தலவாக்கலையில் மே நாள் – மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மே நாளைத் தலவாக்கலையில் நடாத்துவதற்கு மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்! தொழிலாளர் நாளை முன்னிட்டுக் கொண்டாடப்படும் மே நாள் நிகழ்வினை இம்முறை தலவாக்கலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் கொண்டாடுவதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகச் சிறப்புக் கூட்டம் (பங்குனி 27, ஏப்.09) தலவாக்கலையில் நடைபெற்றது. இதில் மலையக மக்கள் முண்ணணியின் தலைவரும் கல்வி அமைச்சருமான வே. இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான ஏ. இலாரன்சு, நிதிச்செயலாளர் யு. அரவிந்தகுமார் …
புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை – சீ.வி.கே.சிவஞானம்
புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை! – சீ.வி.கே.சிவஞானம் “வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படவில்லை” என்று வட மாகாண அவையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் நாடு திரும்பி முதலீட்டு, வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. ஆனால், இதற்கான பொருத்தமான சூழல் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இஃது அரசின் நேர்மை மீது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, புலம்பெயர்ந்த மக்கள் யாரும் நாடு திரும்பவோ, இலங்கையில் வணிக முயற்சிகளில் ஈடுபடவோ விரும்ப மாட்டார்கள்…
முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்புக் கொடுந்துயரநாள்
தமிழின அழிப்பு நாளின் ௭(7)ஆம் ஆண்டு நினைவு நாள்! – பிரித்தானியாவில் அணி திரளுங்கள்! தமிழின அழிப்பு நாளின் ௭(7)வது ஆண்டு நினைவு நாள் நெருங்குகிறது. இம்முறை, பிரித்தானியத் தலைமையமைச்சரின் (பிரதமரின்) வீடான எண்: 10, இடவுனிங்கு வீதியில் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற உள்ளது. தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, இனப்படுகொலையை ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில் தொடரும் இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாட்டை பிரித்தானியாவிடமும் பன்னாட்டு அரசுகளிடமும் தெரிவித்து, அதற்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டம் மாலை ஐந்து…
என்று முடியும் ஈழ ஏதிலியர் துயரம்? – இலக்குவனார் திருவள்ளுவன்
செய்தியும் சிந்தனையும் [செய்தி: நண்பர் இ.பு.ஞானப்பிரகாசன், மின்னம்பலம் (https://minnambalam.com/k/1459296056 ) தளத்தில் இருந்து பின் வரும் செய்தியை அனுப்பியிருந்தார்: திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் ஏதிலியர்கள் பதினான்கு பேர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொய் வழக்குப் பதிவு செய்து தங்களைச் சிறையில் அடைத்துள்ளதாகவும், தங்களை விடுவிக்கும் வரை காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மார்ச்சு 28, 29 ஆகிய இரண்டு நாட்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள், மூன்றாவது…
பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு 23 பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒவ்வோர் ஆண்டும் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்பு 23 ஆம் நாள் பங்குனி மாதம் அன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானியத் தலைமையாளர் தாவீது கெமரொன் (David Cameron) வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்றது. இந் நிகழ்விற்குத் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் சேம்சு பெர்ரி (James Berry MP) தலைமை வகித்தார். தலைமை விருந்தினராகத் தெற்காசிய நாடுகளுக்கான வெளி நாட்டுத்துறை அமைச்சர் …
கொழும்பு கம்பன் விழா 2016
அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கொழும்பு கம்பன் விழா 2016 இரண்டாம் நாள் இரண்டாம் (26) அமர்வில் விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். இந் நிகழ்வில் படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் என்ற இராமயண நாடகமும், மேல் முறையீட்டுப் பட்டிமன்றமும் நடைபெற்றன. பா.திருஞானம் – 0777375053
பாலனின் சிறப்புமுகாம், மொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு சிறுமியின் பார்வை : திவ்வியா பிரபாகரன்
ஈழத்து மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலைகளில் இருந்து தப்பி நல்வாழ்வு இல்லாவிட்டாலும் “உயிராவது வாழும் வாழ்வு கிடைக்குமா?” என்ற ஏக்கத்தோடும் வழி தேடும் நோக்கோடும் தமது வீட்டையும் உறவுகளையும் பிறந்து வளர்ந்த மண்ணையும் பிரிந்து “இந்தியா எங்களைக் காப்பாற்றும்”, “தமிழ் நாடு எங்களை அரவணைக்கும்”, “தமிழர்கள் எமக்காக உள்ளார்கள்” என நம்பித் தமிழகம் சென்று பாதுகாப்பு தேடிய எம் ஈழ உறவுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 110 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் விலங்குகளைப்…
11 ஆண்டு கடந்தும் முழுமை பெறா புதுமயில் தோட்ட வீடமைப்புத் திட்டம்
வீடுகள் எரிந்து 11 ஆண்டுகள் கடந்தும் முழுமை பெறாத புதுமயில் (New Peacock)தோட்ட மக்களின் வீடமைப்புத் திட்டம் நேர்ச்சிகள்(விபத்துகள்), பேரழிவுகள், எதிர்பாராமல் நேர்பவை, இவற்றால் பாதிக்கப்பட்டு வீடுகள், உடைமைகளை இழந்தவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தாலும் ஏனைய அமைப்புகளாலும் பல்வேறு உதவிகள், துயரீடுகள் வழங்கப்படுகின்றன. மலையகத்திலும் பல்வேறு பேரழிவுகள்பேரழிவு, நேர்ச்சிகள் ஏற்படுகின்றன. எனினும் தோட்ட மக்களை துயரீட்டுப்பொருள்கள், உதவிகள் உரிய வகையில் சென்றடைவதில்லை. பேரிடர்கள், நேர்ச்சிகள் ஏற்படுகின்ற சூழல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பலதரப்பட்ட உதவிகள், துயரீடுகள் கொடுக்கப்படுகின்றன என்பதை மறுப்பதில்லை. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் நிலையாக…
காற்றே காத்திரு! – பேரறிவாளன் தந்தை குயில்தாசன்
எழுவரின் விடுதலைக்கு முயலும் அரசிற்கு விடுப்பு வழங்க மனம் வராதது ஏன் என்று தெரியவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுது காப்புவிடுப்பில்(பரோலில்) அனுப்பக்கூடாது என விதி உள்ளதாகத் தமிழ்நாடு சிறைத்துறைத்தலைவர் எழுத்து மூலமாகத் தமிழ்க்காப்புக்கழகத்திற்குத் தெரிவித்துள்ளார். தனி நேர்வாகவும் விதித் திருத்தமாகவும் ஏதும் ஒரு வகையில் விடுப்பிலாவது இவர்களை இவர்கள் போன்றோரையும் அனுப்புவதே அறமாகும். அவ்வாறு அனுப்புவதால் விடுப்புக் கால நன்னடத்தை அடிப்படையில் விடுதலைக்கான பாதையை எளிதாக்கலாம். அவ்வாறு இல்லையேல் அதனைக் காரணம்காட்டியே விடுதலையை மறுக்கலாம்! நளினிக்குத் தந்தையை உயிரோடு பார்க்க வாய்ப்பு மறுக்கப்பட்ட கொடுஞ்செயல்போல்,…
மாத்தளை பாக்கியம் தேசியக்கல்லூரியின் வணிக விழா
வணிக விழாவும் மாணவர்கள் சிறப்பிப்பும் மாத்தளை பாக்கியம் தேசியக் கல்லூரியின் வணிக விழாவும் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வும் மாத்தளையில் நடைபெற்றது. இதற்குச் சிறப்பு விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். இதன் போது வணிகமன்றத்தின் கலை நிகழ்வும் இடம் பெற்றது. இச் நிகழ்விற்குக் கல்வி அதிகாரிகள், மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முதலிய பெரும் திரளான மாணவிகள் கலந்து கொண்டார்கள். பா.திருஞானம் – 0777375053
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா? – விடுதலை இராசேந்திரன்
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா? தேர்தல் நாள் அறிவிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்குத் திடீர் ‘அறிவுப்புலர்ச்சி’ வந்தது. இராசீவு கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டது. நவம்பர் 2ஆம் நாள் உச்சநீதிமன்றம் இது குறித்துத் தீர்ப்பளித்த பிறகு, மூன்று மாதக் காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே, அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், பேராயக் (காங்கிரசு) கட்சியைச்…
தமிழினியின் இரு நூல்கள் வெளியீடு, கிளிநொச்சி
தமிழினியின் சமுகப்பொறுப்பும், தமிழினிகளுக்கான சமுகத்தின் பொறுப்பும் ! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் மறைந்த தமிழினி அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 சனிக்கிழமை அன்று கிளிநொச்சியில் கூட்டுறவாளர் கல்லூரி மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. வெளியீட்டு உரையை மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிகழ்த்துகின்றார். ‘தமிழினியின் சமுகப்பொறுப்பும், தமிழினிகளுக்கான சமுகத்தின் பொறுப்பும்’ எனும் தலைப்பில் முன்னாள் போராளி தங்கராசா சுதாகரன் உரையாற்றுகின்றார். முன்னாள் போராளி யாழ்நிதி, ‘ஒரு…
