சட்டச் சொற்கள் விளக்கம் 461-470 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 451-460 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 461-470 461. accrue – உறு, சிறுகச் சிறுகத் தொகு சேர்வுறு அடைவுறு சேர்ந்தடை வந்துறு உரிமையாகு உறு என்னும் சொல்லுக்கே மேற்குறித்த பொருள்கள் உள்ளன. இருப்பினும் உறுதல் என்பதை இணைப்புச்சொல்லாகவே பயன்படுத்துகிறாேம். திரட்டல் மூலம் அல்லது காலப்போக்கில் அல்லது நிதிப் பரிமாற்றம் காரணமாகப் பொருள் நிலை உயர்வது. திரட்டலுக்கு இரண்டு பொதுவான வரையறைகள் உள்ளன. சேமிப்பிற்கான வட்டி, வருமானம் அல்லது செலவுகளின் குவிப்பு. சட்டமுறைக் காரணம் அல்லது…
நினைவில் நிற்கும் ஆம்சுட்டிராங்கு!- இலக்குவனார் திருவள்ளுவன்
நினைவில் நிற்கும் ஆ ம்சுட்டிராங்கு! பகுசன் சமாசு கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் வழக்கறிஞராகவும் பலரது முன்னேற்றத்திற்கு ஏணியாகவும் திகழ்ந்த ஆமிசுட்டிராங்கு(K.Armstrong)(18.01.2008/31.01.1977-21.06.2055/05.07.2024) படுகொலை செய்யப்பட்ட செய்தி பலருக்கும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது. வளர்ந்து வரும் தலைவரான அவர் கொலையுண்டு மறைந்த செய்தி பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. அரசியல் தலைவர்களுக்குரிய நிறைகுறைகளைப் போல் செயற்பட்டுத் தொண்டர்களின் அன்பிற்குப் பாத்திரமாக விளங்கியவர். இவரைப்பற்றி அவ்வப்பொழுது நினைப்பதுண்டு. இப்பொழுது இவரின் துயர மறைவு அந்நினைவலைகளை எழுப்பியுள்ளது. அவருடைய அறிமுகம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. அவர் அப்பொழுது மயிலாப்பூரில்…
சட்டச் சொற்கள் விளக்கம் 471-480 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 461-470 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 471-480 471. Accumulative judgement திரள் தீர்ப்பு கூடுதல் தீர்ப்பு மற்றொரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் தீர்ப்பு. முதல் தீர்ப்பின்படியான தண்டனை முடியும் வரை இரண்டாம் தீர்ப்பு செயலாக்கம் ஒத்திவைக்கப்படும். ஒரு வழக்கில் இரண்டு அல்லது மேற்பட்ட வெவ்வேறு குற்றச்செயல்களைப் புரிந்ததற்காக விதிக்கப்பெறும் தனித்தனி இரண்டு தண்டனைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் செயற்படும் என்று தீர்ப்பு வழங்கல். தொடரியல் தீர்ப்பு என்கின்றனர். தொடர் என்பதை அறிவியல் போன்று…
சட்டச் சொற்கள் விளக்கம் 451-460 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 451-460 451. accreditation மதிப்புச் சான்றளிப்பு குறிப்பிட்ட நிரல் அல்லது நிறுவனம், உரிய தரப்பாடுகளுக்குப் பொருந்தி வருகிறதா என மதிப்பிட்டுத் தரச் சான்றளிப்பது. தூதரைச் சான்றளித்து அனுப்புதல், அதிகாரப்பூர்வச் சான்றளிப்பு. ஒன்றின் தகுதியைக் குறிப்பதால் தகுதிக் குறியீடு என்றும் சொல்வர். 452. accredited ஏற்கப்பட்ட மதிப்பு ஏற்கப்பட்ட முறைப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட, பொதுஒப்புதல் பெற்ற எனவும் சொல்கின்றனர். எனினும் சுருக்கமாக ஏற்கப்பட்ட அல்லது மதிப்பேற்கப்பட்ட என்றே சொல்லலாம்….
ஆளுமையர்உரை 101 & 102 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்
தமிழே விழி! தமிழா விழி!க்குண செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் (திருவள்ளுவர், திருக்குறள் – ௪௱௰உ – 412) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆனி 23, 2055 ****ஞாயிற்றுக் கிழமை ****07.07.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 101 & 102 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் கலைமாமணி ஏர்வாடி…
தமிழ் வளர்ச்சித் துறையினருக்குத் தண்டிப்பு அதிகாரம் வழங்கிடுக! | இலக்குவனார் திருவள்ளுவன்
முற்றம் இணையத்தொலைக்காட்சி காணுரை இலக்குவனார் திருவள்ளுவன் விசவனூர் வே.தளபதி தமிழ்வளர்ச்சித்துறையினருக்குத் தண்டிப்பு அதிகாரம் வழங்கிடுக! < https://youtu.be/2PLH2TTllQM >
சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 441 . accountancy கணக்கியல் கணக்குப் பதிவியல், வணிகக்கணக்கியல் எனவும் குறிப்பிடுகின்றனர். 442. accountant கணக்காளர், கணக்கர் வணிக நிறுவனத்தின் அல்லது அலுவலகத்தின் வரவு செலவுகளை நாட்குறிப்பேட்டில் எழுதிப் பேணுநர். அவை தொடர்பான அனைத்தையும் மேற்கொள்பவர். பட்டயக் கணக்கர், சான்றிடப்பட்ட கணக்கர், நிதிநிலைக் கணக்கர், மேலாண் கணக்கர் என இவர்கள் பல வகைப்படுவர். 443. accountant book கணக்கேடு கணக்கு பேணப்படுகின்ற புத்தகம். 444. Accountant…
சிறந்த நூல் பரிசுத் திட்டத்தில் பரிசுகளை உயர்த்திய முதல்வருக்கு நன்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்
(காண்க-சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை-இலக்குவனார்திருவள்ளுவன்) சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிப்புத் திட்டத்தில் நூலாசிரியருக்கும் பதிப்பாளருக்கும் பரிசுத் தொகையை உயர்த்திய அரசிற்கு நன்றி! முதல்வர்,அமைச்சர் பெருமக்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் பாராட்டு! பிற வேண்டுகோள்களையும் ஏற்க வேண்டுகோள்! “சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை” என ‘அகரமுதல’ இதழின் 26.06.2024 ஆம் நாளிட்டஇதழுரையில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். மகிழ்ச்சியான செய்தி. குறுகிய காலத்தில் முதல்வர் வேண்டுகோளில் பரிசு தொடர்பான வேண்டுகோளை ஒரு பகுதி ஏற்றுள்ளார். கடந்த 26.06.2024 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்றக்…
சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 421-430: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 431. Account slip கணக்குத் தாள் ஓய்வூதியக் கணக்குத் தாள், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள், பொதுச் சேமிப்பு நிதிக் கணக்குத் தாள் எனப் பலவகைப்படும். குறிப்பிட்ட நிதிக்கணக்கில் செலுத்தப்படும் தொகை, வைப்பு, இருப்பு, வட்டி கடனாக எடுத்திருப்பின் கடன் திருப்பச் செலுத்தி விவரம், அக்கணக்கில் முன்பணம் பெற்றிருப்பின் அதன் விவரம் முதலியவற்றைப் பதிந்து அளிக்கும் சீட்டு. 432. account stated விவரிப்புக் கணக்கு …
தலைமைச் செயலகத்தினரே, தமிழ்ச் செயலகமாகச் செயற்படுவீர்! | இலக்குவனார் திருவள்ளுவன்| விசவனூர் வே.தளபதி|
சட்டச் சொற்கள் விளக்கம் 421-430 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 411-420 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 421-430 421. account of crime, Give an குற்ற வரலாறு கூறு/ கொடு குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளியின் முந்தைய குற்ற வழக்கு, தண்டனை விவரக்கணக்கைத் தெரிவித்தல். குற்றக் கணக்கு என நேர் பொருளாக இருந்தாலும் வழக்கிலுள்ள குற்றவரலாறு என்பதே சரியாக உள்ளது. முதல் குற்றவாளியா, வழக்கமான குற்றவாளியா, சட்டவகையிலான குற்றவாளியா, ஒழுக்கக்கேட்டுக் குற்றவாளியா, மனநோய்க்குற்றவாளியா, நிறுவனக் குற்றவாளியா, வெள்ளாடைக் குற்றவாளியா(அழுக்குபடியாமல் குற்றம் செய்பவர்), தொழில்…
சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை-இலக்குவனார்திருவள்ளுவன்
சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை 2023 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்க இருப்பது குறித்துத் தமிழ்வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் 1947 ஆம் ஆண்டில் தொடங்கியது. தொடக்கத்தில் தமிழ் வளர்ச்சிக் கழகம் மூலம் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 1960 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் இத்திட்டத்தை தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், விதிமுறைகளைத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. 1972 முதல் தமிழ் வளர்ச்சித்துறை…
