பா.ம.க. மாநில மாநாடு 27- ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு: இராமதாசு

வண்டலூரில் நாளை நடைபெற இருந்த பா.ம.க. மாநில மாநாடு 27- ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு: இராமதாசு அறிவிப்பு பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-     தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பா.ம.க. மாநில மாநாடு 14-ஆம் நாள் சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இம்மாநாட்டை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் மாநாட்டுக்கு உயர்நீதுிமன்றம் அளித்த இசைவை எதிர்த்து உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் அ.தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்தது….

தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றுக! – கி. வெங்கட்ராமன்

    தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை  இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி – நிறைவேற்றுக! தமிழக உழவர் முன்னணி அறிவுரைஞர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!  கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில், மாசி02, 2047/12.02.2016  காலை, செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழக உழவர் முன்னணி அறிவுரைஞர்தோழர் கி. வெங்கட்ராமன், வரும் பிப்பிரவரி இறுதியில்  தமிழ்நாடுஅரசுஅளிக்கவுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில், தென்பெண்ணைக்கிளைவாய்க்கால் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கி, அத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட அறிக்கை:…

பழந்தமிழர் கணிதம் தேடுவோம் வாரீர்! – அழைக்கிறார் தமிழ்த் தொண்டர் பொள்ளாச்சி நசன்!

தமிழர் கணக்கியல் – பழந்தமிழர் கணிதம். தேடுவோம் வாரீர்!   தமிழ் எண் உருக்கள்தாம் கடல் கடந்து சென்று தேய்ந்து, உருமாறி நாம் இப்பொழுது பயன்படுத்துகிற எண்களாக மாறி நம்மை அடைந்துள்ளன. ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள்தாம் முதலில் காணப்பட்டன. சுழியம், தொன்பது என்பவை தொடர்ச்சிக்காக இணைக்கப்பட்டவை. தமிழர் கற்றிருந்த ௬௪ (64) கலைகளிலும் இந்த எண்ணுருக்களின் அடிப்படை அமைந்திருக்கலாம். ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்பதன் வழி எண்ணுக்கான நூல்கள் நிறைய இருந்திருக்கலாம். அவை அனைத்தும் இப்பொழுது இல்லை. கணக்கதிகாரம்…

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி  மொத்தப் பரிசு உருவா 1050.00 கடைசிநாள்  மாசி 08, 2047 / 20.2.2016 சிறுவர் பாடிமகிழ்வதற்கேற்ற 12வரிப்பாடல்கள் 5 எழுதி அனுப்ப வேண்டும்! முதற்பரிசு உருவா 300.00 இரண்டாம் பரிசு உருவா200.00 மூன்றாம் பரிசு உருவா150 ஆறுதல் பரிசுகள் உருவா100.00 நான்கு பேர்களுக்கு. நெறிமுறைகள்: 1.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச்சொற்கள் கலவாத தனித்தமிழ்ப் பாடல்கள் இயற்றப்பட வேண்டும் 3.பாடல்கள் மதநம்பிக்கை தவிர்த்த எப்பொருளிலும் இயற்றப்படலாம். 4.பாடல்களின் 2 படிகள் கட்டாயம் அனுப்பப்பெற வேண்டும். ஒருபடியில்…

கம்பன் கழகம், காரைக்குடி போட்டி முடிவு விவரம்

கம்பன் கழகம், காரைக்குடி    தை 17, 2047 / 31-1-2016 ஆம் நாள் காரைக்குடி கம்பன் கழகத்தின்அனைத்துக் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளும், பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிகளும் காரைக்குடி கிருட்டிணா கல்யாண மண்டபத்தில்  நடைபெற்றன. 28 கல்லூரி மாணாக்கர்களும், 60 பள்ளி மாணாக்கர்களும் பங்கேற்றுக், கீழ்க் குறிப்பிடுவோர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மு.சாசகான் கம்பராமாயணத்தில் முதற் பரிசினையும் (உரூ 3.500), திருக்குறளில் இரண்டாம் பரிசினையும் (உரூ 1,000) வென்றார். அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி…

மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்! – செந்தமிழன் மணியரசன்

மாசி 02, 2047 / பிப்.14, 2016 காலை 10.00 சென்னை மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்!  வேளாண்மை, வீடு கட்டுதல், மருத்துவம் ஆகிய அடிப்படைச் செயல்பாடுகளை மரபுவழியில் மேற்கொள்ளத் தேவையான பயிற்சிகளைத் தொடங்குகிறோம். இம்மூன்று துறைகளுக்குமான பாடத் திட்டம் இதுதான். மரபு வேளாண்மை: பாடம் 1 • இயற்கையியல் எனும் அடித்தளத்தை அறிந்துகொள்ளுதல்: புவியின் உயிர் வகைகள் – தாவரங்களின் இயல்புகள் – மனிதர்களும் தாவரங்களும் – காடுகளும் மனித வாழ்வும் – தாவரங்களும் கூட்டு உயிரிகளின் இயல்புகளும் பாடம் 2 • ஐம்பூதக்…

உலகத் தமிழர்களுக்கான விலைமதிப்பில்லாச் சிறப்பு நாள்காட்டி – விலையில்லை!

அன்பு உறவுகளே !    வணக்கம். நீங்கள் இதுவரை  கண்டிராத, நீங்கள்  சற்றும்  எதிர்பாராத ஓர் அழகிய நாள்காட்டி,  உலகத் தமிழர் நாள்காட்டி. *பரப்புங்௧ள்!! *வாங்கிப்பயன் அடையுங்கள்!!! * எண்ணுக்குள் எண் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. (இப்படி வருவது உலகில் முதன் முறை.) * தனிக் கவனத்துடன் உருவாக்கப்பட்ட தனித்தமிழ் நாள்காட்டி. * நம்  மொழி காக்க, இனம் காக்க, மண் காக்கப் போராடியவர்களின் செய்திகளுடன், புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ அறிஞர்கள்,   நினைவெழுச்சி நாள்கள், சிறப்பு நாள்கள் என  அனைத்து விவரங்களும் உள்ளடங்கிய நாள்காட்டி . * உலக நாள்காட்டி வரலாற்றில்…

திருவள்ளுவர் நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் ?

 உலகத் தமிழர்களுக்கு அடையாளமாக விளங்கும் திருவள்ளுவருக்கு ஆண்டுதோறும் ஒரு நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழக அரசு இந்நாளை திருவள்ளுவர் நாளாக அறிவித்த போதிலும் இந்த நாளை உலகத் தமிழர்கள் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியைத் தமிழர்களிடைய அரசு கொண்டு செல்லவில்லை. தமிழ் அமைப்புகள் மட்டும் தங்களால் முடிந்தவரை சிறிய அளவில் இந்நாளில் நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இந்நாளில் அறியப்பட வேண்டிய திருவள்ளுவரின் புகழை இன்று தமிழர்களே அறியாத நிலை தான் இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையை நாம்தான் மாற்ற வேண்டும்….

நூலறிமுகம் – நான் முன்னுரைத்த முன்னுரைகள் (2 தொகுதிகள்)

நான் முன்னுரைத்த முன்னுரைகள் (2 தொகுதிகள்) ஆசிரியர்: ப.அருளி  வேரியம் பதிப்பகம்  ஒரு தொகுதி: உருவா 300 இரண்டு தொகுதிகள் : உருவா 500  பல்வேறு நூல்களிலும் இதழ்களிலுமாக அருளி அவர்களால் எழுதப்பெற்று வெளிவந்துள்ள முன்னுரைகளின் தொகை. உரை எழுதுவது முடிவெய்திய பிறகு, -அவ் உரை நூலைப் படிக்கப் புகுவதற்கும் முன்னர்… எதற்காக? என்ன பொருளில்? யாரால் இது ஆக்கம் பெற்றுள்ளது?… என்பவற்றுக்கான தொடக்கவாயில் ஒன்று, அடிப்படைத் தேவையாயுள்ளமை – அறிவுலகத்தின்கண் பரவலாக எழவே, நூலின் முகப்பாகிய வாயிலில் இவ்விளக்கப்பதிவினை முற்படுத்தும் வழக்கம் தோன்றித்…

அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு

அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வோர் ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா சனவரி 29  ஆம் நாள் தொடங்கி  பிப்பிரவாி 7  ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களை அனுப்பி வைத்தால், அவை தனி அரங்கில் வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும். வெளிநாட்டு வாழ் தமிழ் படைப்பாளிகள் குறித்து வாசகா்கள்…

சார்சாவில் பல் மருத்துவ இலவச முகாம்

சார்சா (உ)ரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்துறை மருத்துவக்கூடத்தில் இலவச பல் மருத்துவ முகாம் சனவரி இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த   மருத்துவர் சிராசுதீன்  பற்களுக்குத் தேவையான அனைத்து விதமான  மருத்துவம்  குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர் 06 – 5685 022 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   – முதுவை இதாயத்து

ஓம்தமிழ் கலைச்சொல் செயலி

  புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஆங்கிலத்தின் ஆதிக்கமே அதிகமுள்ளதால் தமிழின் பயன்பாடு அருகி வருகின்றது. இந்நிலையை மாற்ற கலைச் சொல்லாக்கம் இன்றியமையாததாகின்றது. இச்செயலியின் நோக்கம் கலைச்சொற்களை தொகுத்துத் தமிழின் பயன்பாடை அதிகரிப்பதுதான். புதிய கலைச்சொற்களை ஒன்றிணைத்து அடுத்த பிறங்கடையினரின் தமிழ் வழிக் கல்விக்கு உதவும் வகையில் இச்செயலியை உருவாக்கியுள்ளோம்.   முதற்கட்டமாக இணையத்தில் காணப்படும் கலைச் சொற்களை தொகுத்து இச்சேவைக்கு வித்திட்டுள்ளோம். ஆண்டிராய்டு திறன்பேசியில் நிறுவ https://play.google.com/store/apps/details… ஓம்தமிழ் தரவு:  முகிலன் முருகன்