புதுச்சேரி-காரைக்கால் வரலாறு : ஒருநாள் பயிலரங்கு

  ஆடி 23, 2045 / ஆக.8, 2014     காரைக்கால், அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் வரும் ஆடி 23, 2045 -8-8-2014 வெள்ளியன்றுபுதுச்சேரி -காரைக்கால் வரலாறு குறித்த ஒருநாள் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.பயிலரங்கை ஒட்டி அரிக்கமேடு அகழ்வாய்வுத் தடயங்கள் குறித்த அரியகண்காட்சியும் நடைபெறவுள்ளது. வரலாற்று ஆர்வலர்களும் அறிஞர் பெருமக்களும் தவறாது பங்கேற்றுச் சிறப்பிக்கவும். அழைத்து மகிழும்: முனைவர் நா.இளங்கோ, முதல்வர் (பொ), அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி.      

தீவரைவு – ஆவணப்படம் திரையிடல் – சென்னை

கருந்திணை தயாரிப்பில் பூங்குழலியின் இயக்கத்தில் தீ வரைவு ஆவணப்படம் திரையிடல் – சென்னை நாள் – ஆடி 18, 2045 -ஆகத்து 3, 2014, ஞாயிறு – மாலை 5 மணி இடம் – கவிக்கோ அரங்கம், இரண்டாவது முதன்மைச் சாலை, ந.மே.க.குடியிருப்பு (சி. அய். டி. காலனி) இசைக்கழகம் (மியுசிக் அகாடமி) அருகில், மைலாப்பூர், சென்னை நமதுபண்பாட்டில் உறவுகளை நிலைநிறுத்துவதற்கும், புதிய உறவுகளைஉருவாக்குவதற்கும் திருமணம்ஒரு முக்கிய களமாக இருக்கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, சாதியையும் நிலைநிறுத்திவருகிறது. பலநூற்றாண்டுகளாக சாதிக்குள் நாம்ஏற்படுத்திக்கொள்ளும் மண…

செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் – 2013

மறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த புதின விருது :  நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’, ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும் சிறந்த நாடக நூலுக்கான விருது : க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’ சிறந்த சிறுகதைகள் விருது: புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ செயந்தி சங்கர் எழுதிய ‘செயந்தி சங்கர் சிறுகதைகள்’ சிறந்த கவிதை…