உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது
உலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா
கார்த்திகை 1, 2050 / நவம்பர் 17, 2019 : மணியம்மையார் குளிரரங்கம், பெரியார் திடல், சென்னை 7
உலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி
மின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்
பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை முன்னிட்டு மின் ஆய்விதழ் ‘செந்தமிழியல்’ வெளியீடு எதிர்வரும் கார்த்திகை 01, 2050 / 17.11.2019 தமிழ்மொழி மீட்புப் போராளி செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் ஐயா அவர்களின் 110ஆவது பிறந்தநாளாகும். இவர் தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். ஐயாவின் பிறந்தநாள் முன்னிட்டு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ‘செந்தமிழியல்’ எனும் பன்னாட்டுத் தரப்பாட்டு வரிசை எண்ணிற்கு இணங்க மின்னிதழ்…
உலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள் 666) உலகத் தமிழ் நாள் கட்டுரைப் போட்டி 30 பரிசுகள் தமிழ்க்காப்புக்கழகம் தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கார்த்திகை 01 / நவம்பர் 17 அன்று சென்னையில் உலகத் தமிழ் நாள் கொண்டாட உள்ளது. அதை முன்னிட்டுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். விவரம் வருமாறு: தலைப்பு: உயர்தனிச்செந்தமிழ் மொழியை உலகெங்கும் பரப்புவோம்! தமிழ்நாட்டில் தமிழ் கல்விமொழி, ஆட்சி மொழி,அலுவலக மொழி, வழிபாட்டு மொழி, இசை மொழி, அன்றாடப் பயன்பாட்டு மொழி…
தொல்லியல் துறை: பொழிவு-முனைவர் முருகையன், பிரான்சு
ஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை! இராசீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக 28 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவைத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து ஏற்க மறுப்பதாகச் செய்திகள் வருகின்றன. எழுத்து வடிவில் இல்லையென்றாலும், வாய் மொழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் புரோகித்து தன்னுடைய இந்த முடிவைத் தெரிவித்து விட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன….
இலக்கியத் தேடல், பிரான்சு
நவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
நவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்! உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாள் கொண்டாடத் தமிழக அரசு உலகத் தமிழ்நாளை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைப்பற்றித் தெரிவிக்கும் முன்னர் ‘இந்தி நாள்’ குறித்து அறிந்து கொள்வோம்! ஒவ்வோர் ஆண்டும் செப்.14 இந்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. “இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக, 1949 ஆம் ஆண்டு செப். 14 அன்று ஏற்றது. அதற்காக, இந்தியை அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்துவதை ஊக்கப்படுத்துவதற்காக இந்நாள்” என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் ஆட்சி மொழித் துறை…
குவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு
வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் குவைத்தில் வெளியீடு புரட்டாசி 17, 2050 / 04.010.2019. மாலை ‘கல்தா’ திரைப்படப் பாடலின் இசை வெளியீடு மிகச் சிறப்பாக அரங்கம் நிறைந்த குவைத்து வாழ் தமிழர்களின் முன்னிலையில் பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோடு நடந்தேறியது. இத்திரைப் படத்தின் இயக்குநர் திரு. அரி உத்திரா, ஏற்கெனவே தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும் எனும் இரண்டு சமூகப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாகச் சிவநிசாந்து, கதாநாயகியாக அயிரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தக் கல்தா திரைப்படத்தின் “கண்ணான கண்ணுக்குள்ள”…
ஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது
ஆர்சாவில் தமிழக இளைஞர் சே.ஆசிக்கு அகமது விருது பெற்றார்! ஆர்சா இந்தியச் சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் சே.ஆசிக்கு அகமது பொது நலச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். சே.ஆசிக்கு அகமது திருச்சி சமால் முகம்மது கல்லூரியில் இளநிலை வேதியியல் பட்டம் பயின்றவர். தற்போது சார்சாவில் உள்ள குவைத்து மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியின் ஒரு பகுதியாக எதிர்பாராத நிலையில் மரணமடைபவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றி சார்சாவில் நல்லடக்கம் செய்யவோ சொந்த…
திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை!
திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை! தில்லியில் கடந்த 23,24 ஆம் நாள்களில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் நிறைவு விழாவிலும் தன்னார்வத்துடன் பங்கேற்றார். அப்போது அவர் “பிரான்சில் 06., 07.08.2020 இல் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அரசு நிதி யுதவி செய்யும். இந்த மாநாடு முடிந்து விட்டாலும் சிறிய அளவு உதவியேனும் செய்வோம். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு…
