பொள்ளாச்சியார் திருந்தமாட்டாரா? தமிழ்க்கொலையை நிறுத்த மாட்டாரா?

    பொள்ளாச்சியார், வள்ளலார்  கொள்கையைப் பரப்பும் அருள் உள்ளம் கொண்டவர். ஆனால், தமிழ்த்தாய்மீது அருள் இல்லாதவர்.  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் நெறி பரப்புபவர், அயல்மொழிகளால் வதைக்கப்பட்டு வாடும் தமிழன்னை மீது  பரிவு காட்ட வேண்டாவா?  மாறாகத் தமிழைப் பாராட்டி ஆரியத்தை முன் நிறுத்துவதையே கொள்கையாகக் கொண்டவர். ஆரியத்தை அடைவதற்குரிய பாதைதான் தமிழ் என்பது அவரது வழிமுறை. தமிழ்க் கோப்பையில் ஆரிய நஞ்சு தருவதில் வல்லவர். எனவே, அவரிடம் இதனை எதிர்பார்க்கமுடியாதுதான். ஆனால், அவரின் நெருங்கிய வட்டம் தமிழ் எழுத்துவடிவங்களைச்…

இந்தியைப் பற்றிய சொல்லும் செயலும் – பேராசிரியர் சி.இலக்குவனார்

சென்ற இதழில் அலுவலக நேரத்திலேயே இந்தி மொழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்பின்னர் வெளிவந்துள்ள இந்திய அரசு அறிக்கை ஒன்றில் அலுவலக நேரமல்லாத காலத்திலேயே இந்திமொழிப் பயற்சி பெறுமாறு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (At present classes are being conducted in many departments of the Union Government outside office hours to enable non-Hindi speaking people to learn Hindi) இக்குறிப்பில் ‘எல்லா அலுவலகங்களிலும்’ என்று குறிப்பிடாமல் ‘பல அலுவலகங்களில்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. ஆகவே…

இதுதான் மக்களாட்சியா? – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

மக்கள் நன்மைக்காக மக்களால் மக்களைக் கொண்டே ஆளப்படுவது மக்களாட்சியாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மொழியனரும் சமயத்தினரும், கொள்கையினரும், நாற்பது கோடிக்குமேல் வாழ்ந்தபோதிலும், மக்களாட்சி முறையைப் பின்பற்றி உலகம் புகழுமாறு ஆட்சி செலுத்துகின்றோம் என ஓயாது பறையறைந்து வருகின்றனர் ஆளுங்கட்சியினர். இந்தியக் கூட்டரசு ஆட்சியை நடத்திவரும் கட்சியினர் மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றுப் பதவிப் பீடத்தில் அமர்ந்திருப்பது உண்மைதான். இவ்வாறு அமர்ந்திருப்பது மக்களாட்சி முறைகளைப் பின்பற்றி வருவதன் பயனாகவா? அல்லது வேறு முறைகளைக் கையாண்டு வருவதன் தன்மையாலா? வறுமை, அறியாமை, கல்வியறிவு இன்மை, அச்சம்,…

கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்!

  கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்! நல்ல முடிவெடுங்கள்! என அன்புடன் வேண்டுகின்றோம்! உங்கள்  கடந்த கால அருவினைகளையும் படைப்புத்திறனையும் குறைத்து மதிப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவற்றால் ஈர்க்கப்பட்டதால் உங்களைப்பற்றிய மதிப்பான  படிமம் உள்ளத்தில் ஏற்பட்டதால்தான் இப்பொழுது  இவ்வாறு கூற நேர்கிறது!   உங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளீர்கள்! ஒருவேளை அவர்களுக்கிடையே உள்ள மோதலால் ஒருவருக்கு ஒருவர் தீங்கு நேரிடும் என அஞ்சி நீங்கள் கேட்டுள்ளீர்களோ என்றும்   தொண்டர்களை எண்ண வைத்தது இது. தமிழக அரிசடம் கேட்காமல மத்திய…

இந்தி எதிர்ப்புச்சிறப்பிதழ் 01

  இந்தித்திணிப்பு எதிர்ப்பு அல்லது இந்தி முதன்மை எதிர்ப்பு என்பனபோல் கூறாமல் ‘இந்தி எதிர்ப்பு’ என்றே கூற விரும்புகிறோம். ஏனெனில், இதுவரை நாம் அவ்வாறு அழைத்தும் கல்விமொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழி, ஆட்சிமொழி முதலான போர்வைகளில் இந்தி நம்மை இறுக்கிக் கொண்டே உள்ளது. இருப்பினும் அதை உணராமலும்  அதில் இன்பங் கண்டும் நாம் தமிழுக்கு அழிவு தேடிக் கொண்டிருக்கிறோம். 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1967 இல் ஆட்சியை மாற்றியது. அப்பொழுது ஓட ஓட விரட்டப்பட்ட பேராயக் கட்சி இன்னும்…

அரசுப்பணிக்குத் தமிழ்ப்புலவர்கள்

    தமிழ்நாட்டு அரசு அலுவல்களில் தமிழ்ப் புலவரும் பணிபுரியலாம் எனும் செய்தி வெளிவந்துளளது. இச்செய்தி வெளிநாட்டார்க்கு நகைப்பை விளைவிக்கும். ஆங்கில நாட்டில் ஆங்கிலத்தில் புலமையுற்றோரும், ஏனைய நாடுகளிலும் அவ்வந்நாட்டு மொழிகளிலும் புலமைபெற்றோரே அலுவல் துறைகளில் முதன்மையிடம் பெறுகின்றனர். தமிழ்நாட்டிலும், தமிழ் ஆட்சிமொழியானபிறகு தமிழ்ப்புலமை பெற்றோரே தமிழ்நாட்டு  அரசு அலுவல் துறைகளில் அமர்த்தப்படல் வேண்டும். ஆனால் இன்னும் தமிழ்ப்புலமைப் பட்டம் பெற்றோர்க்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை தமிழ்ப் புலமையுற்றோர் பணிதேடிச் செல்லுங்கால் ஆங்கிலப் புலமை பெற்றிருந்தம், அதனுடன் தமிழ்ப்புலமை பெற்றிருப்பதால் அதற்காக இகழப்படுகின்றனராம். என்னே…

உண்மைக் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால்…

ஒட்டடார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கொட்டான் எனப்படுதல் நன்று.     இந்தியக் கூட்டரசு பதினான்கு மொழிகளையும் தேசிய மொழிகளாக ஏற்றுக் கொண்டிருப்பதாக அரசியல் சட்டம் கூறுகின்றது. எல்லா மாநிலங்களும் இணைந்துள்ள கூட்டரசில் எல்லா மாநில மொழிகட்கும் சம உரிமையும் வாய்ப்பும் அளித்தல் வேண்டும். கூட்டரசுப் பாராளுமன்றில் அவைகளைப் பயன்படுத்துவதற்குத் தடை இருத்தலாகாது. கூட்டரசுப் பாராளுமன்றில் தேசிய மொழிகள் என ஒப்புக் கொள்ளப்பட்டவற்றுள், எதில் வேண்டுமானாலும் யாரும் உரை நிகழ்த்தலாம் எனும் உரிமை ஒப்புக் கொள்ளப்படல் வேண்டும். இவ்வுரிமை மறுக்கப்பட்டால் கூட்டரசு என்பது பொருளற்று…

நிதி ஆளுமையை இழக்கும் தமிழகம்

 ஒரு புறம் தமிழ்நாட்டில் தொழிலகங்களில் அயலவர் ஆதிக்கம் ஓங்கிக் கொண்டு உள்ளது. மறு புறமோ தமிழ்நாட்டவர்கள் முதலீடுகள் அயலகங்களுக்குத் திருப்பிவிடப்படும் அவலம் அரங்கேறுகிறது.   தமிழகக் கருநாடக எல்லையில் உள்ள சாம்ராசு நகர் மாவட்டத்தில், 1,400 காணியில் தொழில் மண்டலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த, 20.01.14 அன்று  ‘சாம்ராசு நகர் முதலீட்டாளர்கள் மாநாடு’ நடத்தப்பட்டது. கருநாடகத் தொழில்  வணிக அவைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாடு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரின்…

தமிழர்திருநாளா? மகர சங்கராந்தியா? திராவிடர் திருநாளா?

   உழவர் திருநாள், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்பதிலே ஐயமில்லை. இந்திய நிலப்பகுதி முழுவதும் ஒரு காலத்தில் தமிழ்நாடாக இருந்தமையால் இன்றைய இந்தியா முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. (தமிழோடு தொடர்புடைய சப்பான் முதலான ஆசிய நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.) ஆனால், அவ்வாறு கொண்டாடப்படும் இடங்களில் பேசும் மொழியும் சிதைந்து உருமாறிப் புது மொழியானமையால், அங்கே பொங்கல் நன்னாளின் பெயர் சங்கராந்தி அல்லது சங்கிராந்தி, உத்தராயண், (உ)லோரி,    மகரவிளக்குத் திருவிழா, மாகி, மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி என்பனபோல்  …

அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!

  தமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்! இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600  இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய…