திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்!

திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்! தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியம், சங்க இலக்கியம், குறள்நெறி ஆகியவற்றைப் பரப்புவதையும் தமிழ்க்காப்புப் பணிகளையும் தம் வாணாள் தொண்டாகக் கருதிப் பாடுபட்டவர்; தம் மாணவப்பருவத்தில் இருந்தே இப்பரப்புரைப் பணிகளிலும் காப்புப் பணிகளிலும் ஈடுபட்டவர்; தாம் பணியாற்றிய இடங்களில் எல்லாம் திருவள்ளுவருக்கு விழாக்கள் எடுத்தும் திருக்குறள் வகுப்பு நடத்தியும் குறள்நெறி பரப்பிய சான்றோர்; குறள்நெறி முதலான இதழ்கள் மூலமும் திருவள்ளுவர் புகழ் போற்றிய ஆன்றோர்.   “இன்றைய சூழ்நிலையில் மக்கள் அமைதிவாழ்வு பெறவும், பசி, பிணியற்று இன்புற்று…

கவிஞர் முடியரசன்- இ.மறைமலை

  கனி தமிழ்க் கவிதைபுனைந்த கரங்கள் கயிறு திரிக்கத் தொடங்கிவிட்ட இன்று, மக்கள் வாழ்வாம் கடலியக்கும் சுவைப்பாட்டாம் கண்ணான செந்தமிழைக் கட்டாயத் திணிப்பால் கடுகிவரும் காட்டுமொழியாம் இந்தி அழித்து வரும் இடுக்கண்ணான வேளையிலே, தமிழ் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தலையாய கவிஞர், தன்னுயிரை நல்குதற்கும் தயங்காது மொழிப்போரில் பங்கு கொண்ட பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கட்குப் பாவின்பம் நல்கிவரும் பாவலர் முடியரனேயாவார் என முட்டின்றிச் சொல்லவியலும். மறைமலையடிகளாரின் மாண்புடைத் தனித்தமிழ் இயக்கத்தைத் தகர்த்தெறிய முற்பட்ட, தீந்தமிழில் திரைக்கவிகளை எழுதித்திரட்டிவிட்ட சில தான்தோன்றிகளைப் போலன்றித், தமிழாலே உயிர் வளர்த்தும்…

வழிகாட்டும் ஒளி வேந்தன் – புலவர் இரா.வடிவேலன்

செந்தமிழர் வாழ்வென்னும் மலர்பூக்கும் கதிராய்ச் சீரேற்றும் சொற் கூட்ட வெள்ளத்தில் மழையாய் வந்தவரின் வாழ்விற்கு வன்கொடிய நெருப்பாய் வடமொழியின் வால்பற்று குழுவிற்குப் படையாய்ச் சொந்தமெனும் நம்மவரின் தோளுக்குத் துணையாய்த் தொல்லைக்கு நகை கூட்டி வாவென்னும் மலையாய்த் தந்தையாய்த் தமிழர்க்கு வெண்தாடி அலையாய்ச் சாய்ந்தாடத் தென்றலிலே சிங்கமென வந்தோன்! எண்ணத்தின் சொற்பேழை! எழுச்சிக்கு முரசம் ஏமாந்த நாட்டிற்குச் சீர்மேவ வந்தோன்! கண்ணான மண்ணிற்குக் கதியின்மை கண்டு காலத்தில் தன்மான இயக்கத்தைக் கண்டேன்! ‘விண்ணாட்டுத் தேவரிவர், வணங்குங்கள்’’ என்ற வேதத்தின் தரகற்கு விலங்கேற்ற வந்தோன் பண்ணூடு தமிழுக்குத்…

அண்ணாப்பத்து – காரை இறையடியான்

1) பண்ணார் தமிழ்ப் பேச்சுப் பாங்கால் பெரியோர்க்கும் ‘அண்ணா’ வா ஆனான் அவன்! 2) மாற்றார் மதிக்கும் மதிவளம் தாங்கிய ஆற்றலால் ‘அண்ணா’ அவன் 3) இடுக்கண் புரிவோரும் இன்பமெனக் கேட்பர் அடுக்கு மொழி அண்ணா அவன்! 4) நஞ்சிந்திப் பேயை நசுக்கச் சிறையிருக்க அஞ்சாத அண்ணா அவன்! 5) தமிழர் தம் பண்பாட்டைத் தாக்கும் வெறியை அமிழ்த்திடும் அண்ணா அவன்! 6) பேராயக் கட்சிப் பெருங்குற்றம் போக்கிட ஆராயும் அண்ணா அவன்! 7) சீர் திருத்த கருத்தைச் செந்தமிழ் நல்லேட்டில் ஆர்த்தெழுதும் அண்ணா…

அறிஞர் அண்ணா அவர்கள் மீது பாடிய வெள்ளணி நாள் விழா வாழ்த்து

– பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார் திருமணக்கும் கலைமணக்கும் திருத்தொண்டை நாட்டில் சிறப்புமிகப் பெற்றிலங்கும் திருக்காஞ்சி நகரம் பெரும்புகழை எய்திடவே பிறந்த பேரறிஞ, பிறர் இகழ்ச்சி தனை மறக்கும் பெருஞ்சால்பு மிக்கோய், ஒரு கடவுள் உளத்திருத்தி உறுமூடக் கருத்தை ஒழித்துவிடப் பாடுபடும் ஒப்பரிய தொண்ட, இருங்கடல்சூழ் இவ்வுலகில் நீடுழி வாழி! எழுத்தாள! அண்ணாவே, நீடுழி வாழி! இந்தி வந்து புகுவதனால் இனிய தமிழ் சாகும் என்றறிஞர் பெருமக்கள் எடுத்தெடுத்துச் சொலினும் அந்த இந்தி வெறியாளர் அதுபுகுந்து சிறக்க ஆனபல வழிமிகவும் ஆற்றுவது கண்டே அந்த நிலை…

புரட்சியாளர்கள்- பேராசிரியர் சி.இலக்குவனார்

  உலகில் அறியாமை மிகுந்து மூடக் கொள்கைகள் நிறைந்து அடிமை வாழ்வில் அல்லலுற்று உரிமையிழந்து உண்பதும் உறங்குவதுமே பெரிதெனக்கருதி வாழ்வின் உண்மைக் குறிக்கோளை மறந்து மானமிழந்து மக்கள் வாழுங்காலங்களில் எல்லாம் புரட்சியாளர்கள் தோன்றுகின்றார்கள். புரட்சியாளர்களால்தான் உலகம் செம்மை நிலையை நாடிச் செல்கின்றது. புரட்சியாளர் பட்டுண்டுலகம், அஃதின்றேல் மண்புக்கு மாய்வதுமன்’ என்று தான் கூறல் வேண்டும். சாக்ரிடீசு, இயேசு, மார்க்சு, உரூசோ, மகம்மது போன்ற வெளிநாட்டுப் புரட்சியாளர்களும், புத்தர், திருவள்ளுவர், கபிலர், சாந்தி போன்ற நம் நாட்டுப் புரட்சியாளர்களும் தோன்றியிராவிடின் மக்கள் நிலை மாக்கள் நிலையில்தான்…

திருக்குறளும் பொது நோக்கமும் 3 – ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்

  (ஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ‘‘ஆற்றல் அழியுமென் றந்த ணர்கனான் மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத் தெழுதா – ரேட்டெழுதி வல்லுநரும் எல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினு மாற்றல் சோர்வின்று’’ – கோதமனார் காலஞ்சென்ற தமிழறிஞர் திருவனந்தைச் சுந்தரம் பிள்ளையவர்களும், ‘‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்க ளுள்ளுவரோ மநுவாதி யொரு குலத்துக் கொருநீதி’’. என்று இந்நூலின் சமரசப் பான்மையை இனிது விளக்கினார். உரையாசிரியராம் பரிமேலழகரும், ‘‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லோர்க்கும் பொதுப்படக் கூறுதல் இவருக்கு…

பூங்கோதை 6- வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,

ஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி செங்கமலத் தம்மையார் என்றாவது இடை குறுக்கே அவ்வறைக்குள் பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்த ஒரு நிலைப்பேழையில் உள்ளதையைத் திறந்து அதனுள் வைக்கப்பட்டிருந்த அணிகள் முதலாய விலைபெறு பண்டங்களைச் சரிபார்த்து விட்டுப் போவார். செங்கமலத்தம்மையாரின் கணவர் சிவக்கொழுந்து அம்மையாரிடமிருந்து விடைபெற்றுச் சென்று ஆண்டுகள் ஒன்பது கடந்து விட்டன. இதே அறையில்தான் அவர் உயிர் நீத்தது. அவரை அடக்கம் செய்வதற்கு வெள்ளாடை போர்த்து தூக்கிச் சென்றபோது கண்ட அவருடைய வெளிறிய முகம் மீண்டும் பூங்கோதையின் நினைவிற்கு வந்தது. அச்சம்…

தமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்

                எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்                 எண்ணுவம் என்பது இழுக்கு.   தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் இன்னும் வேற்றுமொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது மிக மிக வருந்ததக்கது; நாணத்தக்கது. உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.   நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும்…

வேண்டாக் கிளர்ச்சி வென்றது! விரும்பும் தாய்மொழி விலகியது! – பேராசிரியர் சி.இலக்குவனார்

  பயிற்று மொழியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்க்கு வேண்டும் என்று சிலர் கிளர்ச்சி தொடங்கினர். தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி வாயில்களாக மாணவர்கள் கற்றுவரும் நிலை உள்ளது. ஆங்கிலத்தின் வழியாகக் கற்கும் மாணவர்களே மிகுதியாக உள்ளனர். தமிழ் வழியாகக் கற்றலைப் பையப் பைய மிகுதிப்படுத்துதலைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தொடங்கி உள்ளது.   ஆங்கிலேயர் ஆண்டபோது, ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. ஆகவே ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி அகன்று, தமிழர் ஆட்சி அமைந்தது. தமிழே ஆட்சி மொழி என்ற…

தமிழ்ப் பயிற்று மொழி – பேராசிரியர் சி.இலக்குவனார்

  கல்லூரிகளிலும் தமிழைப்  பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று கல்விப் பெரியார்களும் நாட்டு நலனில் கருத்துடைய நற்றமிழ்த் தலைவர்களும் மாணவ மணிகளும் ஓயாது வேண்டிக்கொண்டுதான் உள்ளனர். ஆனால், மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் அற்றவர்கள், பதவிகளில் அமர்ந்து கொண்டு தமிழ்ப்பயிற்று மொழித் திட்டத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றனர்.   சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்லூரி முதல்வர் களுக்கெல்லாம் தமிழைப் பயிற்று மொழியாக்குவது பற்றிக் கடிதம் எழுதியதாகவும் எந்தக் கல்லூரி முதல்வரும் அதற்குச் சார்பாகக் கடிதம் எழுதிலர் என்றும் ஒரு செய்தி வெளிவந்தது.   கல்லூரிப் புகுமுக…

தமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்

  கல்லூரிகளில் இன்று ஆங்கிலத்தின் வழியாகப் படித்துப் பட்டம் பெறும் முறையேயுள்ளது. அவரவர் மொழிவழியாகப் பயிலலே இயற்கையோடு ஒத்ததும் எளிதும் ஆகும். உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் நிலை இருந்தது; அதனை மாற்றித் தமிழின் வழியாகப் படிக்குமாறு செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவ்வாறு கல்லூரிகளிலும் தமிழ் வழியாகவே படித்துப் பட்டம் பெறும் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழ்வழியாகப் படித்துவிட்டு கல்லூரிக்கு வந்தவுடன் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் முறையால் மாணவர்கள் இடர்ப்பாடு அடைகின்றனர்.   மாணவர்கள்…