காப்பியாற்றுப்படை – (உ)ருத்திரா

காப்பியாற்றுப்படை நெடுங்காந்தள் மூசிய அடைகரை அன்ன‌வால் இயற்றிய வளைஇளம் நெற்றிகண்விழித்தாங்கு மொழி ப‌டாத்து மடமைகாப்பியாறு இமிழ்தரு இன்னொலியின்கதுப்பு சிவந்தவள் மணிகிளர் காட்சி.கழைபடுத்த பாம்பின் நுண்ணுரி சுற்ற‌இலஞ்சி நீழல் குவி இணர் கவிக்க‌எழிலுண் மைக்கடல் எறிதிரை ஏய்ப்ப‌குணில் பாய் முரசம் உள்ளொலி எதிர‌மழைக்கண் கொண்டு பேய்வெள்ளருவிமலர் பொருது மற்று மண் பொருது இறங்கிபொறிப்பரல் முரல  நீர்வழி போன்ம்நீடிய நெஞ்சின் அளியவள் காட்சி.முதிர்கான் போழ்ந்த வெண்ணிய காலைமுழைகள் ஒளியும் அதிர்செவி முயலாய்காட்டி காட்டி மறைக்கும் மன்றிடைகள்ளநகையாள் அவிழ்தரும் நகையுடன்சிந்திய சொல்லில் வித்திய முதிர்நெல்விளைதரும் என்று பலவு வீழ்த்த‌படப்பை…

தமிழன் என்றோர் இனமுண்டு, தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு – க.பூரணச்சந்திரன்

தமிழன் என்றோர் இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். அந்தத் தனிப்பண்பு என்ன என்று நீண்டநாள் சிந்தித்துப் பார்த்ததுண்டு. கடைசியில், என் சிந்தனையில், அது ஓர் எதிர்மறைப் பண்பாகத்தான் இருக்கிறது. “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்று ஒரு சொலவடை வழங்கிவருகிறது. வந்தாரை வாழவைப்பது மட்டுமல்ல, வந்தவர்கள் ஒழுகலாறுகளையும்(கலாச்சாரத்தையும்) தங்களதாக ஏற்றுக்கொண்டு தங்கள் சொந்த ஒழுகலாறுகளைக் கோட்டைவிடுவதுதான் தமிழனின் தனிப்பண்பு. சமற்கிருதத்திற்கும் அதன் இலக்கிய இலக்கணத்துக்கும் தத்துவ வளத்திற்கும் தமிழ்…

மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்!,இலக்குவனார் திருவள்ளுவன்

சிறப்புக் கட்டுரை: மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்! மின்னம்பலம் மாதிரிப் பள்ளிகள் அமைக்க இருப்பது குறித்து அண்மையில் தமிழக முதல்வர் மு.க.தாலின் புதுதில்லியில் பேசியுள்ளார். புது தில்லி அரசின் மாதிரிப் பள்ளிகளையும் தமிழக முதல்வர் பார்வையிட்டுள்ளார். மத்திய அரசின் பள்ளிகள்போலும் நவோதயா பள்ளிகள் போலும் மாவட்டந்தோறும் சிறப்பான முன்முறைப்பள்ளிகளை நன்முறையில் அமைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். எனவே, முதல்வரின் இப்பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. “தமிழ்நாட்டுக் கல்வியகங்களில் இப்போதைய முறையிலான அயல்மொழிக்கல்வி முறை நிறுத்தப்பட வேண்டும். 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம்…

இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக!  “சமையல் குறிப்பாளர்களைத் தூக்கிலிடுக” என்று எழுத எண்ணினேன். அத்தகைய கடுஞ்சினத்திற்குக் காரணம் சமையல் குறிப்பு என்ற பெயரில் சமையல் பொருள்களை எல்லாம் இந்திச் சொற்களாலேயே குறிப்பிடுகின்றனர். . . . . . . . . . . . . . . . . . . எடுத்துக் காட்டிற்குச் சில குறிப்புகளைப் பார்ப்போம். “சுகர் பேசண்ட்சு”  “முளைத்த கிராம்சு, பச்சை மூங் பருப்பு”  “முளைத்த மேத்தி முளைத்த கிராம்சு”,  “முளைத்த மேத்தி…

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்: தமிழக அரசு அறிவித்தது சரியா?

by Inmathi Staff | டிசம்பர் 24, 2021 | பண்பாடு English தமிழ் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார். அவர் எழுதி 1891இல் வெளியான மனோன்மணீயம் என்ற நாடக நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள பாடலின் ஒரு பகுதிதான் நீராரும் கடலுடுத்த பாடல். தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் பாட வேண்டும் என்று கரந்தைத் தமிழ் சங்கத்தின் 1913ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில் இடம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 1914இல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் விழாக்களில் அந்தப் பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலைத்…

முனைவர் இரெ. குமரனின் பிற நூலறிவையும் தரும் திருக்குறள்-சிறப்புரை : முனைவர் பா.சம்புலிங்கம்

திருக்குறள்–சிறப்புரை : முனைவர் இரெ. குமரன் முனைவர் இரெ.குமரன் எழுதியுள்ள திருக்குறள்-சிறப்புரை என்னும் நூல் இலக்கியப்பொருளின் நோக்கில் உரையைக் கொண்டுள்ள நூலாகும். குறளின் வரிகளுக்கேற்ற வகையில் பொருண்மைக்கேற்றவாறு பிற தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோளுடன் புரிந்துகொள்ளும் வகையில் எளிய உரையுடன் 1330 குறளையும் ஆராய்ந்து எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உரைகள் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள், குறள் முதற் குறிப்பு அகர நிரல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. “திருக்குறள் சிறப்புரை என்றது, திருக்குறளின்…

தந்தை பெரியார் சிந்தனைகள் 16: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 15 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 16 2.  குமுகம்பற்றிய சிந்தனைகள்    அன்பு நிறைந்த தலைவர் அவர்களே,அறிஞர்பெருமக்களே,மாணாக்கச்செல்வங்களே. இன்றைய இரண்டாவது சொற்பொழிவு பெரியாரின் குமுக(சமூக)ச் சிந்தனைகளைப் பற்றியது. பேச்சில் நுழைவதற்குமுன் குமுகம் பற்றிய சில சொல்ல நினைக்கின்றேன். மனிதன் என்ற வாழும் உயிரியும்  அசைவிலியாகவும் தாவரமாகவும் நிலைத்திணையாகவும்(அசேதனமாகவும், தாவரமாகவும், அசரமாகவும்) இருந்த  பொருள்களிலிருந்தே படிப்படியாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கின்றான். இங்கு, புல்லாகிப் பூடாய்ப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லா மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்செல்லாஅ நின்றஇத்…

தந்தை பெரியார் சிந்தனைகள் 15: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 14 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 15 (4) பிராமணர்களின் மோசடித்தன்மை தொலைய வேண்டுமானால், இந்த நாட்டுமக்கள் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து தடுத்தாக வேண்டுமானால், மக்கள் எல்லோரும் ஒரே குலம் என்கிற நல்லுணர்ச்சியைக் கைக்கொள்ள வேண்டுமானால், உலகத்தில் மற்ற நாடுகளைப் போல் நாமும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், முதலில் மக்களுக்கிடையே பரப்பப்பெற்றிருக்கும் மதவுணர்ச்சி வேர்களுக்கு வெந்நீரை ஊற்ற வேண்டும். குருட்டுத்தனமான மதவுணர்ச்சியை வளர்க்கும் பண்டிகைகள் வெறுக்கப் பெறல் வேண்டும். அயோக்கியச் செயல்களுக்கெல்லாம் வளர்ப்புப் பண்ணைகளாயிருந்து மதப்போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் மடலாயங்கள் எல்லாம்…

தந்தை பெரியார் சிந்தனைகள் 14: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 13 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 14 2. சமயம் இவ்வுலகம் தோன்றியநாள் தொட்டு மக்களிடையே ஏதோ ஒருவகையில் சமயம் நிலவி வருகின்றது. மக்கள் அன்றாட வாழ்க்கை ஒழுங்கு பெறவிருக்கும் நன்னெறிகளின் தொகுதியே சமயம் ஆகும். நம் நாட்டில் நிலவும் சமயங்கள்; சைவம், வைணவம், புத்தம், சமணம் என்பவையாகும். நடைமுறையிலுள்ள மதம் அல்லது சமயத்தைப் பற்றிப் பெரியார் கூறுவது. (1) நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடம் மதம் என்னும் சீமைக்காரை (சிமெண்ட்டு) சுண்ணாம்பினால், கடவுள் என்னும் கற்களைக் கொண்டு…