15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 – ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் காந்தி ஊரகப்பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 மாநாட்டில் பங்கு பெற  ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15ஆவது) உலகத் தமிழ் இணைய மாநாடு ஆவணி 24,25&26, 2047 / 2016 செப். 9,10,11 ஆகிய நாள்களில் திண்டுக்கல் காந்தியூர் ஊரக (கிராமிய)ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள து  . 2016 மாநாட்டின் முதன்மைத் தலைப்பாகக்  “கணிணியெங்கும் தமிழ்! கணிணியெதிலும் தமிழ்!” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில்…

யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியல் கல்லூரி, முத்தமிழ் விழா 2016

வீரசங்கிலி முத்தமிழ்விழா மலர் வெளியீடு சித்திரை 24, 2047 / மே 07, 2016 காலை 8.30   தரவு; பாலசிங்கம் பாலகணேசன்

இலங்கை வேந்தன் கல்லூரியின் 5 நாள் இயல் இசை நாடக விழா புதன்கிழமை தொடங்கும்

இலங்கை வேந்தன் கல்லூரியின்  5 நாள் இயல் இசை நாடக விழா புதன்கிழமை  தொடங்கும்  யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியின் இயல் இசை நாடக விழா சித்திரை 21, 2017 / மே 04  புதன்கிழமை அன்று  தொடங்குகின்றது. தொடாந்து ஐந்து நாட்களுக்கு யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில் நீராவியடிப் பிள்ளையார் கோவிலை இணைக்கும் கல்லூரி வீதியில் உள்ள இந்த மண்டபத்தில் இடம்பெறவுள்ள கலைவிழா மூன்றாவது தடவையாக இடம்பெறுகின்றது. நுழைவு இலவசம் எனவும் யாழ். கலைஞர்களின் முயற்சிகளில் பங்கேற்று ஆதரவு நல்குமாறும் ஏற்பாட்டாளரான இலங்கை…

ஆறு தலைமுறையினரின்அரிய சந்திப்பு, தாகூர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை

சித்திரை 19, 2047 / மே 02, 2016 காலை 10.00 புதுச்சேரி  தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆறு தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் சந்திக்கும் அரிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.    கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் புதுச்சேரி அரசுக் கலைக் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றுகூடி இன்றைய இளம் தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்களோடு கலந்துரையாடும் நிகழ்வு இது.     இந்நிகழ்வில் ஆறு தலைமுறை ஆசிரிய மாணவப் பரம்பரைப் பேராசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு-  தலைமை:…

பாரதிதாசன் 125ஆம் பிறந்தநாள் விழா, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை இணைந்து நடத்தும் “பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டு பிறந்தநாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு” சித்திரை 11, 2047 / 27.04.2016 அன்று பல்கலைக்கழகப் பேரவைக்கூடத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ்மாமணி மன்னர்மன்னன், கலைமாமணி கோ.பாரதி, புலவர் செந்தலை ந.கவுதமன் கலந்து கொள்ள உள்ளனர்.

17ஆவது சைவ மாநாடு, இலண்டன்

 சித்திரை 17 , 2047  / ஏப்பிரல் 30   2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை இலாக்சுபோர்டு பள்ளி அறக்கட்டளை   சிறப்பு விருந்தினர்:                சிவஞான பாலையா சுவாமிகள்    சித்திரை 18, 2047  / ஏப்பிரல்  மே 1, 2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை உயர்வாசல் குன்று முருகன் ஆலயம்

சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றத்தின் விழாக்கள், சென்னை

சித்திரை 13, 2047 / ஏப்பிரல் 26, 2016 மாலை 6.00 தாமரைத்திரு ஔவை சண்முகம் 104 ஆவது பிறந்தநாள் விழா சோழன் தி.க.பகவதி நூற்றாண்டு விழா தமிழ்ச்சான்றோர் விருது வழங்கல்  நூற்றாண்டு நினைவு விருது வழங்கல் கலைைமேதைகள் விருது வழங்கல் திருவுருவப் படங்கள் திறப்பு குறும்படம் திரையீடு தி.க.ச.கலைவாணன் தி.க.ச.புகழேந்தி

இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு

  இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு   சித்திரை 24 & 25, 2047  /  மே 07 & 08, 2016 மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூா் (மாவட்டம்) இரண்டு நாட்களும் காலை, நண்பகல், இரவு உணவு, தங்குமிடம், பயிற்சிக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசம்.   நண்பர்களே!   இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு  மேற்குறித்தவாறு, மே மாதம் 7,8  நாள்களில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூா் (மாவட்டம்)…

பாரதிதாசன் 126ஆவது பிறந்தநாள் விழா, புதுச்சேரி

சித்திரை 16, 2047 / ஏப்பிரல் 29, 2016 காலை 10.00 அனைத்திந்தியத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் விருது வழங்கல் முனைவர் கோ.பெரியண்ணன் முனைவர் இதயகீதம் இராமாநுசம் புலவர் இரா.இராமமூர்த்தி