117/ 133. ஏடுகளில் பிராமணர்களை உயர்த்திச் சொல்லியிருக்கலாம். அவற்றை மக்கள் பின்பற்றினார்களா?+118 வேதங்களைப் பின்பற்றலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 117 + 118 இராச சூய வேள்வியின்பொழுது அரசரின் வேலையாட்கள் பல வகை சுவையுள்ள இனிப்புகளையும் உணவுகளையும் இனிய பானங்களையும் பிராம்மணர்களுக்கு எக்காலமும் அளித்தனர். ஒவ்வொாரு நாளும் பிராமணர்கள் உண்டதற்கு அடையாளமான சங்கு ஊதப்பட்டது. அச்சங்கு அடிக்கடி ஊதப்பட்டதால் மக்கள் வியப்படைந்தனர். இராச சூய வேள்வியில் பிராமணர்களுக்குப் பரிமாறியது வேலையாட்கள் அல்லர். இரத்தினமாலைகளைச் சூடித் துலக்கப்பட்ட இரத்தினக் குண்டலங்களை அணிந்து அரசர்கள் ஆயிரக்கணக்கான பிரமாமணர்களுக்குப் பரிமாறினர். பல நாடுகளிலிருந்தும் வந்த பிராமணர்கள்…

வெருளி நோய்கள் 81 -85 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 76 -80 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 81 -85 81.) 3 ஆம் எண் வெருளி – Triskaphobia3 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 3ஆம் எண் வெருளி.கிரேக்கத்திலும் இலத்தீனிலும் tri என்பது 3 ஐக் குறிக்கும்.3 என்பது தீய விளைவை எச்சரிக்கும் வரையறுக்கப்பட்ட எண் என எண்ணுகின்றனர். எடுத்துக்காட்டாக, நெஞ்சகத்தில் 3 தாக்குதல் வரை வரும், நீரில் மூழ்குபவர் 3 முறை தண்ணீருக்கு மேலே வருவர் என்பனவற்றைக் குறிப்பிடலாம். எனவே, பாதிக்கப்படுவோர் 3 ஆம்நேர்வு வருவதைத் தவிர்ப்பர். இருப்பினும்…

116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 116 தமிழில் தொன்மம் என்பது பொருந்தாது. தொன்மக் கதைகள் என்ற பொருளில் இவ்வாறு கூறுகின்றோம். தொன்மக் கதையை இப்பொழுது கூறினால் தொன்மம் என்போமா? வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்  என்னும் நூலை நாம் தொன்மம் என்போமா? தொன்மம் என்று சொல்லப்படுவன எழுதப்படும்பொழுது தொன்மைச் செய்திகளை எழுதவில்லையே!  மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். ஆனால், மகாபாரதத்தில் வியாசரும் ஒரு கதை  மாந்தர்தானே. அப்படியானால் அவர் கால நூல்தானே இது. எனவே, தொன்மம் என்பது பொருந்தாது. காப்பியம்,…

சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 976-980 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 981-985  981. Audience அவையோர்‌; கேட்பவர்‌ (சட்டத்) தகவல் பெறுநர் audientia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கேட்டல். பொது நிகழ்ச்சியைக் குழுவாகப் பார்ப்பவர்களும் கேட்பவர்களும் Audience எனப்படுகின்றனர். தமிழில் பார்வையாளர், அவையோர், கேட்பவர், கேட்போர், அவையினர் என்கிறோம்.   சட்டச் சூழலில் கேட்குநர் அல்லது கேட்புஅவை என்பது சட்டத்தகவல் தொடர்பான விவரங்களைப் பெறுபவர்களைக் குறிக்கிறது. இதில் பல்வேறு அளவிலான சட்ட அறிவு, குறிப்பிட்ட தேவைகளைக் கொண்ட பல்வேறு தனியாட்கள், குழுக்கள்…

வெருளி நோய்கள் 76 -80 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 71-75 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 76 -80 76.) 216 ஆம் எண் வெருளி – Diakosioihekkaidekaphobia216 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 216 ஆம் எண் வெருளி. முறையே diakosioi, hekkaideka ஆகிய கிரேக்கச் சொற்கள் எண் 200, எண் 16 ஆகியவற்றைக் குறிக்கும். 666 ஆம் எண் வெருளி உள்ளோர் 6x6x6 = 216 என்பதால் 216 ஆம் எண்குறித்தும் பேரச்சம் கொள்வர்.00 77.) 22 ஆம் எண் வெருளி – Vigintiduphobia22 ஆம் எண் குறித்த வரம்பற்ற…

பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 113-114 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 115 நால்வருணங்களுள் பிராமணரைத் தவிர ஏனையோரைக் கீழானவராக இறைவன் கருதுவதாகத் தெரிவிக்கும் பாடல்களும் கீதையில் உண்டு. எல்லாப் பெண்களையும் கீழ் வருணத்தார் எனவும் கீழானவர்களாகவும் இழிவாகக் கூறியுள்ள நூல் எங்ஙனம் சிறப்பாக இருக்க முடியும்?பகவத்து கீதையின் ஆணைகள் ஒரு சார்புடையவை என்பது வெளிப்படை. எல்லா உயிர்களும் ஒத்த உயர்வுடையவை என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டு மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு பகுதிகளாகப் பிரித்து அவரவர்க்குரிய தொழில்களை முறையின்றி விதி்த்துப் பெண்ணினம் முழுவதையும்…

குறள் கடலில் சில துளிகள் 30 – பெரியாரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், குறள் ௪௱௪௰௪ – 444) பதவுரை: தம்மின்-தம்மைக்காட்டிலும், தம்மைவிட; பெரியார்-பெருமையுடையவர்; தமரா-தம்மவராக, சுற்றமாக; ஒழுகுதல்-நடந்து கொள்ளல்; வன்மையுள்-வலிமையுள், வல்லமையுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை, சிறந்தது. பொழிப்புரை: நம்மினும் பெரியவரை நம்மவராக ஏற்றுப் பின்பற்றல் எல்லா வன்மையினும் சிறந்தது. ‘தம்மின் பெரியார்’ என்பதற்குத் ‘தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல்’ என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும்…

வெருளி நோய்கள் 71-75 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 66-70 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 71-75 71.) 19 ஆம் எண் வெருளி – Enneaidekaphobia / nonadecaphobia19 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 19 ஆம் எண் வெருளி.கிரேக்கத்தில் ennea என்றால் 8, deca என்றால் 10. சேர்த்துக் குறிப்பிடும் பொழுது 19 ஐக் குறிக்கிறது.இலத்தீனில் nona என்றால் 9, deca என்றால் 10. இவையும் சேர்ந்து 19ஐக்குறிக்கின்றன. 13 ஆம் எண் மீதான பேரச்சம் வரும் முன்னரே 19 என்பதைத் தீப்பேறு(unlucky) எண்ணாகக் கருதி அஞ்சினர். அகவை…

113.மனுவிலும் கீதையிலும் குறைகள் இருந்தாலும் பின்பற்ற வேண்டாவா? ++ 114.கீதை கலப்பு மணத்தை எதிர்க்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 112 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 113-114

112. இரிக்கு வேதத்தை அனைவரும் போற்ற வேண்டும் என்கிறார்களே! -இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 111 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 112

வெருளி நோய்கள் 61-65 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 55-60  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 61-65 61.) 111 ஆம் எண் வெருளி – Hekatohendecaphobia111 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்111 ஆம் எண் வெருளி.கிரேக்கத்தில் hekato – 100, hendeka – 11 எனப் பொருள்களாகும்.00 62.) 12 ஆம் எண் வெருளி – Dodecaphobia12 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்12 ஆம் எண் வெருளி. 00 63.) 120 ஆம் எண் வெருளி – Centumvigintiphobia120 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 120 ஆம்…

111. புராண நாயகர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா? என்பது சரிதானா? -இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 தொடர்ச்சி) கிருட்டிணன் கூன்விழுந்த குப்புசாவுடன் தகா முறையில் உறவு கொண்டதாகப் பாகவதம் கூறுகிறது. கிருட்டிணனுக்கு,  (உ)ருக்மிணி, சத்தியபாமா, சம்பாவதி, காளிந்தி, மித்திரவிந்தா, நக்குனசிதி, பத்திரா, இலட்சுமணா என்னும் முதன்மை மனைவியர் எனவும் இது கூறுகிறது. இவர்கள் வழி 80 ஆண்மக்கள் இருந்ததாகக் கூறி அவர்களின் பெயர்களையும் தருகிறது இப்புராணம். கிருட்டிணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை 16,108. இவர்களின் பிள்ளைகள் 1,80,000. இவ்வாறு கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. எனினும் கிருட்டிணன் பல பேருடன் உறவு கொண்ட ஒழுக்கமற்றவன்…