தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தமிழ்க் கூட்டமைப்பின் அலட்சியப் போக்கு

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தமிழ்க் கூட்டமைப்பின் அலட்சியப் போக்கு: குற்றச்சாட்டு     தமிழ் மக்களின்  சார்பாளர்களான தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பினர், அரசியல் கைதிகளை விடுப்பதில் வலுவான எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமை குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு இன்று கொழும்பில்  தொடங்கிய கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கையின் போதே  இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்க்…

துபாய் (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் , கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம்

துபாய் :  துபாய்   (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் , கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது.   அதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சி கடந்த 2 ஆம்  நாள் கல்ஃப்   முன்முறைப் பள்ளியில் நடை பெற்றது. ,,சிறுவர் சிறுமிகள் ஆடல் பாடலுடன் இசைக்கருவிகளையும் வாசித்து வந்திருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள். மேலும் இங்கு தொடர்ச்சியாகப் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களில் சில பதிவிசை(கரோக்கி)யுடன் இணைந்து பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். மேலும் இந்தப் பள்ளியின் நடன ஆசிரியர்கள்  ஐதர்,  மற்றும் …

நீதி தோற்றுவிடக்கூடாது! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! – இறுதி

(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி!- பாகம் – 10 தொடர்ச்சி) நீதி தோற்றுவிடக்கூடாது! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! – இறுதி வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! நிறைய உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றுதான் இந்தத் தொடரின் தொடக்கத்தில் நினைத்தேன். நடைமுறைச் சிக்கல்கள் அதற்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பது தெரிந்தேதான் அவ்வாறு ஆசைப்பட்டேன். இருப்பினும், அந்த இடையூறுகளை என்னால் கடக்க முடியவில்லை. அந்தத் தடைகளை…

சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! இருப்பினும் மன்னிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! இருப்பினும் மன்னிப்போம்!   இயக்குநர், நடிகர், படஆக்குநர் என்ற முறையில் சேரன் மக்களால் நேசிக்கப்பெறும் கலைஞர்; தம் படங்களுக்கு மூன்று தேசிய விருதுகள் பெற்றவர் என்ற முறையில் அரசாலும் போற்றப்படுபவர்; ஈழத்தமிழர் நலன் சார்ந்த உரை யாற்றி உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்களின் பரிவிற்கும் பாத்திரமானவர். தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். (திருவள்ளுவர், திருக்குறள் 104)  நமக்குப் பிறர் செய்யும் உதவி மிகச்சிறிய தினை  அளவாக இருப்பினும் அதனை நாம் மிகப்பெரிய பனை அளவாகக்…

மனச்சான்று உள்ளவர்கள் விடை சொல்லட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி!- பாகம் – 10

(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம் – 09 தொடர்ச்சி) மனச்சான்று உள்ளவர்கள் விடை சொல்லட்டும்! பேரறிவாளன்  குறிப்பேடு! தொடரும் வலி!- பாகம் – 10 வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது இந்திய அரசியல்யாப்பின் பிரிவு 14. உண்மையில் சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதானா என்பது, சாமான்ய இந்தியனின் கேள்வியாக எப்போதுமே இருந்து வருகிறது.   மறைந்த மனித உரிமைப் போராளியும்…

தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்!

தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்! ஆங்காங்கு நாட்டில் தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி! ஆங்காங்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்.   தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்காங்கு நாட்டின் பதிவு பெற்ற பொறியாளரும், தமிழ்க் குமுகத்தின் (சமூகத்தின்) புள்ளியுமான மு.இராமநாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.   நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சஞ்சீவு வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆங்காங்கு நாட்டில் பதிவு பெற்ற…

இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே? – கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

அனைத்துலகக் காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதிகோரி காலை 10:30 மணிக்கு, அடையாறு ஐ.நா. (கஅபபஅ /யுனெசுகோ) அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.       இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே?    அனைத்துலகக் காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஒவ்வோர் ஆண்டும் ஆகத்து 30 ஆம் நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது. கோசுடோரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமல் போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of…

கண்டுபிடி! விடுதலை செய்! சதிக்கு முடிவு கட்டு! – ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள்

வருகிற ஆவணி 14, 2047 / ஆகத்து 30 ஆம் நாள் அன்று, உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஈழமண்ணில் வாழவழியின்றித் தவிக்கும் தமிழர்களிடையே,  காணாமல் போனவர்களைக் கண்டுபிடி! தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்! நஞ்சூட்டப்பட்ட  மேனாள் போராளிகளைக் கொலை செய்யும் சதிக்கு முடிவு கட்டு! என ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார்கள். நாமும் பல்வேறு வகைகளில் இத்தகைய  கோரிக்கைகளை வலியுறுத்த, தெருவுக்கு வருவோம்.    அன்புள்ள தமிழினியன். அமைப்பாளர் தமிழீழ மக்கள் தோழமை மையம். 345அ, வந்தவாசி சாலை மாத்தூர் வெம்பாக்கம்…

முதலில் செவாலியர் விருது பெற்ற தமிழ் நாட்டவர் யார்? – இலக்குவனார் திருவள்ளுவன்

முதலில் செவாலியர் விருது பெற்ற தமிழ் நாட்டவர் யார்?   கடலை முதலில் பார்க்கும் குழந்தை என் பொம்மையைப்போலவே கடல் நீல நிறமாக உள்ளது எனக் கூறுவதுபோல்தான் நாம்அனைவரும் அவரவர் நிலையிலேயே அனைத்தையும் பார்க்கிறோம். எனவேதான்  ஒரு நிகழ்வோ அருவினையோ நடக்கும் பொழுது முந்தைய வரலாற்றை அறியும் ஆர்வமற்றவர்களாக, ஏதும் முன் நிகழ்வு உள்ளதா எனப் பார்க்கும் தேடுதல் உணர்வு இல்லாதவராக நடந்து கொள்கிறோம். அதுபோன்ற விளைவுதான் சான்றோன்(செவாலியர்) பாராட்டிதழ் பற்றியது. செவாலியர்  பாராட்டிதழ் வழங்குவது என்பது நெப்போலியனால்(Napoléon Bonaparte) 1802ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது….

கேட்பது உயிர் பிச்சையல்ல, மறுக்கப்பட்ட நீதி! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம் – 09

 (பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08 தொடர்ச்சி) கேட்பது உயிர் பிச்சையல்ல, மறுக்கப்பட்ட நீதி! பேரறிவாளன்  குறிப்பேடு! தொடரும் வலி: பாகம் – 09   (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!) “கேட்பது உயிர் பிச்சையல்ல… மறுக்கப்பட்ட நீதி” என்பதே எனது 25 ஆண்டுகால முழக்கமாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் எனது தண்டனையை உறுதி செய்த பின்பும் அதுவே எனது போராட்டமாக இருந்து…