புரட்சிப் பேராசிரியர் இலக்குவனார் – நா.காமராசன்
புரட்சிப் பேராசிரியர் இலக்குவனார் பேராசிரியர் இலக்குவனார்விருந்தோம்புதலில் மிக்க விருப்பமுடையவர்; எல்லாரிடமும் எளிமையாக இனிமையாக உரையாடுவார்; தன் கருத்துகளை எதிர்ப்பு வந்தபோதும் ஆணித்தரமாக அஞ்சாது எடுத்துரைப்பார்; பதவியைப் பெரிய வாழ்வு எனக் கருதும் இவ்வுலகில் மொழியின் வாழ்வே தம்முடைய வாழ்வு எனக்கருதி உழைத்த அறிஞராவார். கல்லூரிப் பேராசிரியர்களிடையே இவர் முற்றிலும் வேறுபட்டவரெனலாம். சைவ சித்தாந்தம், கம்பராமாயணம் போன்றவற்றைப் பற்றிப் பேசிவந்த நேரத்தில் சங்கஇலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டி விளக்குவார். தொல்காப்பியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பேராசிரியர்…
செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார் -புலவர் செ. இராமலிங்கம். புதுவை
செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார் இலக்குவனாரைப்போல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஒழுக்கமுடனும். தமிழ் உணர்வுடனும் பயிற்றுவித்தவரும் மாணவர்களைப் பண்படுத்தியவரும் வேறு யாருமிலர் என்பதற்குக் கல்விச் சாலைகளின் பட்டியலே சான்றாகும். சென்னை, மதுரை, அண்ணாமலை, ஐதராபாத்து உசுமானியப் பல்கலைக் கழகங்களில், பாடத்திட்டக்குழு உறுப்பினர், பேரவை உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், போன்ற பொறுப்புகள் ஏற்றுத் திறமையுடன் புதுமையான பல திட்டங்கள் வகுத்தளித்துச் சிறப்புக்குரியவராய் விளங்கினார் இலக்குவனார். அரசியல் காழ்ப்பு, தமிழ் உணர்வின்மை, ஆங்கில மேலாண்மை, சாதியுணர்வு இவற்றுக்கிடையே இலக்குவனாரின் தமிழ்ப் பற்றும்….
இலக்குவனார் தமிழுக்காக வாழ்ந்தவர் – முனைவர் கா.மாரிமுத்து
தமிழை நினைந்து தம்மை மறந்தவர் இலக்குவனார் செய்த தமிழ்ப்பணி, தனியொருவர் செய்திட முடியாத செயற்கரிய பெரும் பணி; எழுச்சியும் உணர்ச்சியும் மிக்க பேராசிரியராய்த், துறைத்தலைவராய், கல்லூரி முதல்வராய், நூலாசிரியராய், இதழாசிரியராய், இலக்கண இலக்கிய ஆய்வாளராய், மொழி பெயர்ப்பாளராய், மேடைப் பேச்சாளராய் சிறந்த கவிஞராய் மொழிப் போர்த் தளபதியாய் விளங்கியவர் இலக்குவனார். இவரால் தமிழுணர்வு ஊட்டப் பெற்று இவரிடம் பயின்றவர்களும், அமைச்சர்களாய், கட்சித் தலைவர்களாய், இவரைப் போன்றே மொழி ஆற்றல் பலவுடையராய்ச், சிறப்புற்றிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. இவர் தமிழுக்காக வாழ்ந்தவர், தனக்கென வாழ்ந்திலர்….
நூற்றாண்டு விழா நாயகர் பேரா. சி. இலக்குவனார் – நவீன்குமார்
நூற்றாண்டு விழா நாயகர் தமிழறிஞர் முனைவர் பேரா. சி. இலக்குவனார் ‘’தமிழில்லா வீட்டுக்கு நான் போக மாட்டேன்’’ என்பார் அறிவியக்கக் கவிஞர் சாலை இளந் திரையன். சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்று பாரதி பாடினான். தமிழைத் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினான். இப்படிப் பல்வகைச் செல்வமும் எழில் நலமும் படைத்த செம்மொழியான தமிழ், எண்ணற்ற இன்சுவை இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்புடைய சிறப்பும் பெற்று. உலகிலேயே முதல் கழகம் கண்ட பெருமையைக் கொண்டிலங்குகிறது. இத்தகைய தமிழை வளர்க்க, உய்விக்க தனது வாழ்நாளை…
இதழாளர் இலக்குவனார் வலியுறுத்தியவை
இதழாளர் இலக்குவனார் தாம் நடத்திய இதழ்கள் வாயிலாக வலியுறுத்தியவை 1. இனிய எளிய தமிழ் நடை. 2. அயல்மொழிக் கலப்பால் தமிழ் நாட்டின் எல்லை சுருங்கியதை உணர்ந்து பிறமொழிக் கலப்பு இன்றியே எழுத வேண்டும். 3. இந்தி முதன்மை தமிழுக்கே அழிவு. எப்பாடுபட்டேனும்இந்தி முதன்மையைத் தடுத்தல் வேண்டும். 4. ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்? எனவே இந்திய மொழிகள் அனைத்தும் இந்திமொழியாம் தேவநாகரியில் எழுதப்பட வேண்டும் என விதிக்கும்நடுவணரசின் முயற்சியை எப்பாடுபட்டேனும்…
தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன் ! – மா.கந்தையா
யார் இவர் ? ! ” தமிழைப் பழித்தவனை என்தாய் தடுத்தாலும் விடேன் எதிரிகள் கோடி இட்டு அழைத்தாலும் தொடேன் “ வஞ்சினம் கூறிய வாதில்புலவன் பாவேந்தர் வழிவந்த மறவன் தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன் ! சங்கத்துமது ரையில்தமிழைப் பங்கப்படுத்திப் பேசிய ஓங்குபுகழ் அறிஞரெனினும் ஒவ்வாதசொல் லைத்தாங்காது தமிழைப் பழித்தவர்க்கு தக்கறிவூட்டி கருத்தினை உமிழ்ந்து தள்ளியதற்கு ஓர்சான்று உண்டன்றோ ! விடுதலையான நம்நாட்டில் கெடுதலையேதரும் பொருள்நிலையை சடுதில்மாற்றி இந்தியநாடு சமநிலைகாண நிதிஅமைச்சராகவும் சர்ச்சிலொடு வாதிட்டுவென்று ‘சர்பட்டம் ‘ பெற்ற ஆர்….
செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்
செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் – இலக்குவனார் திருவள்ளுவன் உலகின் முதல் மொழியான தமிழ், உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்னும் செம்மைச்சிறப்புடன் தோன்றும் பொழுதே செம்மொழியாய் அமைந்தது. இருப்பினும் ஆங்கிலேயர் ஆட்சியில் செயற்கை மொழியான சமற்கிருதம் போன்றவற்றைச் செம்மொழி என்ற போர்வையில் ஊக்கப்படுத்தி வந்தது அரசு. ஆனால் உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கும் செம்மொழிக்குரிய அறிந்தேற்பு வழங்க வேண்டும் என நல்லறிஞர்கள் குரல் எழுப்பி வந்தனர். இதன் தொடர் நிகழ்வால் 12.10.2004 அன்று மத்திய அரசு தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பை வழங்கியது….
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை மாணவர் ஆற்றுப்படை என்னும் இக்கவியைப் பாடியவர் காலஞ் சென்ற பேராசிரியர் இலக்குவனார் ஆவர். செந்தமிழ்ப் பற்றும் நுண்மாண் நுழைபுலமும் நிரம்பப் பெற்றவர். தம் வாழ்க்கையைப் பெரிதெனக் கருதாதவர். தமிழ் மொழியின் வளர்ச்சியே தம்முடைய வாழ்வெனக் கருதி வாழ்ந்தவர். இடுக்கண் பல உற்ற போதும் எவர்க்கும் அஞ்சாது ஏறுபோல் வாழ்ந்து காட்டியவர். வறுமையிலும் வாய்மைநெறி போற்றிய செம்மல் அவர். பெரியார் ஈ.வே. ராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கையைப் பெரிதெனப் போற்றியவர். எழுத்திலும் பேச்சிலும்…
பாரதிதாசன் மகள் வசந்தா தண்டபாணி மறைவு
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகள் வசந்தா தண்டபாணி அவர்கள் மறைவு புதுவை: பாவேந்தர் பாரதிதாசனின் மகள் வசந்தா தண்டபாணி (84) உடல்நலக் குறைவு காரணமாக ஆவணி 28, 2045 / ஆக. 13 அன்று காலமானார். அவருக்கு அகவை 84. சரசுவதி, இரமணி, வசந்தா, மன்னர்மன்னன் ஆகிய மக்கள் பாவேந்தர் பாரதிதாசனுக்கு இருந்தனர். இவர்களில் மூன்றாம் மகள் இரமணி சிவசுப்ரமணியம் 1970- இல் காலமாகி விட்டார். பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி கண்ணப்பன் அவர்கள் தம் 92ஆம் அகவையில் கரூரில் 30.01.2012 இயற்கை…
சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!
மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…
தமிழ் நிலத்தில் தேன்மழை பொழிந்த சுரதா! – இலக்குவனார் திருவள்ளுவன்
தாய்மண்ணை வணங்குவதாக அனைவரும் கூறுவோம். ஆனால், உண்மையில் தாய்மண்ணைப் போற்றி வணங்கியவர் உண்டென்றால் அவர் உவமைக் கவிஞர் சுரதா ஒருவர்தான். தான் பிறந்த மண்ணையும் தமிழறிஞர்கள் பிறந்த ஊர் நிலத்தின் மண்ணையும் சேமித்து வணங்கியவர். தமிழறிஞர்கள் பிறந்த ஊர் தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார். ‘’அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன். என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலே மறைந்து விட்டார். சிறுகதை எழுத்தாளர் செகசிற்பியன் உவமைக்கவிஞர் பட்டத்தை இவருக்கு…
பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா
வாழ்த்துப் பேழை நூல் வெளியீடு பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா ஆனி 1, 2045 / 15.06.2014 ஞாயிறு காலை பத்து மணிக்கு நெல்லை சானகிராம் உணவக மிதிலை அரங்கில் நடைபெற்றது. வழக்கறிஞர் ப.தி.சிதம்பரம் தலைமை தாங்கினார். தமிழ்மாமணி சிதம்பரப் பாண்டியன் வரவேற்றுப் பேசினார். மேனாள் மாவட்ட ஆட்சியர் மாட்சிமிகு இலட்சுமிகாந்தன் பாரதி ”வாழ்த்துப் பேழை” நூலை வெளியிட்டுப் பேசினார். தேசியப் பாவலர் த.மு.சா.காசாமைதீன் முதற் சுவடியைப் பெற்றுக் கொண்டார். தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் அருள்மிகு அந்தோணிராசு முதலிய…
