bharathidasan04

அருந்தமிழ்த் தாயுவக்க

அளப்பரும் பணி பரிந்தோய்!

பெரும்பகை முகில் கிழித்து பேரொளி தந்த வீர!

இருபதாம் நூற்றாண்டிற்கோர்

இணையிலாக் கவிஞரேறே!

அருவிபோல் எமக்(கு) இனித்த

அரசே நீ மறைந்தாயாமே!

குன்றுபோல் நிற்குமுன்றன்

கோலத்தை; மாற்றறார் சூழ்ச்சி

ஒன்றுக்கும் ஆட்படாத

உறுதியை, புரட்சிப் போக்கை,

கன்றுக்குத் தாய்போல், கன்னிக்

கவிஞர்பால் குழையும் மாண்பை

என்றினிக் காண்பதையா!

எவரிடம் காண்பதையா?

– குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964