துபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்
துபாய் ஈமான் அமைப்பு இரத்தத்தான முகாம் புரட்டாசி 26, 2049 வெள்ளிக்கிழமை அட்டோபர் 12, 2018 காலை 10.00 முதல் 2.00 வரை திறன் மண்டல(talent zone)நிறுவனம், என்.எம்.சி. மருத்துவமனை பின்புறம் துபாய் அல் நக்தா பகுதி இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும். தொடர்பு எண்கள் 050 51 96 433 / 055 84 22 977 / 055 405 88 95
துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்
துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள் ஏறத்தாழ நூறாயிரம் உரூபாய் வரை பணத்தை முகவர்களிடம் செலுத்தி துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குப் பின்வருவோர் வந்தனர். மாரிமுத்து த/பெ காத்தமுத்து – பட்டுக்கோட்டை அருகில் உள்ள புதுப்பட்டிணம் ஆதம் பாவா த/பெ கிருது ஒலி – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டை இருவரும் தாங்கள் பார்த்து வந்த நிறுவனத்தில் சம்பளம் சரிவர வழங்காததால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து விட்டனர். தற்போது தங்க இடமும், உணவும் இல்லாமல் அல்லல்பட்டு வருகின்றனர். இதனால்…
ஓமானில் பாரதி விழா
ஓமானில் பாரதி விழா கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்! என்ற பாரதியின் கனவை, வள்ளுவர் நிறைவேற்ற பராசக்தி அருள் புரிந்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா? ஆம்! கடந்த புரட்டாசி 4, 2049 (20-9-2018) வியாழன் மாலை ‘பாரதி யார்?’ எனும் மேடை நாடகம், மசுகட்டு மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் கபூசு பின் செய்யது அவர்களின் அருளோடும், வாழ்த்தோடும், அனைத்து மக்களின் ஆதரவோடும், மசுகட்டு நகரில் கோலாகலமாக அரங்கேறியது! எசு.பி.படைப்பாளர்(SB Creations) இயக்குநர் இராமன் குழுவினர் இசைக்கவி இரமணனுடன் னமும்,…
தாவீது நோர்த்து உரைகள் – பேராதனை & கொழும்பு
புரட்டாசி 17, 2049 புதன் அட்டோபர் 03, 2018 மாலை 4.30 பேராதனை பல்கலைக்கழகக் கலையகம் புரட்டாசி 21, 2049 புதன் அட்டோபர் 07, 2018 மாலை 4.30 கொழும்பு புதிய நகர மண்டபம் தாவீது நோர்த்து உரைகள் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஐந்தாவது தேசியப் பேராயத்திற்கு வழங்கிய தொடக்க அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) ஐந்தாவது தேசியப் பேராயத் தீர்மானம் நான்காம் குழுவின் அனைத்துலக வலைத்தளம்
திலீபன் மண்ணுக்காக இறந்தான் – மேதகு பிரபாகரன்
திலீபன் மண்ணுக்காக இறந்தான் – உயிர்க்கொடையின்பொழுது மேதகு பிரபாகரன் விடுத்த செய்தி “எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான ஈகங்களைச் செய்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. இவையெல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள். ஆனால், எனது அன்பான தோழன் திலீபனின் ஈகமோ-தியாகமோ வித்தியாசமானது, வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. அமைதிப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஈகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி….
பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு
புரட்டாசி 07, 2049 / 23.09.2018 மாலை 03.00 உலகத் தமிழ்ச்சங்க இலக்கண விருது பெற்ற பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு பிரெஞ்சு இந்தியச் சங்கங்கள்
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ, 2019
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ [32 ஆம் பேரவைத்தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா] ஆனி – 18-22, தி.பி. 2050 / புதன் – ஞாயிறு / சூலை 3 – 7, 2019 விவரங்களுக்கு : icsts10.org / www.iatrnew.org / iatr2019@fetna.org
எம்மை மகிழ்விப்பாய்! – இளவல்
எம்மை மகிழ்விப்பாய்! என் எழுதுகோல் களத்தில் உன்பெயர்தான் முளைக்கிறது என் இதழ்ச் செடியில் உன்பெயர்தான் பூக்கிறது என் மன ஊஞ்சலில் உன்பெயர்தான் ஆடுகிறது என் கண்ஆடிகளில் உன்பெயர்தான் தெரிகிறது என் செவி மணிகளில் உன்பெயர்தான் ஒலிக்கிறது என் புத்தகத் தோட்டத்தில் உன்பெயர்தான் மணக்கிறது என் இல்லக் கோயிலில் உன்பெயர்தான் குடியுள்ளது என் எண்ண வானத்தில் உன்பெயர்தான் பறக்கிறது என் வாணாளில் நீ வந்து எம்மை மகிழ்விப்பாய்! – இளவல்
எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! – குவியாடி, தினசரி
எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! எழுவர் விடுதலையை ஆதரிப்போர் குறித்துக் குறை கூற வேண்டுமா என எண்ணலாம். வரவேற்பவர்களை வாழ்த்த வேண்டாவா எனக் கருதலாம். ஆனால் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் வந்தபொழுது எதிராக நடந்துவிட்டு இப்பொழுது விடுதலைக்குக் குரல் கொடுக்கும் நாடகத்தை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்! உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் 18.04.2014 அன்று மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர், தான் ஓய்வு பெறவுள்ள 25ஆம் நாளுக்குள்…
தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : வி.உருத்திரகுமாரன் !
விடுதலைப்புலிகளின் தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : தலைமையர் வி.உருத்திரகுமாரன் ! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் (United Nations) ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை. ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பெருவிருப்பாக அமைகின்ற தமிழீழத்தைக் கொள்கையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், அக்கொள்கைக்காக எங்கும் தடை செய்யப்படவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு தனது அரசென்னும் தகுதியின் மூலம் அனைத்துலகப் பரப்பில் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நெறிபிறழ்ந்த பயரங்கவாதச் செயலாகப் படம்பிடித்துக் காட்ட முயன்றது…
மாணாக்கர் நலனுக்கான திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் கல்வி இரவு 2018
திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி இரவு 2018 திருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழக இசைவு பெற்றுப் பண வசதியின்மையால் படிப்பைத் தொடரமுடியாத நிலையில் மாணவர் பலர் உள்ளனர். இவர்கள் கல்வியைத் தொடர நிதி சேர்க்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி இரவு 2018 என்னும் பெயரிலான நிதிசேர் விருந்து ஆவணி 08, 2049 – 2018.08.24ஆம் நாள் மாலை 6.3௦மணி முதல் இரவு 9.௦௦ மணிவரை நடைபெற்றது. திருகோணமலை நகருக்கு அண்மையில் அமைந்துள்ள இலட்சுமி நாராயணன் கோவில் …
கவியரங்கம், அக்கரைப்பற்று, ஈழம்
ஆவணி 09, 2048 /ஞாயிறு / 09.09.2018 தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை தொடக்க விழா இலங்கை
