தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை! – சி.இலக்குவனார்

தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை! வள்ளுவர் தமிழகத்தில் தோன்றித் தமிழில் எழுதியிருந்தாலும் தமிழர்களாகிய நாம் இன்னும் அதனுடைய நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. தமிழர்கள் இன்னும் அதனை நல்ல முறையில் விளங்கிக் கொள்ளாததால்தான் தமிழ்ப்பற்று இல்லாதவர்களும் தமிழ்ப்பகைவர்களும் மக்கள் பகைவர்களும் அதனை இழித்தும் பழித்தும் கூறியும் அதனால் பெருமை பெற்றும் வருகிறார்கள். தமிழர்களாகிய நாம் அதனுடைய நெறிகளைக் கடைப்பிடித்து வந்தால் நாடும் நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் நன்மைஅடையத் துணைபுரியும். குறள்நெறி என்பது வள்ளுவர் நெறி. குறள் என்ற சொல்லுக்கு இன்று…

தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது! – பேரா.சி.இலக்குவனார்

தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது   தொல்காப்பியம் மொழியியலையும் இலக்கிய இயலையும் விளக்கும் நூலேயாயினும் தமிழர் வாழ்வியலையும் அறிவுறுத்தும் வரலாறாகவும் அமைந்துள்ளது. தமிழர் வரலாறு எழுதப் புகுவோர் தொல்காப்பியத்தை நன்கு கற்றல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழரின் உண்மை வரலாற்றை எழுத இயலும். ஆகவே, தமிழக வரலாறும் பண்பாடும் அறிய விரும்புவோர் தொல்காப்பியத்தைத் தவறாது கற்றல் வேண்டும். தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது என்ற குறிக்கோளைக் கொள்ளுதல் வேண்டும். கல்வித் திட்டமும் அதற்கு இடம் கொடுத்தல் வேண்டும். தொல்காப்பியம் கற்றுத்…

சாதிக் கட்சிகள் தோன்றாமலிருத்தலே சாலவும் நன்று! – முனைவர் சி.இலக்குவனார்

சாதிக் கட்சிகள் தோன்றாமலிருத்தலே சாலவும் நன்று!   இந்நிலையில் சாதிகளின் பெயரால் கட்சிகளை உருவாக்கித் தேர்தல்களில் போட்டியிட முனைவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்சி என்று அமைத்துக் கொண்டு தேர்தலில் ஈடுபடுவாரேல் தேர்தல் களம் போர்க்களமாக மாறி நாட்டின் அமைதியும் மக்களின் நல்லுறவும் கெட்டுவிடும் என்பதில் எட்டுணை ஐயமின்று. ஆதலின் சாதிகளின் பெயரால் கட்சிகள் அமைக்க வேண்டாமென அன்புடன் வேணடுகின்றோம். கொள்கைகள் அடிப்படையில் கட்சிகள் அமைவதுதான் மக்களாட்சி முறைக்கு ஏற்றதாகும். நாட்டுக்கு நலம் பயக்கும் கொள்கைகளை மக்களிடையே…

ஆரியத்தை உயர்த்துவதும் தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது

ஆரியத்தை உயர்த்துவதும் உண்மையான உயர்வுடைய தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது   தூயதமிழ்ச் சொற்களை ஆரிய மொழிச் சொற்கள் எனத் திரித்துக் கூறுவதும், தமிழர்க்கே உரிய நாகரிகத்தையும் பண்பாட்டையும் ஆரியர்க்குரியன என அறங்கோடி அறைவதும் இன்னும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றமை மிக மிக வருந்துவதற்குரியது. உண்மைக்குப் புறம்பான புனைந்துரை எழுதி ஆரியரே மேலோராய்த் தமிழர்க்கு நாகரிகம் கற்பித்தனர் எனக் கூறுவோரை உயர்ந்த வரலாற்று ஆசிரியர் என்பதும் காய்தல் உவத்தல் இன்றிஆராய்நது தமிழர் நாகரிகச் சிறப்பை உரைப்போரைக் குறுகிய நோக்கமுடைய குறுமதியாளர் எனக் குற்றம் கூறி இகழ்வதும்…

நம் நாட்டில் நடைபெறும் ஆட்சியே சாதிமுறை ஆட்சியாகிவிட்டது! – சி.இலக்குவனார்

நம் நாட்டில் நடைபெறும் ஆட்சியே சாதிமுறை ஆட்சியாகிவிட்டது.   சாதிகள் ஒழிய வேண்டுமென்று மேடைகளில் உரக்க முழங்குகின்றனர். இதழ்களில் இனிமை பொருந்த எழுதுகின்றனர். ஆனால் செயலில் சாதிப்பதற்கு அடிமையாகின்றனர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமே இந்நாட்டாரின் பெருவழக்காய்ப் போய்விட்டது. கற்றபின் நிற்க அதற்குத்தக என்பதனை உளங்கொள்வார் அரியராகிவிட்டனர்.   தேர்தல் முறை வந்தபிறகு சாதிகளின் செல்வாக்கு இன்னும் மிகுந்துவிட்டது. ‘வன்னியர் வாக்கு அந்நியர்க்கில்லை’ என்பது உலகறிந்த தேர்தல் முழக்கமாகும். சாதிகள் ஒழிக்க முற்பட்டுள்ள கட்சிகளும் சாதிகளின் நிலையறிந்தே தேர்தலுக்கு ஆட்களை நிறுத்தும் கடப்பாட்டுக்கு ஆளாகியுள்ளனர்….

ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்

ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்   தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும்பற்றித் தமிழர்களே கற்றவர் என உலகோரால் போற்றப்படும் தமிழரே நன்கு அறியாதவராய் உள்ளனர். ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இமயம் முதல் குமரி வரை இனிதே வாழ்ந்த தமிழர்கள் ஆரியர்களிடமிருந்தே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றனர் என்று கூறுவது உண்மை நிலையறியாத வரலாற்று ஆசிரியர்க்கு ஒரு மரபாகிவிட்டது. மேனாட்டு வரலாற்று ஆசிரியர்களில் சிலர் நடுநிலை நின்று ஆராய்ந்து ஆரியர்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்னரே தமிழர்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும்…

சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே! – சி.இலக்குவனார்

சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே!   சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே. சாதி என்ற சொல்லே தமிழன்று. இதுவே சாதி தமிழ் நாட்டில் தமிழரல்லாத வர்களால் புகுத்தப்பட்டது என்பதைத் தெற்றென அறிவிக்கும்.   சாதி இங்குச் செல்வாக்குப் பெற நுழைந்த காலத்திலேயே தமிழ் நாட்டுப் பெரியோர்கள் அதனைக் கடிந்து வந்துள்ளனர். தொல்காப்பியர் காலத்தில்கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் கால்கொள்ளவில்லை. திருவள்ளுவர் காலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் வேர் கொள்ளத் தொடங்கியுள்ளன. அதனாலேயே வாழ்வியல் அறம் உரைத்த வள்ளுவர் பெருமான் “பிறப்பொக்கும்…

சாதிகள் ஒழிந்தால் மக்களாட்சி வேரூன்றும்! – சி.இலக்குவனார்

சாதிகள் ஒழிந்தால் மக்களாட்சி வேரூன்றும்!   இன்னும் மக்களாட்சி முறைக்குரிய தேர்தலுக்கு வேட்பாளர் களை நிறுத்துவது சாதி அடிப்படையிலேயே நிகழ்கின்றது என்பதை யார்தாம் அறியார். வேட்பாளர் தகுதியறிந்து வாக்குகள் கொடாது சாதியறிந்துதானே கொடுக்கின்றனர் பெரும்பாலார். சாதிகள் வேண்டா என்று பறை சாற்றும் கட்சிகள்கூட இந்நிலையைப் புறக்கணிக்க முடியவில்லையே! ஆகவே சாதிகளின் பேரால் நிகழும் அனைத்தையும் தடுத்து நிறுத்தற்குச் சட்டத்தின் துணையை நாடல் முற்றிலும் பொருத்தமேயாகும். எம்முறையிலானும் சாதிகளை ஒழித்தல் வேண்டும். எவ்வளவு விரைவில் சாதிகன் ஒழிகின்றனவோ அவ்வாளவு விரைவில் நாட்டு நலம் காக்கப் பட்டதாகும்….

இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கம்,சென்னை

  மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016 : காலை 10.00 இராணிமேரிக்கல்லூரி(தன்னாட்சி) சென்னை 600 004 தமிழ்த்துறை தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கம் சிறப்புப் பொழிவுகள்: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு கருத்தரங்கத்தலைவர் : முனைவர் ந.கலைவாணி கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் : முனைவர் சி.கலைமகள் தலைமையுரை : முனைவர்  இர.அத்தர்பேகம் புரவலர் : முனைவர் இ.மதியழகி

புலவர்களே அரசர்களின் அறிவுரையாளர்கள் – பேரா.சி.இலக்குவனார்

புலவர்களே அரசர்களின் அறிவுரையாளர்கள்   புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரையாளர்கள் ; மக்களை நல்வழிப்படுத்தும் விதிகள் பல அமைக்கும் சட்ட மன்றம் போன்றவர்கள். அரசரேயாயினும் யாவரே யாயினும் நெறிதவறிச் சென்றால் அதனை எடுத்துக்காட்டி நேர்வழி நடக்க அறிவுரை கூறுவார்கள். இக்காலத்து மக்களாட்சி அரசு மக்களுக்குச் கேடு பயக்கும் நெறி முறைகளை மேற்கொள்ளத் தொடங்கினால் எதிர்க் கட்சிகள் எதிர்த்து நின்று அரசின் குற்றங்களை எடுத்து இயம்புகின்றன. அக்காலத்தில் கட்சி முறையில் ஆட்சி இல்லை. ஆகவே புலவர்களே அப்பணியையும் ஆற்றிவந்தனர். -பேரா.முனைவர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய…

மெய்ப்பாட்டாராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை! – பேரா.சி.இலக்குவனார்

மெய்ப்பாட்டாராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை!   இலக்கிய மாந்தர்கள் உள்ள உணர்ச்சியால் உந்தப்படுகின்றகாலை எவ்வாறு சொல்லோவியப் படுத்துதல் வேண்டும் என்பதற்கு மெய்ப்பாட்டியல் மிகவும் துணைபுரியும். இவ்வகையான ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை என்றே கூறலாம். வடமொழியில் நடனம் பற்றிய மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன. அவையும் தமிழ் நூல்களைப் பின்பற்றியனவேயாம். இலக்கியப் படைப்புக்கும் இலக்கிய ஆராய்ச்சிக்கும் உரியனவாகக் கூறப்பட்டுள்ள மெய்ப்பாடுகள் பற்றிய இவ்வியல் முழுதும் கிடைக்கப் பெற்றிலதோ என்று ஐயுற வேண்டியுள்ளது. ஒவ்வொரு இயலிலும் சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய விளக்கம் கூறிய பின்னர், வகை கூறத்…

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்.  “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல்.” இவ்வாறு பேராசிரியர் கூறியுள்ளார். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடு என்பது தான் “மெய்ப்பாடு” என்பதன் பொருள். புளியை உண்டால் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப முகம் சுளிக்கின்றது. எதிர்பாராத விதமாக அருகில் அரவம் இருக்கக் கண்டால் அஞ்சுகின்றோம். அவ் வச்சத்தால் ஏற்படும் உணர்ச்சிக்கேற்ப உடல் நடுங்குகின்றது. இலக்கியத்தைப் படிக்கும்போதும் இலக்கியத்தின் இயல்புக் கேற்ப நம் உள்ளத்தில் உணர்ச்சி உண்டாகின்றது. அவ்வுணர்ச்சிக்கேற்ப…