலை 7-9

(சிங்கப்பூர்) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் – சூலை 7-9 உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்(IATR) சிங்கப்பூரில் நடத்த இருந்த 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் வரும் ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08 & 09.2023 செம்மணஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெறும். சென்னையில் நடைபெறுவதால் கூடுதலாகக் கட்டுரையாளர்களைத் தெரிவு செய்கின்றனர். கட்டுரையாளர்களுக்கு அனுப்பப்பெறும் அழைப்பு மடல்கள் வரும் திங்கள் இரவிற்குsள் அனுப்பப்படடு விடும் என இவ்வமைப்பின் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ தெரிவிததார்….

மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்! இந்தி எதிர்ப்புப் போராட்டம்போல் நாம் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளோம். இந்தி, சமற்கிருதத் திணிப்புகள் தமிழைக் குற்றுயிரும் குறையுயிருமாகச் சிதைத்து வருகின்றன. அவற்றிற்குச் சிறிதும் குறைவி்லாத வகையில் ஆங்கிலத் திணிப்பு நம் தமிழை அழித்துக் கொண்டு வருகிறது. தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் பிற மொழிச்சொல் இடம் பெற்றது என்றால், அந்தத் தமிழ்ச்சொல் வாழ்விழந்து விடுகிறது. மு.க.தாலின் அரசு, அரசுப் பணியிடங்களில் தமிழ் தகுதித்தேர்வு கட்டாயம், அயலகத் தமிழர் நலன் – மறுவாழ்வுத் துறை…

புத்தகக் கண்காட்சியில் என்னூல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

சென்னையில் நடைபெறும் 46ஆவது புத்தகக் கண்காட்சியில் களம் – அரங்கு எண் 272 இல் என்னூல்கள் விற்பனைக்கு உள்ளன. தமிழார்வலர்களும் ஆய்வாளர்களும் சொல்லாகத்கதிலும் அறிவியல் தமிழிலும் ஈடுபாடு மிக்கவர்களும் தமிழன்பர்களும் வாங்கிப் பயனுற வேண்டுகிறோம். விவரம் வருமாறு:- பழந்தமிழ்(விலை உரூ 100.00) நான் பதிப்பித்துள்ள பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நூல். பல ஆண்டுகள் தமிழ் மாணாக்கர்களுக்குப் பாடமாக இருந்த நூல். மொழியின் சிறப்பு, மொழிகளும் மொழிக்குடும்பங்களும், பழந்தமிழ், மொழி மாற்றங்கள், பழந்தமிழ்ப்புதல்விகள், பழந்தமிழ் இலக்கியம், பழந்தமிழ் நிலை, பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள், பழந்தமிழ்ச் சொல்லமைப்பு,பழந்தமிழும்…

பழனி- குடமுழுக்கைத் தமிழில் நடத்த அரசு மறுப்பதேன்?

பழனி முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு மறுப்பதேன்? சனவரி 20இல் பழனியில் மாபெரும் உண்ணாப் போராட்டம்! இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை சந்தித்தப் பிறகு தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு! பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு வரும் தி.பி. 2054 தை 13 (27.01.2023) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தமிழ்க் குமரன் திருக்கோயில் பழனி குடமுழுக்கை கருவறை – வேள்விச்சாலை – கலசம் வரை திருநெறிய தமிழ் மந்திரங்களை அருச்சித்துச் சிறப்பாக நடத்திடக் கோரிக்கை வைத்து,…

குவிகம் சிறுகதைப் போட்டி

முதல் பரிசு உரு. 5000/ இரண்டாம் பரிசு உரூ. 3000/ மூன்றாம் பரிசு உரூ. 2000/ கதைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 15.12.2022 கதைகள் 700 முதல் 1200 சொற்களில் இருக்க வேண்டும். magazinekuvikam@gmail.com மின்வரிக்குச் சொற்கோப்பாக அனுப்ப வேண்டும். தொடர்பிற்கு – 97910 69435 / பகிரி 944 2525 191 இதழில் வெளியிடப்படும் பிற கதை ஒவ்வொன்றிற்கும் உரூ. 1000/ வழங்கப் பெறும்.

பிரபாகரன் பிறந்த நாள் பேச்சுப் போட்டி

விடுதலைப் பேரொளி பிரபாகரன் 68ஆவது பிறந்த நாளையொட்டிச் சென்னை மாநகர அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டி! முதல் பரிசு: உரூ.50,000/- இரண்டாம் பரிசு: உரூ.25,000/- மூன்றாம் பரிசு:உ ரூ.10,000/- மேலும் 5 ஆறுதல் பரிசுகள் நாள்: 26.11.2022 மாநகர் சென்னையில் மறத்தமிழ் வளர்க்கும் மாணவர் – மாணாக்கியருக்கு அன்பு வணக்கம்! பிரபாகரன் என்பது பெயர் மட்டுமில்லை. அது விடுதலையின் முகவரி. அச்சமின்மையின் அக வரி. பிரபாகரன். ஆவேசம் பொங்க உரையாற்றுகிற பேச்சாளரில்லை. அரிதினும் அரிதான அவரது உரைகளில் சொல்மாயங்கள் இருந்ததில்லை. ஆனால், அவரது சொற்கள்…

‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள்

ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டி முடிவுகள் வருமாறு: முதல் பரிசு: முனைவர் தாமரை, திருச்சி இரண்டாம் பரிசு: முனைவர் தானப்பன், புதுதில்லி மூன்றாம் பரிசு:  முனைவர் வதிலை பிரதாபன் முதல் பரிசிற்கான உரூ. 5,000 / தொகையில் கட்டுரையில் சில பிறமொழிச்சொற்கள் இடம் பெற்றிருந்தமையால்,  உரூ 2,000/  பிடிக்கப்பட்டு இருவருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்படுகின்றன….

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி உலக அளவில், வலையொளி வழியாக தமிழ், தமிழர், தமிழ்நாடு, பொதுவுடைமை, சாதி-சமய மறுப்பு, சமூக – பொருளாதார விடுதலை, குமுகாய மறுமலர்ச்சி ஆகிய தளங்களில் தமிழ்க்குடி விழிக்கப் பாடிய வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகளை முன்னிறுத்தி இளையோருக்கான புலமைப்பரிசில் திட்டமொன்றை கவிஞரின் 103ஆம் வெள்ளணி நாளான 07.10.2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் அறிவித்தது. வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் 2022 அறிவிப்பை இங்கே காணலாம் இதனொரு பகுதியாக ‘முடியரச முழக்கம்’ எனும் தலைப்பில் வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகள் மீதான…

உலகத்தமிழாராய்ச்சிமாநாடு, புதிய கால அட்டவணை

செய்தி மடல் – Newsletter     மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு, வணக்கம். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணையைத் தங்களுடன் பகிர்கின்றோம். இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ள அறிஞர்களின் ஆர்வத்தையும் வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு ஆய்வுப் பணிகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கால அட்டவணை பின்வருமாறு 1. ஆய்வுச் சுருக்கம் வந்தடைய வேண்டிய தேதி: 15.நவம்பர்.2022.2. ஆய்வுச் சுருக்கம் பற்றிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 30.நவம்பர்.2022.3. முழு ஆய்வுக் கட்டுரை வந்தடைய…

1965 மொழிப்போர் வீரர் – இலக்கியப் படைப்பாளி தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு! – பெ. மணியரசன் இரங்கல்!

1965 மொழிப்போர் வீரர் – இலக்கியப் படைப்பாளி தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்! மிகச் சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த்தேசியருமான தோழர் பா. செயப்பிரகாசம் அவர்கள் இன்று (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திக்குளத்தில் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்ற செய்தி சொல்லொணா வேதனையை உண்டாக்குகிறது. ஆதிக்க இந்தியை எதிர்த்து 1965இல் நடந்த மாபெரும் மாணவர் போராட்டத்தின் தள நாயகர்களில் ஒருவர் தோழர் பா. செயப்பிரகாசம். அப்போது மதுரையில் தியாகராசர் கல்லூரியில்…

தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கை- தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் பரிந்துரைகள்

தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கை தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் பரிந்துரைகள். “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பது ஐயன் திருவள்ளுவரின் கூற்று. ஒரு சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சியே அச்சமூகத்தின் வளமையின் அளவீடு. அறிவு பெறும் வாயில் கல்வி. “கல்வி சிறந்த தமிழ் நாடு” எனும் சிறப்புக்குரிய தமிழ் நாட்டுக்கென, தமிழ் நாட்டரசு, தனித்த ஒரு கல்விக் கொள்கையை. உருவாக்கி வெளியிடுவது சிறப்புக்கு உரியது மட்டுமல்ல, தேவையுமாகும். தமிழ் நாட்டின் கல்விக் கொள்கைக்கென, தாய்த்தமிழ், தமிழ்வழிப் பள்ளிகளின் அமைப்பான, தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் சார்பில் பின்வரும்…