ஐ.நா.வில் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கத் தீர்மான நிறைவேற்றத்தால் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ   “இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்களப் பேரினச்சார்பு அரசை அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்பட்டு, அநீதிக்கு மகுடம் சூட்டப்பட்டு விட்டது. ஐ.நா-வின் வரலாற்றிலேயே ௨௦௧௫ (2015) அக்டோபர் ௧ (1) ஆம் நாள் களங்கத்தைச் சுமக்கும் கருப்பு நாளாகிவிட்டது.   ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டில் கொலைகாரச் சிங்கள…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 : அறிவிப்பு 3

பதிவு விவரம்   கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17 18 நாள்களில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெற உள்ள ‘தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கத்திற்கான பதிவு’ கணித்தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் (www.kanithamizh.in)   தொடங்கப்பட்டுள்ளது. பதிவுப்படிவம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம் தமிழ் வரிவடிவ வரலாற்றில் நடைபெறும் முதல் கருத்தரங்கு இது. இதில் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்களும், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களின் (IIT) வடிவமைப்புப் பிரிவுகளில் பணிபுரியும் பேராசிரியர்கள்,…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2 புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 – 2015 தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25. கருத்தரங்கம் பற்றி   ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியை எழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற கலையாகவும் தொழில்நுட்பமாகவும் விளங்குவது எழுத்துருவியல் ஆகும். எழுத்துருக்களை ஒழுங்கமைப்பது என்பது, எழுத்துருவின் வடிவங்கள், புள்ளிக் கணக்கில் அவற்றின் உருவளவு, வரியின் நீளம், வரிகளுக்கு இடையேயான…

தமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர்! விவரம் அனுப்புவீர்! – தமிழ்க்காப்புக்கழகம்

நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்! பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே! தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.   தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து…

பனுவல் வரலாற்றுப் பயணம் 4 : திருக்கோவிலூர்

பனுவல் வரலாற்றுப் பயணம் 4 : கீழ்வரும் திருக்கோவிலூர் சுற்றியுள்ள பகுதிகள் திருவெண்ணெய்நல்லூர் 2. கிராமம் 3.திருக்கோவிலூர் சண்பை(சம்பை) – விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இக்கல்வெட்டு உள்ள இடத்திற்குத் தாசிமடம் என்று பெயர். இது 198இல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. காலம்: பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டு (தோராயமானது ) மொழி: தமிழ் எழுத்து: தமிழி (சங்க காலத்தமிழ் எழுத்து) வழிகாட்டி : ஆய்வாளர் பேரா. பத்மாவதி, மங்கைஇராகவன் நாள் : புரட்டாசி 17, 2046 / அக்டோபர் 4,…

பெருங்கவிக்கோ, தங்கர் பச்சான் ஆகியோருக்கு – சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசுகள்

‘  தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டு தோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு  ‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ்அறிஞர் விருது’, ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன்  உரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசை ‘‘கலைமாமணி’’ தங்கர்பச்சான் பெறுகிறார்.  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு (உரூ.2 லட்சம்) இவருடைய ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்குவழங்கப்படுகிறது. புரட்டாசி 10,  2046 / செப். 27, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை…

காவிரி உரிமை மீட்புப் போராட்டம் – பனங்குடி

புரட்டாசி 11, 2046 – செப்டம்பர் 28, 2015 அன்பான தோழர்களுக்கு வணக்கம்!   தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் பயன்பட்டுத், தமிழர்களின் தேசிய ஆறாக விளங்குவது காவிரி ஆறாகும்.   அதன் உரிமையை மீட்பதற்கான போராட்டத்தில், சென்னை முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். ஏனெனில், வீராணம் ஏரியில் நிரப்பப்படும் காவிரி நீரே, சென்னைக்கு மிகப்பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது என்பதை நாம் மறந்துவிடலாகாது! காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் புரட்டாசி 11, 2046…

பன்னாட்டு நீதிப் பொறியமைவே தமிழர் கோரிக்கை! – வே.பாரதி

ஐநா மனித உரிமை மன்றம்: பன்னாட்டு நீதிப் பொறியமைவே தமிழர் கோரிக்கை! – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே.பாரதி அறிக்கை   ஐநா மனித உரிமை மன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா முன்மொழிந்து நிறைவேறிய தீர்மானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பன்னாட்டுப் புலனாய்வுக் குழு தன் அறிக்கையை 16.09.2015 ஆம் நாள் ஐநா மனித உரிமை மன்ற 30 ஆவது கூட்டத் தொடரில் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஐநா மனித உரிமை மன்ற ஆணையர்  செய்யது அல் உசைன் அவர்களின் அறிக்கையும் வெளிவந்துள்ளது….

உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்! – மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000!

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை” “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்” இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்! மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000! ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்! முதல் பரிசு உரூ.5,000 இரண்டாம் பரிசு உரூ.3,000 மூன்றாம் பரிசு உரூ.2,000 ஒவ்வொரு பரிசுடனும் “தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும் மதிப்புமிகு வெற்றிக் கேடயம்! இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000! வகை-(1): கணிணியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி: கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வக்…

‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047

 ‘காக்கைச் சிறகினிலே’ மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047   வணக்கம்!   நான் முகிலன் என்ற முகுந்தன். மறைந்த கவிஞர் கி.பி. அரவிந்தன் அவர்களுடைய நாற்பதாண்டு நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன் காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி.   பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத்…