சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!

 மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர்.  தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…

தமிழ் நிலத்தில் தேன்மழை பொழிந்த சுரதா! – இலக்குவனார் திருவள்ளுவன்

  தாய்மண்ணை வணங்குவதாக அனைவரும் கூறுவோம். ஆனால், உண்மையில் தாய்மண்ணைப் போற்றி வணங்கியவர் உண்டென்றால் அவர் உவமைக் கவிஞர் சுரதா ஒருவர்தான். தான் பிறந்த மண்ணையும் தமிழறிஞர்கள் பிறந்த ஊர் நிலத்தின் மண்ணையும் சேமித்து வணங்கியவர். தமிழறிஞர்கள் பிறந்த  ஊர் தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார். ‘’அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன். என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலே மறைந்து விட்டார்.   சிறுகதை எழுத்தாளர் செகசிற்பியன் உவமைக்கவிஞர் பட்டத்தை இவருக்கு…

பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா

வாழ்த்துப் பேழை நூல் வெளியீடு   பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா ஆனி 1, 2045 / 15.06.2014 ஞாயிறு காலை பத்து மணிக்கு நெல்லை சானகிராம் உணவக மிதிலை அரங்கில் நடைபெற்றது. வழக்கறிஞர் ப.தி.சிதம்பரம் தலைமை தாங்கினார். தமிழ்மாமணி சிதம்பரப் பாண்டியன் வரவேற்றுப் பேசினார். மேனாள் மாவட்ட ஆட்சியர் மாட்சிமிகு இலட்சுமிகாந்தன் பாரதி ”வாழ்த்துப் பேழை” நூலை வெளியிட்டுப் பேசினார். தேசியப் பாவலர் த.மு.சா.காசாமைதீன் முதற் சுவடியைப் பெற்றுக் கொண்டார். தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் அருள்மிகு அந்தோணிராசு முதலிய…

வண்டமிழறிஞர் வளனரசு வாழிய வாழியவே!

   நானிலத்தில் நற்றமிழ்த்தொண்டாற்றுவோர் நனிசிலரே உளர். அவர்களுள் ஒருவராக விளங்குபவர் இன்று பவளவிழா காணும் பைந்தமிழறிஞர் பா.வளனரசு ஆவார். எழுத்தால்,  பேச்சால், கற்பிப்பால், பதிப்பிப்பால், ஆற்றுப்படுத்தலால் என ஒல்லும் வகையெலாம் ஒண்டமிழ் தொண்டாற்றி ஒல்காப்புகழ் பெறும் உயரறிஞர் இவர்.   (தனித்)தமிழ் உணர்வைத் தாம் பெற்றதுடன் அல்லாமல் 45 ஆண்டுகாலக் கல்விப்பணியில் மாணாக்கர்களுக்கும் ஊட்டியவர். தனித்தமிழ் இலக்கியக்கழகத்தின் தலைவராகத் திகழ்ந்து   மக்களை நல்ல தமிழை நாடச்செய்யும் நாவலர் இவர்.  இதன் சார்பில்  1967 முதல் கட்டுரைப்போட்டி நடத்தி மாணவச்செல்வங்களை அயற்கலப்பில்லா தனித்தமிழ்த் திசைக்கண் ஆற்றுப்படுத்தும்…

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை 200 –ஆம் ஆண்டு விழா

  சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் மொழித்துறை மெரினா வளாகம்,  சென்னை – 600 005. மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை 200 –ஆம்   ஆண்டு விழா நாள் : வைகாசி 28, 2045 /11-06-2014 புதன் கிழமை, நேரம்: காலை 10.30 மணி இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம். வரவேற்புரை: பேராசிரியர் அரங்க. இராமலிங்கம், தலைவர், தமிழ் மொழித்துறை. தலைமை : பேராசிரியர்  இரா. தாண்டவன் அவர்கள் மாண்பமை துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம். சிறப்புரை : திருமிகு கே. வைத்தியநாதன் அவர்கள் ஆசிரியர்…

‘தமிழவேள்’ உமா மகேசுவரனார் நினைவு நாள் 9.5.1941

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைத்த நின்புகழ் ஓங்குக! முதல், இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி தாழ்வு நிலையடைந்த தமிழ்மொழி பண்டைய காலம் போல் மீண்டும் ஏற்றம் பெற வேண்டுமென்று இரண்டு பேர் விரும்பினார்கள். ஒருவர் பாண்டித்துரை(த்தேவர்), மற்றொருவர் உமா மகேசுவரனார். பாண்டித்துரை(த்தேவர்) 1901ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அவர் தொடங்கிய பத்தாண்டுகளுக்குப் பிறகு உமா மகேசுவரனார் 14.5.1911 அன்று தஞ்சையில் கரந்தை தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அது முதல், தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் விளங்கினார். அவர்…

வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்

    உள்படுதலாவது அணுக்கமாதல். உலக வழக்கு நோக்கின், வள்ளுவரென்பார் வழிவழிகணிய (சோதிட)த் தொழில் செய்து வரும் தூய தமிழ்க் குலத்தாராவர். கணியத்திற்கு இன்றியமையாதது சிறந்த கணித அறிவு. கணித அறிவிற்கு இன்றியமையாது வேண்டுவது நுண்மாண் நுழைபுலம் என்னும் கூர்மதி. வள் =கூர்மை வள்ளுவன் = கூர்மதியன்.   பண்டைத் தமிழகத்திற் பொது மக்களும் புரவலரும் நாளும் வேளையும் பார்த்தே எவ்வினையையும் செய்து வந்தமையின் பட்டத்து யானை மீதேறி அரசன் கட்டளைகளைப் பறையறைந்து நகர மக்கட்கு அறிவித்த அரசியல் விளம்பர அதிகாரியும் வள்ளுவக் குடியைச்…

பாவேந்தர் பாரதிதாசனின் ஆக்கங்கள்

1)      அகத்தியன் விட்ட புதுக்கரடி, பாரதிதாசன் பதிப்பகம் 2)      அம்மைச்சி, 3)      அழகின் சிரிப்பு (கவிதை நூல்) 4)      இசையமுதம் (இரண்டாம் பாகம்), பாரதசக்தி நிலையம் (1952) 5)      இசையமுதம் (முதல் பாகம்), பாரதசக்தி நிலையம் (1944) 6)      இரசுபுடீன் 7)      இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்), குடியரசுப் பதிப்பகம் (1939) 8)      இருண்ட வீடு (கவிதை நூல்) 9)      இளைஞர் இலக்கியம், பாரி நிலையம் (1967) 10)   உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948) 11)   உரிமைக் கொண்டாட்டமா?  குயில் (1948)…

தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்! தமிழப் பகையாளனும் தானே பெயர்வான்!     (தமிழ்) தமிழுக்குத் தொண்டு    தரும்புலவோர்கள் தமிழ்க்கனி மரத்தினைத்    தாங்கிடும் வேர்கள்! கமழ்புது கருத்துக்குப்    பலபல துறைகள் கற்றவர் வரவர    கவின்பெறும் முறைகள்!               (தமிழ்) எங்கும் எதிலுமே    தமிழமுதூட்டு இங்கிலீசை இந்தியை    இடமிலா தோட்டு திங்கள், செவ்வாய், புதன்    கோள்கட்குச் செல்வாய் தேடரும் அறிவியல்    எண்ணங்கள் வெல்வாய்!               (தமிழ்)

இந்தி ஒழிக! – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ்வாழ்க தமிழ்வாழ்க என்று சொன்னான் தாமரையின் வாய்மலர்ந்து தேனைப் பெய்தான்; தமிழ் இதுபார் இன்றுதன் உள்ளங் காட்டி, தன்னுயிரில் அதுகாட்டி, என்றன் தோளை அமிழ்திதுவர எட்டியா என்று தொட்டாள் அமிழ்தென்றேன் ஆம்என்றேன் மகிழ்ந்து நின்றேன் கமழ்இமை கனியிதழும் தந்தாள் உண்டேன் கண்திறந்தேன் வேறொருத்தி வருதல் கண்டேன். தமிழ்வீழ்க தமிழ்வீழ்க என்று சொன்னாள் தமிழ்க்காதில் ஈயத்தை உருக்கி வார்த்தாள் தமிழில்லை என்றுதன் உளத்தைக் காட்டி தன்னுயிரிற் பகைகாட்டி என்றன் தோளை அமிழ்திதுவா எட்டியா என்று தொட்டாள் அப்பட்டம் எட்டிக்காய் அடியே என்றேன் உமிழ் இந்தி நான்…

வேங்கையே எழுக! – பாவேந்தர் பாரதிதாசன்

  இந்தித் திணிப்புச் சரியல்ல! அமைதி வேண்டும் நாட்டினிலே அன்பு வேண்டும் என்பார் ஆழ மடுவில் நீரைக் கலக்க வேண்டாம் என்று சொல்வார். தமிழகத்தில் இந்தி திணிக்கச் சட்டம் செய்தார் அவரே சாரும் குட்டையில் எருமை மாட்டை தள்ளுகின்றார் அவரே! சுமக்க வேண்டும் இந்தியினைப் பொதுமொழியாய் என்பார்; தொலைய வேண்டும் எதிர்ப்புக் கூச்சல் தொலைய வேண்டும் என்பார்; தமிழ்மொழியை அழிக்க வேண்டும் என்றவரும் அவரே தமிழகத்திலே புகுந்த சாக்குருவிகள் அவரே!

இந்தியா? – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை (தமிழை) தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர் தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் (தமிழை) இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி! இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி! என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி (தமிழை) ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும் பெறுவது நாடன்று தன்பிண மேடு (தமிழை) தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று செந்தமிழ் நாட்டிலே இந்தியா…