பன்னாட்டு வேட்டி நாள் கருத்தரங்கம் – விண் தொலைக்காட்சி : பங்கேற்கிறேன்

இன்று மார்கழி 22,2045 / திசம்பர் 06, 2014 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் பன்னாட்டு வேட்டி நாளை முன்னிட்டு நடைபெறும் தமிழ்ப்பண்பாடு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com. மின்வரியில் இணையத்திலும் காணலாம்.   வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன்.   நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

சிறுகதைப் போட்டி – (உ)ரூபன் & யாழ்பாவாணன்

(உ)ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்… சிறுகதைகள் அளிக்க வேண்டிய இறுதி நாள் தை 17, 2046 / 31.01.2015   போட்டியின் நெறி முறைகள்: 1. கொடுக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பைத் தோ்வு செய்து அதற்கான சிறுகதையை 250-350 சொற்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். 2. 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். 3. போட்டிக்கான சிறுகதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களைத் தறவேற்றம் செய்யலாம்….

இணைய மாநாடு :ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான கடைசி நாள் நீட்டிப்பு

 ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான  கடைசி நாள் நீட்டிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது மாநாட்டில் பங்கு பெறுவதற்கான சுருக்கக் கட்டுரையை அனுப்பும் நாள் தை 1, 2046 /  15.01.2015 என நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கட்டுரையாளர்கள் தத்தம் கட்டுரையை அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றனர்.

துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம் :திருச்சி.

  திருச்சிராப்பள்ளி – தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி  தமிழாய்வுத்துறை தை 22, 23. 2046 – 2015 பிப்.5,6  துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம் இலங்கை, சிங்கப்பூர், மலேசியத் தமிழன்பர்கள் தங்களின் நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழ் பெற்ற வளர்ச்சியைக் கட்டுரையாக்கி வழங்கலாம். மற்ற ஆத்திரேலியா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் வளர்ச்சி பெற்றிருந்தால் கட்டுரையாக வழங்கலாம். கட்டுரை வழங்கி நேரில் வர இயலாதவர்கள் கருத்தரங்க நாளில் இந்திய நேரப்படி பகல் 1.30 முதல் 4.30 வரை இணையப்பேசி(skype_யில் உரையாற்றலாம். அதற்கான…

‘நவீனநொச்சி’ – படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

‘நவீனநொச்சி’ – இலக்கிய இதழுக்குப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன       வணக்கம். இருமாதக் கவிதை இதழான‘நவீனநொச்சி’ இது வரை பத்து (10) இதழ்கள் வெளிவந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்விதழின் முதன்மை நோக்கங்களில் ஒன்று மாணவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் உள்ள படைப்பாற்றல் திறத்தை வளர்த்தெடுப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும். அதனால் மாணவர்கள் ஆய்வாளர்கள் தம் படைப்புகளை ஒரே கட்டுக்குள் மின்னஞ்சலிலோ இதழின் முகவரிக்கோ அனுப்பலாம். பல்கலைக் கழகப் பேராசியர்களும் கல்லூரிப் பேராசியர்களும் இலக்கிய ஆர்வலர்களும் நவீனநொச்சி வாசகர்களும் அன்போடு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழர் திருநாளாகிய…

மொழி உரிமை ஆண்டு- ஈகியர் நினைவேந்தல்

ஈகியருக்கு நினைவேந்தலும் மொழி உரிமை ஆண்டாக 2015 ஐ கடைப்பிடித்தலும் மொழி உரிமைக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குதலும் வணக்கம், தமிழகத்தின் வரலாற்றை மாற்றிய 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு எதிர்வரும் 2015 ஆகும். இவ்வாண்டில் மொழிப்போர் ஈகியர் நாளான சனவரி 25, 2015 முதல் ஓராண்டுக்கு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப் போராளிகளின் நினைவை ஏந்துவதும் அந்தப் போராட்டத்தின் உயிர்ப்பிலிருந்து புதிய மொழி உரிமைப் போராட்டங்களை நடத்துவதும் காலத்தின் கட்டாயமாகிறது. இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கும் நரேந்திர மோடி அரசின்…

செம்மொழி இதழ், சிங்கப்பூர் : ஆவணி-புரட்டாசி 2045

அன்பிற்கினிய செம்மொழி வாசகர்களுக்கு வணக்கம். தமிழவேள் சமூக நற்பணி மன்றத்தின்சமூக இலக்கிய இதழான செம்மொழியை (சூலை-செப். 2014) உங்களுக்கு வாசிக்கத்தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். செம்மொழி இதழை www.semmozhi.net  இணையத்தள முகவரியிலும் வாசிக்கலாம். அன்புடன் எம்.இலியாசு ஆசிரியர், செம்மொழி செயலர், தமிழவேள் நற்பணி மன்றம் HP: 0065-91894649 sangam_elias@yahoo.com.sg 

தமிழ் உரிமை காக்க இலக்குவனார் வேண்டுகோள்!

  தமிழ் உரிமை காக்கப் பெருநடைப் பயணம் மேற்கொள்வது குறித்த இலக்குவனார் வேண்டுகோள்! கல்வித்துறையிலும் ஆட்சி, நீதி, கலைத் துறைகளிலும் தமிழ்உரிமையை நிலைநாட்டும் நல்லநோக்கத்துடன், அண்மையில் தமிழ் உரிமைப் பெருநடைச் செலவொன்றை மேற்கொள்ள இருக்கின்றோம். கல்லூரிகளில் உடனே தமிழைப் பாட மொழியாக ஆக்கவேண்டியதின் இன்றியமை யாமையை மக்களிடையே விளக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்க ளிடையே தமிழ்மூலம் படிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் பிறமொழிகள்மூலம் படிப்ப தனால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழைப் பாடமொழியாகக் கொண்டு படிக்க வருவோர் தொகையை மிகுதிப்படுத்த வேண்டும். உயர்நிலைப்…

14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015

  மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.   ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ஆம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். v இயல்மொழிப்…

புதியபார்வை – இலக்குவனார் சிறப்பிதழ்

  புதியபார்வை நவம்பர் 16-30 இதழ் இலக்குவனார் சிறப்பிதழாக வெளிவருகிறது. ஆசிரியர் : முனைவர் ம.நடராசன் அஞ்சல்பெட்டி எண் 1069 189, டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018 பேசி : 044 24997401 / 24980176 மின்வரி :puthiyaparvai@gmail.com வலைத்தளம் : www.puthiyaparvai.com