மொழித்திற முட்டறுத்தல் – 2 பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய( நாட்டா)ர்
(பங்குனி 30, தி.ஆ.2045 / , ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி) 4. முதியோர் மொழி எனினும் தமிழில் உள்ள நெருங்கிய உறவு முறைப் பெயர்களை ஆய்ந்தால் அவை அகரத்தில் தொடங்குவதன்றி, இதழ், பல், நுனிநா இவற்றின் முயற்சியால் உண்டானவை என்ற உண்மை புலனாகின்றது. அம்மா, அப்பா, அத்தை, அம்மான், அன்னை, அண்ணன், அண்ணி, அம்பி, அத்தான், அத்தாச்சி, அண்ணாச்சி, அண்ணாத்தை, அத்திம்பேர், அம்மாஞ்சி, அம்மாச்சி, அப்பச்சி, அம்மாமி, அப்பாயி முதலிய சொற்களை நோக்குக. இவ்வாறே பேச்சுக்கருவிகளின் எளிய…
குயில் பிரிந்த கூடு – புலவர் இரா இளங்குமரன்
1.குயில்பிரிந்து போய்விட்ட கூடே அம்மா! குளிர்மதியம் மறைவுற்ற வானே அம்மா! பயிர்கருகிப் பசையற்ற வயலே அம்மா! பறையின்றி நடைபோடும் படையே அம்மா! உயிரமுதாம் நரம்பறுந்த யாழே அம்மா! ஓடியுண்டு போகப்பட்ட வாளே அம்மா! பயிலுணர்வுப் பாவேந்தன் பிரிந்துபோன பைந்தமிழ்ப் பாவுலகம் ஐய ஐயோ! 2. நெஞ்சத்தில் பட்டவெலாம் கற்கின்றோர்கள் நெஞ்சத்தில் படுமாறு நேர்மையாகச் செஞ்சொற்கள் கொண்டுரைக்க வல்லோன் யாவன்? செழுந்தமிழே பேச்சாக மூச்சும் ஆகக் கொஞ்சற்கும் கெஞ்சற்கும் வன்கண்மைக்கும் குலையாமல் தளராமல் தமிழைக் காத்த அஞ்சாத அடலேற்றைப் புலியின் போத்தை, அருந்தமிழை, ஆரமிழ்தை இழந்தோம்…
எவரிடம் காண்பது …. – கவிஞர் இளங்கம்பன்
அருந்தமிழ்த் தாயுவக்க அளப்பரும் பணி பரிந்தோய்! பெரும்பகை முகில் கிழித்து பேரொளி தந்த வீர! இருபதாம் நூற்றாண்டிற்கோர் இணையிலாக் கவிஞரேறே! அருவிபோல் எமக்(கு) இனித்த அரசே நீ மறைந்தாயாமே! குன்றுபோல் நிற்குமுன்றன் கோலத்தை; மாற்றறார் சூழ்ச்சி ஒன்றுக்கும் ஆட்படாத உறுதியை, புரட்சிப் போக்கை, கன்றுக்குத் தாய்போல், கன்னிக் கவிஞர்பால் குழையும் மாண்பை என்றினிக் காண்பதையா! எவரிடம் காண்பதையா? – குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964
தனித் தமிழ்ப் படையின் தளபதி – நெல்லை க.சொக்கலிங்கம்
தமிழ் தொன்மையும் தோலாப்புகழும் மிக்கதொரு மொழியாம் இனிமையும் எளிமையும் கொண்ட செந்தமிழ் தனித்தியங்கும் தகைமையும் தகுதியும் பெற்ற பண்பட்ட மொழி என்று கால்டுவேலர் போன்ற மேனாட்டார் ஏற்றிப் போற்றும் கூற்றினை மேற்கொண்டு தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கம் தொடங்கப்பெற்றது. மாண்புமிகு தமிழ் மாற்றாரின் படை எடுப்பால், வேற்று மொழிகளின் தாக்குதல்களால் புறக்கணிக்கப்பெற்றுப் போற்றுவாரற்றுக் கிடந்த காலத்தில்தான் எழுச்சி கொண்ட இயக்கம் துவண்டெழுந்தது. தனித்தியங்கும் வலிவும் பொலிவும் மிக்க தண்டமிழ் தரணியாளும் பொறுப்பிழந்து தாழ்ந்து கிடப்பதை நீக்கி, அரியணை ஏற்ற ஆட்சி செலுத்துமாறு அணிபெற வைத்தவர்கள்…
கண்ணீர்ப் பெருக்கினைக் காண் – கவிஞர் முத்தன்
கத்து கடல்சூழ் புதுவைக் கருங்குயிலே! புத்தமுதப் பாடற் பொழிவாய் நீ – இத்தரையில் மொத்த புகழ் ஒத்தவிசை எத்தனையோ அத்தனையும் நத்திச் சுவைத்தாய் நன்று. பாடும் இசைக்குயிலே. பாரதி தாசனே! தேடு சுவைபடைத்த தேன்பொழிலே! கூடு துறந்து தமிழ்ச்சோலை சுற்றறுத் தேனோ பறந்தாய் மறைந்தாய் பகர்! கானக்குயிலே! கனித்தமிழின் இன்சுவையே மோனப் பெருந்துயிலின் மூழ்கியதேன்? -ஞானத் திருவிளக்கே பாவுலகில் தேடினும் உன்போல் ஒருவிளக் குண்டோவுரை! பாட்டுத் திறத்தாலே பைந்தமிழைக் காக்கும் – மாங் காட்டுக் குயிலரசே! காதலினால் – நாட்டிலுறு கேடுகளைப் போக்கக்…
பேரிழப்பு – முத்தமிழ்க் கவிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம்
கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய இழப்பு, தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழகத்திற்கும் நேர்ந்த ஒரு பேரிழப்பு. அதுவும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அடுத்தடுத்து நல்லறிஞர்கள் பலரை தமிழகம் இழந்து வருவது பெரிதும் வருந்தத்தக்க ஒன்று. பாரதிதாசன் அவர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞன். அவர் இளமையிலேயே தமது ஆசிரியர் தொழிலையும் கைவிட்டு நானறிய நாற்பது ஆண்டுகளாக நற்றமிழுக்கு நற்றொண்டு புரிந்து வந்த நல்லறிஞன். அது மட்டுமல்ல. கவிதை உலகில் ஒரு புதிய திருப்பத்தையே உண்டாக்கிவிட்ட அரும்பெருங் கவிஞன். …
பைந்தமிழ் போற்றிய பாவேந்தர்
பெயர் – ஊர் – பெற்றோர் : பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். புதுவை (புதுச்சேரி)யில் பெருவாணிகரான கனகசபை (முதலியாரும்(, இலக்குமி (அம்மையாரும்( இவரின் பெற்றோர்கள். புனைபெயரும், காரணமும்: இவர் புனைபெயர் ‘பாரதிதாசன்’ என்பது. மதுரையில் ‘தேசோபகாரி’ என்ற நாளேட்டில் முற்போக்குக் கொள்கைப் பற்றிப் பாட்டு எழுதி வந்ததைப் புதுவை அரசு எதிர்த்தது. இவர் அரசினர் ஆசிரியர் ஆதலால்! இவர் தம் கொள்கையை மறைத்துக்கொள்ள விரும்பவில்லை; தம் இயற்பெயரைப் புனைபெயரில் மறைத்துக் கொள்ள எண்ணினார். இவர் தமக்கொரு புனைபெயர் தேடும்போது, தம் நினைவில்…
தமிழ்ப் பெருங்காவலர் வள்ளல் கா.நமச்சிவாயர் – சிறுவை நச்சினியார்க்கினியன்
வள்ளல் கா.நமச்சிவாயர் என்று விளித்தால்தான் தமிழ் உள்ளங்கள் குளிரும் ஏன்? வள்ளல் என்று சொன்னால் மட்டும் சில உள்ளங்களுக்கு முழு நிறைவு அளிக்காது. அவரைத் தாயினும் சாலப் பரிந்தூட்டும் தயாளனுக்கே அறிந்தோர் ஒப்பிடுவர். பௌராணிகக் காலத்தில் தோன்றி இருந்தால் தமிழ் அன்னையே இம்மண்ணுலகில் சில நாள் தங்க எண்ணி வந்தனள் எனக் கூறி இருப்பர். இக் கூற்றுகள் அனைத்தும் உயர்வு நவிற்சியின் பாற்பட்டன அல்லவே அல்ல; முற்றிலும் உண்மை. காரணங்கள் ஆயிரம் ஆயிரம்; உவமைகளோ நூற்றுக் கணக்கின. ஆனால் அந்த வள்ளல் இப்புவியில்…
தொல்காப்பிய விளக்கம் – 11: முனைவர் சி.இலக்குவனார்
தொல்காப்பிய விளக்கம் – 11 (எழுத்ததிகாரம்) தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) ‘வல்லின மெல்லினமாறுகை’ (Convertablilty of surds and sounds) பழந்தமிழில் இல்லையென்பார் இந்நூற்பாவின் பொருளை நோக்குதல் வேண்டும். ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிதளவு மாறுபடுவதைக் கண்ட ஆசிரியர் தொல்காப்பியர், ஐயம் அறுத்தற்காகவே இந்நூற்பாவை இயற்றியுள்ளார். ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிது மாறுபடினும் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று கூறப்பட்ட தம் இயல்புகளில் மாறுபடா…
திருக்குறளில் உருவகம் – 5: பேராசிரியர் வீ. ஒப்பிலி
(பங்குனி 23, தி.பி.2045 / 06 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) இனி நீர் உருவகமாகப் பயன்படும் மற்ற குறட்பாக்களை எடுத்துக் கொள்வோம். நீர் தூய்மையை உண்டாக்கும் தன்மையுடையது. புறத்தே தோன்றும் அழுக்கை நீக்கும் நீர் அகத்தே தோன்றும் வாய்மையின் உருவகமாகிறது. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (298) வாய்மையின்மையால் நேரும் கேட்டினையும், அப்போது நீர் பயன்படாது போவதையும் ‘மாக்பெத்து’ என்ற நாடகத்தில் சேக்சுபியர் எடுத்துக் காட்டுகிறார். அகத் தூய்மையைக் குறிக்கும் போதெல்லாம் அக்கவிஞரும் நீரை…
மொழித்திற முட்டறுத்தல் 1 – பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய( நாட்டா)ர்
கட்டிளங் கன்னியாய்க் காலம் கடந்து நின்றாய் சொட்டும் அமிர்தத் துவர்வாயாய் – மட்டில்லா மாட்சி யுடையாயிம் மாநிலத்தின் கட்டிலில் நீ ஆட்சி செய்வ தென்றோ அமர்ந்து. ‘மொழித்திற முட்டறுத்தல்’ என்னும் இத்தொடர், இயற்றமிழ்ச் செய்யுட்களில் முன் பின்னாகக் கிடக்கும் சொற்களைக் கொண்டு கூட்டி முறைப்படுத்தி இலக்கண விதிகாட்டி விளங்க வைத்தல் எனப் பொருள்படும். ஈண்டெழுதப்படும் கட்டுரை இப்பொருள் குறித்ததன்று. மொழித் தோற்றம் பற்றியும் மொழி வகை பற்றியும் மொழி நூலறிஞர் கொண்டுள்ள கருத்துகளில் சிலவற்றின் முட்டறுத்து எம் கருத்து விளக்குதலும், நாகரிக மக்களாற்…
குறள் நெறி – மே.சி.சிதம்பரனார்
குறுமை என்ற பண்பின் பெயர் அப்பண்பினையுடைய பாவிற்குப் பெயராகி, மை விகுதி குன்றி, அள்சாரியை பெற்று, குறு + அள் = குறள் என்றானது. ஒரு தடியில் துண்டித்ததடி குறுந்தடி. ஒரு அரிசியில் துண்டித்த பகுதி குறுநொய் (குறுணை) என்றாங்கு முதற்பாவான ஒரு வெண்பாவின் நான் கடியிற்றுண்டித்த ஒன்றே முக்காலடி, குறள் எனப் பண்பாகு பெயர் பெற்றது. இக்குறட்பாக்களாலாகிய நூலுக்கும் குறள் என்றது கருவியாகு பெயராய் வந்தது. இங்ஙனம் இருமுறை ஆகுபெயர் மடங்கி வரலால் இருமடியாகு பெயரென்றுங் கூறலாம். மேலும் சிறப்புக்குறித்த திரு என்ற…