எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! – நீரை. அத்திப்பூ

எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! வங்கியில் கணக்கு வை தம்பீ வாழ்க்கையில் உனக்குப் பலம் தம்பீ எங்கிருந்தாலும் சேமிப்பாய் எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! வீணாய்ச் செலவுகள் செய்யாதே வெற்றாய்ப் பொழுதைக் கழிக்காதே தானாய் வருமென நினைக்காதே தகுதி உயர்த்திட மறக்காதே! சிறுசிறு துளியே பெருவெள்ளம் சேர்த்துப் பார்த்தால் அது சொல்லும் வருமானத்தைப் பெருக்கிடுவாய் வாழ்வில் இமயப் புகழடைவாய்! இன்றே தொடங்கிடு சேமிப்பு இனிமை வாழ்வுடன் பூரிப்பு நன்றே நினைத்திடு வென்றிடுவாய் நாளைய தலைமை கொண்டிடுவாய்! – நீரை. அத்திப்பூ ஆசிரியர்: தகவல் முத்துகள் நீர்முளை அஞ்சல 614711 நாகை…

மனிதம் – கமலா சரசுவதி

மனிதம் தலை சுமந்து உயிர்காக்கும், தன்மையது நல் மனிதம் ! உயிர் கொடுத்து உயிர்காக்கும், உணர்வே நல் மனிதம் ! செருக் கொழிக்கும் சிந்தையது, சிகரம் கொள்ளும் மனிதம் ! முருகவிழும் மொட்டுப் போலே முகிழும் மனங்கொள் மனிதம் ! துயரம் நிறைந்தோர் துயரேதீர்க்க, துடிக்கும் மனமே மனிதம் ! தோல்வியுற்றோர் துவளா நிலையைத் தோற்றுவித்தல் நல் மனிதம் ! வீட்டுப்பெண்கள் கொண்ட கருத்தை விரும்பிக் கேட்டல் மனிதம்! கொல்லும் பகையே என்றபோதும், கொஞ்சம் மன்னித்தல் அதுமனிதம் !   – கமலா சரசுவதி…

காவேரியா…? அது பழைய நடிகையாச்சே! – த.இரெ.தமிழ் மணி

காவேரியா…? அது பழைய நடிகையாச்சே! இந்தி அரசே! கன்னட வெறியாட்டம் மறைக்க வேண்டுமா? பேரறிவாளனைத் தாக்கு! விக்னேசு எழுச்சி மறக்க வேண்டுமா? இராம்குமாரை முடி! வாக்காளர்களே! என விளி! புலால் உணவுப் பொட்டலத்தையும் சாராயத்தையும் கண்ணில்காட்டு! பிறகு சொல்லுவான்- “காவேரியா…? அது பழைய நடிகையாச்சே?” த.இரெ.தமிழ் மணி

இயற்கையான வளர்ச்சியை இடையிலே நிறுத்தாதே! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

இயற்கையான வளர்ச்சியை இடையிலே நிறுத்தாதே! பேதைப் பருவத்தில் காதைத் திருகாதே! வாதைச் செய்தேயவர் வசந்தம் திருடாதே! பாதை பள்ளம் கல்லுமுள்ளு ஓடட்டும் ! மேதை மேன்மை இங்கே ஆரம்பிக்கப்படும்! மரம் ஏறியே மார்பு தேயட்டும்! கரம் சிறாய்ப்பு வலியும் அறியட்டும்! நீச்சல் அவசியம் கற்றுத் தேறட்டும்! காய்ச்சல் வந்தாலும் மழையில் நனையட்டும்! மேய்ச்சல் மாடுகளை ஓட்டி மகிழட்டும்! பாய்ச்சல் செய்தே ஆற்றில் நீந்தட்டும்! சாளரச் சிறை ஞாயிறாவது திறக்கட்டும்! காலற ஓடியாடி ஆனந்தமாய் ஆடட்டும்! பாலர் காலம் நினைவில் பதியட்டும்! கோளாறு செய்யாதே இயற்கையா…

சிறகுகள் தேவையில்லை – மரு.பாலசுப்பிரமணியன்

பறக்கத் துணிந்தவர்க்கு இறகுகள் பாரமில்லை சிறக்கத் துணிந்தவர்க்கு சிறகுகள் தேவையில்லை இறக்கத் துணிந்தவர்க்கு மரணமொரு அச்சமில்லை துற‌க்கத் துணிந்தவர்க்குத் துணியுமொரு மானமில்லை மறக்கத் துணிந்தவருக்குப் தோல்வியொரு துக்கமில்லை நடக்கத் துணிந்தவர்க்குப் பாதையொரு தூரமில்லை அடக்கத் துணிந்தவர்க்குக் காமமொரு கடினமில்லை மடக்கத் துணிந்தவர்க்கு நாவுமொரு நீளமில்லை படிக்கத் துணிந்தவர்க்கு வறுமையொரு விலக்கில்லை முடிக்கத் துணிந்தவர்க்கு யுத்தமொரு சத்தமில்லை அகழத் துணிந்தவனுக்கு அடர்பாறையொரு தடையில்லை பழகத் துணிந்தவனுக்கு மொழியுமொரு தடங்கலில்லை கொடுக்கத் துணிந்தவனுக்கு பொருளொரு குறையில்லை தடுக்கத் துணிந்தவனுக்குப் புனலுமொரு பொருட்டில்லை வாழ்த்தத் துணிந்தவனுக்கு வார்த்தையொரு பஞ்சமில்லை…

இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? – தமிழ்நெஞ்சன்

இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? காலில் முள் குத்தினால் கைபோகும் எடுக்க கண்களில் கண்ணீர் வரும் வலி உணர்த்தும் மூளை இது உடலியக்கம் உயிரியக்கம் ஆனால் இந்தியா ஒரே நாடு என்றே கூப்பாடு இருந்தும் ஏன்வரவில்லை காவிரி? பாலாறு? முல்லை பெரியாறு? இந்தியா நாடல்ல துணைக்கண்டம் தமிழகம் மாநிலமல்ல தனிநாடு ஒரேநாடென்றால் கருநாடகாவில் இருந்து தமிழன் ஏதிலியாய் தமிழ்நாட்டிற்கு வருவதேன்? ஆங்கிலேயன் வருவதற்கு முன் இந்தியா இல்லை 56 தேசமாக இருந்தது இந்து ×தமிழன் இந்தி ×தமிழ்மொழி இந்தியா × தமிழ்நாடு…

சந்தம் ஒலிக்கும் செந்தமிழே! – தாமோதரன் கபாலி

சந்தம் ஒலிக்கும் செந்தமிழே!   முத்து முத்தாய்த் தமிழ்ச்சொற்கள் முந்தும் உயிரை அரவணைக்கும் கொத்துக் கொத்தாய்ப் பெரும்வினைகள் கொள்ளும் உயிரைக் கடைத்தேற்றும் சித்துச் சித்தாய் அகமடங்க திங்கள் ஒளியாய்க் குளிர்விக்கும் சத்துச் சத்தாய் உயிர்க்கலந்து சந்தம் ஒலிக்கும் செந்தமிழே! தாமோதரன் கபாலி

குவிக்க வேண்டும் தமிழ்ச்செல்வம்! – தாமோதரன் கபாலி

குவிக்க வேண்டும் தமிழ்ச்செல்வம்! தமிழில் பேசு கலப்பின்றித் தவமாய்க் கொண்டு பழகிடவே சிமிழில் ஒளிரும் முத்தாகும் சிந்தை மகிழும் ஒளிக்காணும் குமிழைப் போன்ற வாழ்வினிலே குவிக்க வேண்டும் தமிழ்ச்செல்வம் அமிழ்தாய் மாறி உயிரினிலே அடங்கும் பொலிவைக் காண்போமே! தாமோதரன் கபாலி

விதைக்க மறந்த மனித நேயம் – கு. நா. கவின்முருகு

விதைக்க மறந்த மனித நேயம் எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா சந்தையெனக் கல்வியாகித் திருட்டுக் கொள்ளை சாதிமதச் சண்டைகளும் மனிதம் கொல்ல எந்தத்திசை போகிறது மக்கள் கூட்டம் ஏனிந்த மிருகத்தோல் மனிதன் போட்டான் வந்துதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி மனிதனிலே பார்த்துத்தானோ இனியும் தோன்றும்? உடன்பிறந்து வாழ்ந்துவரும் உனது இரத்தம் ஊன்தின்னி யென்றான வேங்கை யர்கள் தடம்பதிக்க அறிவுகொள்ள கல்வி உண்டு சாக்கடையில் கரைத்துவிட்டான் கற்ற யெல்லாம் வடம்பிடித்து இழுப்பாரோ இனியும் நாட்டை வளங்காண மனிதநேயம் பெருகி யோட…

தானே அருள்வாள் தமிழன்னை! – தாமோதரன் கபாலி

தானே அருள்வாள் தமிழன்னை! தமிழன் னையைக் கைவிடாதே தாங்கி உயிரை அணைப்பவளாம்! அமிழ்தக் கலசம் கையேந்தி அன்பு கலந்து கொடுப்பவளாம்! குமிழைப் போன்ற வாழ்க்கையிலே குன்றா விளக்காய் ஒளிதருவாள்! தமிழில் பாடி மனமுருக தானே அருள்வாள் தமிழன்னை! தாமோதரன் கபாலி

யாரெல்லாம் தமிழரையா? – தாமோதரன் கபாலி

யாரெல்லாம் தமிழரையா? யாரெல்லாம் தமிழரையா? அகமறியச் சொல்வீர்! ஐயமின்றிச் சுவைத்துணர்வார் ஆரமுதாம் தமிழை! ஊரெல்லாம் உண்டிடவே உளம்நிறைந்து அழைப்பார்! ஒண்டமிழில் ஓங்கிடவே ஒருமையிலே திளைப்பார்! பேரெல்லாம் நற்றமிழில் பெருகிடவே உரைப்பார்! பிறந்திட்டத் தவப்பயனைப் பெருமையென மகிழ்வார்! பாரெல்லாம் செந்தமிழைப் பரப்பிடவே திகழ்வார்! பண்புடனே நம்மையெல்லாம் பார்த்திடவே அருள்வார்!   தாமோதரன் கபாலி

இறப்பின்றி வாழலாம் வா! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

இறப்பின்றி வாழலாம் வா! பட்டுப்போன பனை மரமும் கிளிகளுக்கும் ஆந்தை மரங்கொத்திக்கும் வாழப் பொந்தாகிறது ஏ….மாந்தனே! உயிர்விட்டுப் போனபின் மண்ணோடு மண்ணாகிறாய் இல்லெனில் நெருப்பில் சாம்பலாகிறாய் நீ நினைத்தால் கண்ணற்றவர்களுக்குக் கண்ணாகலாம் மீண்டும் இவ்வுலகை நீ பார்க்கலாம் இருக்கும் போது குருதிக் கொடை இறந்த பின்னர் உறுப்புக் கொடை வள்ளல் ஆகலாம் வா! புதுவைத் தமிழ்நெஞ்சன்