அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது: செயலலிதா

அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது: தமிழ்நாட்டு முதல்வர் செ.செயலலிதா   “தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) அன்று ஒருமனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க நடுவண் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துரைக்கிறது.   ஒட்டுமொத்தத் தமிழினத்தின் குறிக்கோளுக்கும், இலங்கை வடக்கு மாகாண அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், இலங்கை வாழ்தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையிலும், இலங்கையில் உள்நாட்டுப் போர்…

ஐ.நா.வில் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கத் தீர்மான நிறைவேற்றத்தால் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ   “இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்களப் பேரினச்சார்பு அரசை அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்பட்டு, அநீதிக்கு மகுடம் சூட்டப்பட்டு விட்டது. ஐ.நா-வின் வரலாற்றிலேயே ௨௦௧௫ (2015) அக்டோபர் ௧ (1) ஆம் நாள் களங்கத்தைச் சுமக்கும் கருப்பு நாளாகிவிட்டது.   ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டில் கொலைகாரச் சிங்கள…

வாழ்கின்றவரை வாழ்த்திடுவோம்! மடிந்தவரை மறந்திடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாழ்கின்றவரை வாழ்த்திடுவோம்! மடிந்தவரை மறந்திடுவோம்!   “அதிகாரியின் நாய் இறந்தால் ஊரே திரண்டு உடன் வரும். அதிகாரி இறந்தாலோ அந்த நாய் மட்டும்தான் உடன் வரும்” என்பார்கள். இவ்வாறு ஆதாயத்திற்காக இருப்பவரைப் போற்றுவதும் ஆதாயம் இல்லை என்பதற்காக இறந்தவரைப் புறக்கணிப்பதும் இழிவான செயலாயிற்றே! ஆனால், தலைப்பு வேறுவகையாக உள்ளதே என எண்ணுகின்றீர்களா? அதற்கு விளக்கம் காணும் முன்பு ஆன்றோர்கள் சொன்ன செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.   உலகில் மனித இனம்தோன்றிய பகுதி தமிழ்நாடு. அவ்வாறு தோன்றிய பொழுது தமிழ்நாட்டின் நிலப்பரப்பு மிக அகன்று இருந்தது….

திலீபனைப் படம் பிடித்த கவி கத்தூரி

நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை ! அழகென்றால் என்ன ?  உடல் அழகு, கல்வியழகு, கவிதையழகு என்று எத்தனையோ விதமாக அழகுகள் பேசப்படுகின்றன. எல்லா அழகுகளுக்கும் மனிதன் தன் வசதிக்கேற்ப வரைவிலக்கணம் வகுத்திருக்கிறான். அழியும் அழகை நம்பி ஆகா இதுவல்லவோ அழகென்று ஓடி ஏமாறுவோர் உலகில் பலர் உண்டு.   ஆனால் அழியா அழகென்று ஒன்றிருக்கிறது. அதுதான் மனிதனை என்றும் உற்சாகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அழகை அடையாளம் காணும் உணர்வை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளித்து வைத்திருக்கிறான். மற்றவரின் கருத்துப் பாதிப்பிற்கு…

ஈழத்தீர்மானம் : முதல்வருக்கும் சட்டமன்றத்தினருக்கும் பாராட்டு!

ஈழத்தீர்மான விளக்கப் பரப்புரை மேற்கொள்க!   வரலாற்றில் இடம் பெறக்கூடிய, தமிழகச் சட்டமன்றத்தின் குறிப்பிடத்தக்க நாளாக ஆவணி 30, 2046 / செப்.16, 2015 அமைந்துள்ளது. அன்றுதான் முதல்வர் புரட்சித்தலைவி செ.செயலலிதா, ஈழத்தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நம்பிக்கையும் ஆறுதலும் தரும் வகையில் தனியாள் தீர்மானம் ஒன்றைக் கொணர்ந்து நிறைவேற்றினார். தமிழ் ஈழ மக்கள் எண்ணற்ற சாலியன்வாலாபாக்(கு) படுகொலைக்கும் மேலான இனப்படுகொலைச் சதியால் மாண்டு போயினர். ஆனால், இதனை இனப்படுகொலை என்று சொல்லக்கூட உலக நாடுகள் அஞ்சுகின்றன. நடுநிலை என்று சொல்லிக் கொள்வோரும் போர்க்குற்றம் என்று…

பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்! – ஒருவன்

( ஆவணி 30, 2046 / 15-09-1987 தொடக்கம் புரட்டாசி 10 / 26-09-1987 வரை பன்னிரு நாட்கள் யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் இந்திய அரசை நோக்கி ஐந்து வேண்டுகோள்களுடன் நீர், ஆகாரம் எதுவுமின்றி உண்ணா நோன்பிருந்து மடிந்த ஈகச் செம்மல் திலீபன் (பார்த்திபன்) நினைவாக வடிக்கப்பட்ட கவிதை வரிகள்.) நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர் உன்னத ஈகம்! பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு… அன்று, பாரதம் செய்ததோர்   மகா பாதகம்! ஆறுநாள் நோன்பிற்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை   கண்திறக்கவில்லை…

இனப்படுகொலைக்கு எதிரான தமிழகத் தீர்மானமும் இந்திய நிலைப்பாடும் – நான் பங்கேற்கும் உரையாடல்

  அன்புடையீர், வணக்கம். ஆவணி 30, 2046 / செப்.16, 2015 புதன் கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி – WIN TV [எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும்] ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில்   இனப்படுகொலைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம், இந்திய நிலைப்பாடு, அமெரிக்க நிலைப்பாடு இந்திய நிலைப்பாடு தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று ஈழத்தமிழர்க்கு உரிய நீதி வழங்க வேண்டி வலியுறுத்த உள்ளேன். மறு ஒளிபரப்பு செப்.17 இரவு – அஃதாவது செப். 18 வைகறை 1.00 மணி….

பன்னாட்டு உசாவலுக்கான நீதிப் பேரணி, தொரண்டோ

தமிழர் தேசத்தை அங்கீகரி! இனப்படுகொலையாளிகளைத் தண்டி! அனைத்துநாட்டு விசாரணையை வலியுறுத்தி மாபெரும் போரணி தமிழீழத் தாயகம், தமிழகம், புலம் பெயர்ந்து வாழும் தேசங்கள் ஆகிய அனைத்து இடங்களைச் சேர்ந்த தமிழ்மக்களும் ஒன்றாக ஓரணியில் ஒருமித்த குரலில் அமெரிக்கா முதலான அனைத்து நாடுகள், தமிழ் மக்கள் மீதுதிணிக்கத் திட்டமிட்டிருக்கும் உள்ளக விசாரணையைக் கண்டித்து அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை மூலம் நீதி வேண்டி இந்த மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இடம்: 360, பல்கலைக்கழ நிழற்சாலை, அமெரிக்கத் தூதரகம் முன்பு (360 University Avenue…

“சிரியா” குழந்தையும் முள்ளிவாய்க்காலும் – ச.பா.நிர்மானுசன்

“சிரியா” குழந்தையும் முள்ளிவாய்க்காலும் கடற்கரையோரம் ஒதுங்கிய பாலகனின் உடலைப் பார்த்து நெஞ்சு கனக்கிறது. காவுகொண்ட கடலே காலனோடு கருத்து வேறுபட்டிருக்கக் கூடும் இந்தப் பாலகனின் உயிரைப் பறிப்பதா என்று .குழந்தையோடு குடும்பத்தையிழந்த தந்தையின் வலியையும் வேதனையையும் எங்களால் ஆழமாகவே உணரமுடியும். இறைவன் வரம் கொடுத்தாலும் இதயங்கள் தாங்காது அந்த வலிலையை. அப்பனுக்கு ஆறுதல் சொல்ல யாருளரோ நாமறியோம் – ஆயினும் வல்லமை கொடுவென்று மன்றாடுவோம். சின்னக் குழந்தையின் வாழ்ந்த காலச் சிரிப்பு – இனி நினைவில் வரும் போது தந்தை எப்படி வாடிப் போவார்…