`வெளிச்சம் படாத நிகழ்கலைப்படைப்பாளிகள்` – உரையாடல்

நண்பர் வெளி இரங்கராசனின் `வெளிச்சம் படாத நிகழ்கலைப்படைப்பாளிகள்` தொகுப்பு பற்றிய உரையாடல் வரும் ஞாயிறு ஐப்பசி 30, 2045 / 16.11.2014 மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரில் (390, அண்ணா சாலை, கே. டி.எசு.வளாகத்தில் உள்ள) அகநாழிகை புத்தக நிலையத்தில் நடைபெற இருக்கிறது. கி.ஆ.சச்சிதானந்தம், ந.முத்துசாமி, பிரபஞ்சன், பிரளயன், இரவிசுப்பிரமணியன், ஓவியர் மருது, கமலாலயன், யவனிகா சிரீராம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்து கொள்ளுங்கள். அன்புடன் இரவி சுப்பிரமணியன்

” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ” கூட்ட அழைப்பிதழ்

” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு “         கூட்ட அழைப்பிதழ்    நாள்: ஐப்பசி 30, 2045 / நவம்பர் 16, 2014. ஞாயிறு காலை 10 மணி முதல் 4 மணி வரை இடம்: ரீசென்சி விடுதி அரங்கம், அபிராமி திரையரங்கம் அருகில், ஈரோடு. தோழமை அமைப்புத் தலைமைத் தோழர்களுக்கு ” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ” ஒருங்கிணைப்புக் குழு சார்பில் எமது வணக்கம்.   2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு…

தலையங்க விமரிசனம் – 100 ஆவது அமர்வு

  அன்புடையீர், பொருள்: நிகழ்ச்சி அறிவிப்பு   – அழைத்தல் வணக்கம். தலையங்க விமரிசனம் என்ற பெயரில் கடந்த 2043 மார்கழி 8 /2012ஆம் ஆண்டு திசம்பர் 23 முதல் வாரந்தவறாமல் ஞாயிற்றுக்கிழமைதோறும் சென்னையில் அரங்கக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அமர்வுகளில் இதழாளர்கள், செய்தியாளர்கள், ஊடவியலாளர்கள் முதலானோர் பங்கேற்று அந்த வாரத்தில் முதன்மை நாளேடுகளில் வெளிவந்த தலையங்களில் காணப்படும் செய்திகள், கருத்துக்களைத் திறனாய்வு செய்து உரையாற்றுவது வழக்கம். ஊடகத்துறையில் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் இதில் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிர்ந்துகொள்வர். மக்கள் நலன் சார்ந்த கண்ணோட்டத்தில் செய்தியை…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்க மாவட்ட மாநாடு, திண்டுக்கல்

  திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் இலெட்சுமி விலாசு வங்கி மேல்மாடியில் எதிர்வரும் கார்த்திகை 4, 2045- 20.11.2014 அன்று மாலை 5 மணியளவில் மாநாடு நடைபெற உள்ளது. இதன்தொடர்பாகச் செய்தியாளர்களிடம் கூறிய தமுஎகச அமைப்பைச்சேர்ந்த கவிவாணன் கூறுகையில், விடுதலைப்போராட்டத்தில் நம்நாட்டு விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்துக்கொண்ட சுப்பிரமணிய சிவா, தமிழகத்தில் இரண்டாவது முழு நீளப் புதினமான கமலாம்பாள் சரித்திரம் எழுதிய நாவலாசிரியர் இராசம்(அய்யர்), மணிக்கொடி இதழின் ஆசியரான ‘மணிக்கொடி சிறுகதைகள்’ என்ற நூலுக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும் திரைப்பட உரையாடலாசிரியருமான பி.எசு.இராமையா, ‘எழுத்து’…

60 கவிஞர்கள் கூடும் ‘பிரபாகரன் மாலைப் பொழுது’ கவியரங்கம்

60 கவிஞர்கள் கூடும் ‘பிரபாகரன் மாலைப் பொழுது‘ கவியரங்கம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டுச் சென்னையில் 60 கவிஞர்கள் கூடும் கவியரங்கம் நடைபெற உள்ளது.     புலவர் புலமைப்பித்தன் தலைமையில் கூடும் 60 கவிஞர்கள் தலைவரைப் போற்றி கவிபாடும் கவியரங்கம் சென்னை (மெரீனா) கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்குப் பின்புறம் நடைபெற உள்ளது.   கிறித்து பிறப்பிற்கு முந்தைய நாளான 24 அன்று கிறித்துமசு மாலை என உலகெங்கும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாடிவருவது போன்று…

மிளிரின் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலி

அகநாழிகை, சென்னை  ஐப்பசி 29, 2045 / நவ.15,2014 மிளிர் இலக்கிய அமைப்பு நடத்தும்  எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலிக் கூட்டம் வரவேற்புரை: நாச்சியாள் முன்னிலை: திரு. செயகுமார் நினைவுகூர்வோர் : எழுத்தாளர் திருப்பூர் கிருட்டிணன் எழுத்தாளர்  சோடி குரூசு பேரா. பாரதி சந்துரு நன்றியுரை: கவிஞர். பரமேசுவரி இடம்: அகநாழிகை புத்தக உலகம் நேரம்:   ஐப்பசி 29, 2045 15-11-2014 மாலை 5.30 மணி