சி.பா.ஆத்தித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகத்தின் நாட்டுப்புற வழக்காற்றுக் கருத்தரங்கம்

சி.பா.ஆத்தித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகத்தின் நாட்டுப்புற வழக்காற்றுக் கருத்தரங்கம் தமிழ் ஆய்வுலகின் நண்பர்களுக்கு, வணக்கம். சி.பா.ஆதித்தனார் இதழியல் கழகம் தற்போது சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் என்று மாற்றப்பட்டுள்ளது. ஆய்வுக் கழகத்தின் முதல் கருத்தரங்க நிகழ்வு “நாட்டுப்புற வழக்காறு – தற்காலத் தமிழிலக்கியங்களில் வட்டார வழக்கு” என்னும் பொருண்மையில் 2016 ஆகத்து இறுதி வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு கல்வி சார் அமைப்புகளுடன் இணைந்து இந்தக் கருத்தரங்கம் நடைபெறும். இடம், நாள் பின்னர் அறிவிக்கப்படும். இக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வழங்க விரும்புவோர் 1. பெயர்…

யாழ்ப்பாணம், புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவையகத்தின் விழாவும் நிகழ்வுகளும்

‘யாழ்ப்பாணம், புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவைஅகம்’ அமைப்பின் ‘தாயக நூலகத் திறப்பு விழா!’   புங்குடு தீவில் (பன்னிரண்டாம் வட்டாரத்தில்) சொக்கலிங்கம் மன்றம் தொடங்கப்பட்டுப் பதினான்காம் ஆண்டு நிறைவு விழாவையும் புங்குடு தீவு ‘தாயகம் குமுகச் (சமூக) சேவைஅகம்’ அமைப்பு தொடங்கப்பட்டு நான்காவது ஆண்டு நிறைவு விழாவையும் முன்னிட்டு ‘புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவையகம்’ அமைப்பினால், புங்குடு தீவு சிரீகணேசக் கல்விக்கூடத்துக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் ‘புங்குடுதீவு தாயகம் நூலகம்’ என்னும் பெயரில் நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது. மேற்படி விழா சித்திரை 17, 2047 /…

குவிகம் இலக்கிய வாசல் – முதலாமாண்டு நிறைவு விழா

 முதலாம் ஆண்டு நிறைவு விழா “இயல் இசை நாடகம்”   சித்திரை 10, 2047 ஏப்பிரல் 23, 2016  சனிக்கிழமை    மாலை 6.00 மணி    தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம் (அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்து ) காந்தி மண்டபம் சாலை, சென்னை 600025 இன்றைய தமிழ் இலக்கிய உலகின் சிகரங்கள் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். பள்ளி மாணவர்கள்  வழங்கும் இசையும் கவிதையும்  வில்லுப்பாட்டு நிகழ்ச்சி. நாடகம்  “மனித உறவுகள்”   திரு கோமல் சாமிநாதன் அவர்களின்…

வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம் – கருத்தரங்கு, இலண்டன்

வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம் – கருத்தரங்கு சித்திரை 11, 2047 (24.4.2016) ஞாயிறு காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை உயர்வாசல் குன்று முருகன் ஆலயம், 200-ஏ(A), வளைவுவழிச் சாலை, உயர்வாசல் குன்று, இலண்டன், என்6 5பிஏ. [200A, Archway Road, Highgate Hill, London, N6 5BA]. அண்மைச் சுரங்க வழி: உயர்வாசல் அல்லது வளைவுவழி. அன்புடையீர், வட மாகாணக் கல்வி வளர்ச்சி குறித்து மாநாடு ஒன்றினை நடத்த நாம் திட்டமிட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். இம்மாநாட்டில்…

கனடியத் தமிழ்மகளிர் மாமன்றம் – நூல் வெளியீட்டு விழா, சென்னை

  ‘மடுவின் மனத்தில் இமயம்’  நூல் வெளியீடு நூலாசிரியை : சரசுவதி அரிகிருட்டிணன் சித்திரை 10, 2047 / ஏப்பி்ரல் 23, 2016 மாலை 5.00

ஏழுதமிழர் விடுதலை : நூல் வெளியீடு- கருத்தரங்கம்- ஆவணப்படத் திரையிடல், சிதம்பரம்

  கைது செய்தவர் சொல்கிறார்…உசாவல்(விசாரணை) அதிகாரிகள் சொல்கிறார்கள்.. தீர்ப்பளித்த நீதிபதி சொல்கிறார்.. உண்மை அறியும் குழு, நீதிமன்றம் நியமித்த  செயின்ஆணையம் சொல்கின்றன, இவர்கள் ‘ குற்றமற்றவர்கள்(நிரபராதிகள்)’என்று! மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.. ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள்… நீதிபதிகள் சொல்கிறார்கள்.. மக்கள்நாயக  ஆற்றல்கள், அரசியல் கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் எல்லாரும் ஒரே குரலில் சொல்கிறார்கள், இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று! எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.. என்று திமிர்த்தனமாக இவர்களின் உயிர்பறிக்க துடிக்கிறது இந்தியா! காங்கிரசோ,  பா.ச.க.வோ கெசுரிவாலோ யாராயினும் ஏழுதமிழர் விடுதலை செய்யக்கூடாது என்னும் அவர்கள் நிலையில்…

இரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் – பவானி

சித்திரை 04, 2047 / 17.04.2016 ஞாயிறு & சித்திரை 05, 2047 / 18.04.2016, திங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்: தோப்பு துரைசாமி தோட்டம், காலிங்கராயன் அணைக்கட்டு , பவானி [இராயல்திரையரங்கம்  இரண்டாவது வீதி, கந்தன்  நெசவு(டெக்சு ) சாலை] திராவிடர் விடுதலைக் கழகம்

யாழிசை – நூலறிமுகம், தொரந்தோ

  கொழும்பு மகசீன் சிறையில் அரசியல் கைதியாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் சிவ. ஆருரன் எழுதிய “யாழிசை” என்ற குமுகாயப் புதினம்(சமூக நாவல்) கனடாவில் ஞாயிற்றுக் கிழமை  சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24 அன்று வெளியிடப்பட உள்ளது. இனத்தின் வலியைச் சுமந்து சிறையில் துன்புற்று வாழும் இந்த நூலாசிரியரின் சிறைக்குள் இருந்து மலரும் இசையாக இந்த யாழிசை கடல் கடந்தும் உலகத் தமிழ் உறவுகளின் உள்ளங்களைத் தொட வெளிவந்துள்ளது. சிறை வாழ்வில் இனி ஏது வாழ்வு என நொடிந்து துன்புறும் சிறை…

தொல்காப்பியத்தில் தமிழிசை – முனைவர் இராச.கலைவாணி

  அனைவருக்கும் வணக்கம். வரும்  சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24 இரவு 8:30 முதல் 9:30 வரை (கிழக்கு நேரம்) இலக்கியக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். அதோடு தங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வைப் பகிர்ந்து அவர்களும் பங்குபெற்றுப் பயனடையச்செய்யவும். சொற்பொழிவு:- “தொல்காப்பியத்தில் தமிழிசை”. வழங்குபவர்: முனைவர் இராச.கலைவாணி சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை Date:  Chithirai 11, 2047 April 24, Sunday at 8:30 pm ET நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை…

திருச்சிராப்பள்ளியில் திருக்குறள் திருவிழா

சித்திரை 18, 2017 /  மே 01, 2016 [பி.கு.  பல அழைப்பிதழ்களில் நாளும் இடமும் தெளிவாக இருப்பதில்லை. அழைப்பிதழைச் சற்றுப் பெரியதாக அடித்திருந்தால் விவரங்கள் தெளிவாக இருக்குமே!]

மூவமைப்புகளின் முப்பெருவிழா, வனக்குடில் கண்ணாடி மாளிகை (கள்ளக்குறிச்சி)

  கல்வராயன் மலைத்தொடர் வெள்ளிமலை  சித்திரை 08, 2047 / ஏப்பிரல் 21,2016 காலை 10-00 முதல் சித்திரை முழுநிலவு 7-00 மணி வரை. முதல் நிகழ்ச்சி : பாவேந்தர்- பட்டிமன்றம். நடுவர்: முனைவர் நா.இளங்கோ. தியாகதுருகம் தமிழ்ச்சங்கம் சங்கைத்தமிழ்ச்சங்கம்(சங்கராபுரம்) குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம்(புதுச்சேரி) நண்பர்கள் தோட்டம்

இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் 74, திருவாரூர்

சித்திரை 07, 2047 / ஏப்பிரல் 20,2016 மாலை 6.30 தலைமை : இல.சொ.சத்தியமூர்த்தி தலைமைக்குற்றவியல் நடுவர், திருவாரூர் இலக்கிய உரை இசையரங்கம் மாணவரரங்கம் எண்கண் சா.மணி இலக்கிய வளர்ச்சிக்கழகம்