குறள் கடலில் சில துளிகள் 30 – பெரியாரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், குறள் ௪௱௪௰௪ – 444) பதவுரை: தம்மின்-தம்மைக்காட்டிலும், தம்மைவிட; பெரியார்-பெருமையுடையவர்; தமரா-தம்மவராக, சுற்றமாக; ஒழுகுதல்-நடந்து கொள்ளல்; வன்மையுள்-வலிமையுள், வல்லமையுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை, சிறந்தது. பொழிப்புரை: நம்மினும் பெரியவரை நம்மவராக ஏற்றுப் பின்பற்றல் எல்லா வன்மையினும் சிறந்தது. ‘தம்மின் பெரியார்’ என்பதற்குத் ‘தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல்’ என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும்…
வெருளி நோய்கள் 71-75 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 66-70 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 71-75 71.) 19 ஆம் எண் வெருளி – Enneaidekaphobia / nonadecaphobia19 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 19 ஆம் எண் வெருளி.கிரேக்கத்தில் ennea என்றால் 8, deca என்றால் 10. சேர்த்துக் குறிப்பிடும் பொழுது 19 ஐக் குறிக்கிறது.இலத்தீனில் nona என்றால் 9, deca என்றால் 10. இவையும் சேர்ந்து 19ஐக்குறிக்கின்றன. 13 ஆம் எண் மீதான பேரச்சம் வரும் முன்னரே 19 என்பதைத் தீப்பேறு(unlucky) எண்ணாகக் கருதி அஞ்சினர். அகவை…
113.மனுவிலும் கீதையிலும் குறைகள் இருந்தாலும் பின்பற்ற வேண்டாவா? ++ 114.கீதை கலப்பு மணத்தை எதிர்க்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 112 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 113-114
112. இரிக்கு வேதத்தை அனைவரும் போற்ற வேண்டும் என்கிறார்களே! -இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 111 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 112
வெருளி நோய்கள் 61-65 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 55-60 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 61-65 61.) 111 ஆம் எண் வெருளி – Hekatohendecaphobia111 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்111 ஆம் எண் வெருளி.கிரேக்கத்தில் hekato – 100, hendeka – 11 எனப் பொருள்களாகும்.00 62.) 12 ஆம் எண் வெருளி – Dodecaphobia12 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்12 ஆம் எண் வெருளி. 00 63.) 120 ஆம் எண் வெருளி – Centumvigintiphobia120 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 120 ஆம்…
111. புராண நாயகர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா? என்பது சரிதானா? -இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 தொடர்ச்சி) கிருட்டிணன் கூன்விழுந்த குப்புசாவுடன் தகா முறையில் உறவு கொண்டதாகப் பாகவதம் கூறுகிறது. கிருட்டிணனுக்கு, (உ)ருக்மிணி, சத்தியபாமா, சம்பாவதி, காளிந்தி, மித்திரவிந்தா, நக்குனசிதி, பத்திரா, இலட்சுமணா என்னும் முதன்மை மனைவியர் எனவும் இது கூறுகிறது. இவர்கள் வழி 80 ஆண்மக்கள் இருந்ததாகக் கூறி அவர்களின் பெயர்களையும் தருகிறது இப்புராணம். கிருட்டிணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை 16,108. இவர்களின் பிள்ளைகள் 1,80,000. இவ்வாறு கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. எனினும் கிருட்டிணன் பல பேருடன் உறவு கொண்ட ஒழுக்கமற்றவன்…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் தமிழ் உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றால் கன்னடத்திற்கும் தாயாகத் தமிழ் இருக்கிறது என்பது சரிதானே! உலகப்பந்தில் ஓரிடத்தில் தோன்றிய மக்கள் இனம்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது. மக்கள் தோன்றிய இடத்தில் தோன்றிய மொழிதானே உலகமெங்கும் பரவியிருக்கிறது. அவ்வாறு பரவும் பொழுது காலச்சூழலுக்கும் இடச் சூழலுக்கும் ஏற்ப பல்வேறு மொழிகளாகத் திரிந்தன. அவ்வாறு திரிந்த மொழிகள் பிற திரிந்த மொழிகளுடன் சேர்ந்து மேலும் பலவேறு மொழிகள் தோன்றின. ஆகவே மொழிப்பிறப்பு வரலாற்று அடிப்படையிலும் மக்கள் பிறப்பு வரலாற்று அடிப்படையிலும் ஒரு மொழியில்…
வெருளி நோய்கள் 55-60 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 51-54 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 55-60 55. 10 ஆம் எண் வெருளி – Decaphobia 10 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 10 ஆம் எண் வெருளி. டெக்கா/ Deca என்பது பத்து என்பதைக் குறிக்கும் முன்ஒட்டுச்சொல். 00 56. 100 ஆம் எண் வெருளி Hekatophobia / centumphobia / hectophobia 100 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்100 ஆம் எண் வெருளி. கிரேக்கத்தில் hekaton என்றால் 100 எனப் பொருள். பிரெஞ்சில் cent, இத்தாலியில்…
110. இராமன் ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்ந்தது சனாதனத்தின் சிறப்பா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 பிறன் மனைவியை விரும்புவதையே அறமற்ற செயலாகக் கருதுபவர்கள் தமிழர்கள். மன்னர் அரசியிடமிருந்து விலகி வேறு பெண்ணை நாடிச் சென்ற பொழுது புலவர்கள் மன்னரையே கண்டித்துத் திருத்தியுள்ளார்கள். கணவன் இல்லாத வீட்டில் பேச்சுக் குரல் கேட்பதாக எண்ணிக் கதவைத் தட்டிய அரசன், பின்னர் உடனிருப்பது கணவன்தான் என்பதை உணர்ந்து அவன் மனைவி மீது ஐயப்படக்கூடாது என்பதற்காக எல்லார் வீட்டுக் கதவுகளையும் தட்டிச்சென்று பின்னர்த் தன் கையையே வெட்டிக்கொண்ட பொற்கைப்பாண்டியன் வாழ்ந்த…
தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் – தமிழ்த் தாய்மையும் கன்னடச் சேய்மையும் – இணைய அரங்கம் : 06.07.2025
தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்த்தாய்மையும் கன்னடச்சேய்மையும் இணைய அரங்கம் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௫௰௫ – 355) இணைய அரங்க நாள் : ஆனி 22, 2056 / சூலை 06, 2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்…
வெருளி நோய்கள் 51-54 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 47-50 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 51-54 51. ‘வி’ / V’ எழுத்து வெருளி – Victophobia ‘வி’ / V’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வி’ / V’ எழுத்து வெருளி. 00 52. ‘வேசி / ‘whore’ சொல் வெருளி – Huophobia ‘வேசி / whore’ என்னும் சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வேசி /whore’ சொல் வெருளி. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் மற்றொரு பெண்ணை இழிவுபடுத்துவதற்காக, விலைமகள், வேசி, பரத்தை, வேசிமகள் எனப் பலவகைகளில்…
108.இந்துமதப் பகைவர்கள்தான் சனாதனத்தை எதிர்க்கிறார்களா? ++ 109.இராமாயணம் சனாதனத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறதா? – இலககுவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 இது குறித்துக் குடியாத்தம் குமணன் என்னும் கவிஞர் கூறியுள்ளதைப் பாருங்கள்: “இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத இந்துக்கள்: சிவராத்திரிக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்லுகிற வழக்கம் இல்லாத இசுகான் அமைப்பைச் சார்ந்த தீவிர வைணவ இந்துக்களையா….? அதே சிவராத்திரிக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்ல மறுக்கும் சீயர் மட இந்துக்களையா….? அல்லது இராம நவமிக்கும், கிருட்டிண செயந்திக்கும் வாழ்த்து சொல்லாத காஞ்சி மடாதிபதிகளையா….? மேற்கண்ட இவை எதையுமே எப்போதும்…
