ஈழவேட்கை கொல்லும் நச்சு ஊசிகள்! முடமாகும் ஈழத் தமிழினம்!

ஈழவேட்கை கொல்லும் நச்சு ஊசிகள்! முடமாகும் ஈழத் தமிழினம்! ஈழத்தில் இருந்து இழவுச் செய்தி வந்திருக்கிறது. வேறு என்ன செய்தி வரும்? ஏதிலியர் (அகதிகள்) முகாம்களில் இருந்தும் மறுவாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட முன்னாள் போராளிகள், இனம் காண முடியாத நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கொடூரமான செய்தி. இப்படி 103 பேர் இதுவரை இறந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்… ஆனால், இந்த இனம் புரியாச் சாவுகளின் பின்னணியில்…

இந்தத் தமிழர்களுக்காகவும் பேசுவோம்! – ந.அருண் பிரகாசு இராசு

இந்தத் தமிழர்களுக்காகவும் பேசுவோம்!    ‘2016, ஆகத்து ஒன்றாம் நாள், ஏதிலியர்(அகதிகள்) முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்களுக்குக் குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினார்கள்’ என்ற செய்தியை இணையத்தில் படித்தபொழுது எனக்கு ‘வேடர் குடியிருப்பு’ நினைவிற்கு வந்தது.   மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கிறது வேடர் குடியிருப்பு. தமிழ்நாட்டில் இருக்கும் 107 ஏதிலியர் முகாம்களில் ஒன்றுதான் இதுவும். ஒரு சிற்றூரைப் (குக்கிராமத்தை) போலத் தோற்றம் அளிக்கும் இவ்விடம், ஒரு திறந்தவெளிச் சிறைக்கூடம். மொத்தம் அறுபது குடும்பங்கள் இருக்கும்….

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இரண்டு மிதிவண்டிகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இரண்டு  மிதிவண்டிகள் அன்பளிப்பு  எமது புலம்பெயர் உறவான  இலண்டன்  மாநகரைச் சேர்ந்த  சந்தியா, தன் 12 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு  இரண்டு மாணவிகளுக்குப் புதிய  மிதிவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார்.   மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின்  பரிந்துரையின் கீழ் வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்து வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்க முன்னாள் தலைவரும், கனடா கிளைச் சங்க முன்னாள் தலைவரும்…

மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரிக்கு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் திடீர் வருகை

அருவினைகள் படைக்கும் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரிக்கு மாகாணக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் திடீர்  வருகை   மலையகத்தில் காணப்படும் தேசியக் கல்லூரிகளில் நிலவும் நிருவாகச் சீர்கேடுகளினால் மலையத்திற்கான தேசியக் கல்வியற் கல்லூரிகளின் எதிர்காலம் குறித்துக் கவலை அடைய வேண்டிய நிலை யாவரும் அறிந்ததே! இதற்குக் காரணம் கல்லூரியின்  முதன்மை குறித்து அக்கரை இன்றிச் செயலாட்சியர் செயற்பட்டமையாகும் என்று  அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  இப்போது இந்தக் கல்வியற் கல்லூரியின் செயற்பாடுகள் ஒரளவு மாற்றத்தைக் கொண்டிருந்தாலும் இன்றும்  சில மாதங்களில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு …

பெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை

பெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் படைத்தரப்பினரது செயற்பாடுகள் அமைந்து வருவதாகவும் இதற்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் உறுதுணை புரிந்து வருவதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றசெய்தியானது பல்வேறு வகைகளில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து வருகின்றது. (இனப்படுகொலைப்) போர் நிகழ்ந்த காலத்தை விடவும் தற்போது பல பகுதிகளிலும் திடீர் திடீரென புத்தர் சிலைகள் முளைத்து வருகின்றன. வவுனியாவிலிருந்து ‘ஏ–9’ வழியாக யாழ்ப்பாணத்தை நோக்கிச்…

மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08

(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07 தொடர்ச்சி) மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!)   ‘மரணம்’ – ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத் தருணம் என்பதை அறிவேன்.   ஆனால், வாழ்வைத் தொடங்கும் முன்பே திடீரென ஒரு நாள் அது என் முன்பு…

பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன – கல்வியமைச்சர் வேலுசாமி

பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக 100 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன  மாகாணக்கல்வியமைச்சர் வேலுசாமி  இலங்கையில் எதிர்காலத்தில்  ஆதாய நோக்கத்துடன்  தொடங்கப்படும் வணிக நிலையங்களைப்போலப் பன்னாட்டுப் பாடசாலைகளைத் தொடங்க முடியாது. பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக கல்வி அமைச்சுப் புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு எற்பாடுகளை மேற்கொண்டுள்ளது  பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாகத் தனக்கு 100 மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என  மாகாணக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தெரிவித்துள்ளார். பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும்  சிறப்புக் கூட்டம்  ஆக.11.2016   மாணாகக்கல்வி  அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தலைமையில் மாணாகக்கல்வி…

தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்துக் கொண்டார்!

பதுளையிலுள்ள தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்து(அபகரித்து)க் கொண்டார்! செயலணியில் முறைப்பாடு ஊவா மாகாணம் பதுளையிலுள்ள தங்களது காணிகள் புத்தத்த துறவியால் பறிக்கப்பட்டிருப்பதோடு, மட்டக்களப்பிற்கு ஏதிலியராக (அகதியாக) வந்து 33 ஆண்டுகள் கழிந்தும், வாழ வீடு கிடைக்கவில்லை என்று பெருந்தோட்டப் பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.   நல்லிணக்க முயற்சியின்பொழுது தமிழ்க் குமுகம்(சமூகம்) நிகருரிமை(சமவுரிமை) பெற்று அனைத்து நலங்களுடனும் வளங்களுடனும் வாழ வழி வகை செய்ய வேண்டும் எனக் கோருகின்றோம்.   1983ஆம் ஆண்டு சூலைக் கலவரத்தில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் வாழும்…

கவிதை படியுங்கள் ! தங்கம் பிடியுங்கள் !!

கவிதை படியுங்கள் ! தங்கம் பிடியுங்கள் !! பேரன்புடையீர் வணக்கம்.   எதிர்வரும்  ஆவணி 31,2047 / செத்தம்பர் 16, 2016, வெள்ளிக்கிழமை குவைத்து வளைகுடா வானம்பாடி நடத்த இருக்கின்ற “வெள்ளிவிழா கண்ட வெற்றித்தமிழ்க் கலைவிழா-2016” என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணமாகவும், குவைத்தில் மேலும் கவிஞர்களை ஊக்குவிக்கும்  வகையாகவும்ம் ”மேத்தன்” நிறுவனத்துடன் சேர்ந்து வளைகுடா வானம்பாடி சிறப்புப் போட்டிக் கவியரங்கத்தை நடத்த இருக்கிறது. இந்த மாதம் 26 அன்று நடக்கவிருக்கும் இந்தக் கவியரங்கப்போட்டியின் இடம், நேரம் மிக விரைவில் அறிவிக்கப்படும்….

தமிழக இளைஞர் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு உதவிடக் கோரிக்கை

இராசல் கைமா  மருத்துவமனையில் தமிழக இளைஞர் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு உதவிடக் கோரிக்கை   இராசல் கைமா :இராசல் கைமாவில் உள்ள சைப்  மருத்துவமனையில்  தமிழக இளைஞர்  இராசு ஞானமுத்து(அகவை 41)  சேர்க்கப்பட்டுள்ளார். அவரைச் சொந்த ஊருக்கு  அனுப்பி வைக்க  வாய்ப்பு உள்ளவர்கள் உதவிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகில் உள்ள அனகூட்டம் விளையைச் சேர்ந்தவர் இராசு ஞானமுத்து. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்குள்ள சிறிய உணவகத்திற்கு  வேலைக்காக வந்தார் இராசு ஞானமுத்து.   திடீரென இவருக்கு வாதம்போல்…

கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’!

கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’!  தேசியத் தமிழ் மொழி நாள் விழாவைக் கண்டி மாநகரில் கொண்டாடுவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய அளவில் காணப்படும் தமிழ் மொழி மூலமான கல்விக்கூடங்களுக்கிடையில் தமிழ் மொழி தொடர்பான போட்டிகள் வலய மாகாண அளவிலும் தேசிய அளவிலும் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசியத் தமிழ் மொழி நாளும் கண்டி மாநகரில் வெகு கோலாகலமாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தேசியத் தமிழ் மொழி நாள் விழா…

மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது கொட்டக்கலை மகளிர் அணி

மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது கொட்டக்கலை மகளிர் அணி!   ‘அடையாளம்’ எனும் தொண்டு நிறுவனமும் ‘தாமரைக்குளம்’ பதிவர் சங்கமும் இணைந்து நானுஓயா நாவலர் கல்லூரியில் நடாத்திய மகளிருக்கான மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியின் மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தைக் கொட்டக்கலை உ.தொ.ம.(g.t.c.) மகளிர் அணி வெற்றி கொண்டது. நானுஓயா தாச்மகால் அணி இரண்டாம் இடத்தையும் நுவரெலியா மிசுரோ உயர்மன்னர்(சூப்பர் கிங்சு) அணி மூன்றாம் இடத்தையும் அடைந்தன.  முதலாம் இடம்பிடித்த அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 10,000 உரூபாய்ப் பணப் பரிசும் அளிக்கப்பட்டன. இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு வெற்றிக்…