இணைய மாநாட்டுத் தகவல்நுட்பக்காட்சி ஒளிப்படங்கள் சில, சிங்கப்பூர்

  சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் 14ஆவது இணைய மாநாடு  மூன்று நாள் நடைபெற்றது.   இம்மாநாட்டில்   தொடக்க நாளான சித்திரை 16, 2046 / மே 30, 2015 சனியன்று சிங்கப்பூர்த் தலைமையமைச்சுத்துறையமைச்சர் ஈசுவரன்  தகவல்நுட்பக் காட்சியரங்கத்தைத் திறந்து வைத்தார். படங்கள் : அகரமுதல & தினமலர்

சிங்கப்பூரில் கவிக்கோ கருவூல அறிமுக விழா

  கவிக்கோ அப்துல் இரகுமான்  75 ஆவது பிறந்தநாள் பவளவிழாவும் கவிக்கோ கருவூல வெளியீட்டு விழாவும் சென்னை அண்ணாசாலை காமரசார் அரங்கத்தில்   ஆவணி 12, 2046 / ஆக.29,2015 சனிக்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்த அறிமுக நிகழ்ச்சி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் சித்திரை 17, 2046 / மே 31 ஞாயிறு காலை சிங்கப்பூர் ஆனந்தபவன் உணவக மாடியரங்கத்தில் நடைபெற்றது. பவளவிழா ஒருங்கிணைப்பாளர்கள்  பேராசிரியர் கவிமாமணி அப்துல்காதர், பதிப்பாளர் சாசகான் ஆகியோர் உரையாற்றினர்.

இன அழிப்பில் நேற்று ஈழம்! இன்று பருமா! நாளை??? – செந்தமிழ்க் குமரன் & செந்தமிழினி பிரபாகரன்

  மரித்துப்போனதா மானுடம் ? சிங்கள இனவாதப் பௌத்த வெறியர்களால் தமிழ் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அமைதி காத்த அதே பன்னாட்டு மன்பதை, இன்று பருமாவில் பருமிய இனவாதப் பௌத்த வெறியர்களால் கொல்லப்படும் உரோகிங்யோ இன மக்களைக் காக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை ! ஒரு தனித்த தேசிய இனமாகவும் நிலப்பரப்பையும் கொண்டிருந்த ஈழத் தமிழர்களையே கண்டுகொள்ளாத இந்த உலகம் அப்பாவி சிறுபான்மை உரோகிங்கோ இன இசுலாமியர்களையா கண்டுகொள்ளப்போகிறது ? தூய இனவாதம் பேசும் பருமியப் பௌத்தர்கள் அம்மண்ணின் சிறுபான்மை உரோகிங்கோ இசுலாமியர்களை வந்தேறிகள்…

கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா , சென்னை

    கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா   சென்னை தியாகராயநகர் வாணி மகாலில் வரும் ஆனி 12, 2046 / சூன் 27ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழவிருக்கிறது.  கவிதைஉறவு அன்பர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரண்டு வந்து கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறேன். ஏர்வாடி இராதாகிருட்டிணன்

திருக்குறளும் தொடர்பாடலும் – சிவா(பிள்ளை)

திருக்குறளும் தொடர்பாடலும்   தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தப் பூமியில் வாழ்ந்தாகப் பல செய்திகள் சொல்லப்படுகின்றன. அவ்வாறான ஒரு மொழி பேசிய இனம் சமூக மாற்றங்களைச் எதிர்கொள்ள என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பார்ப்பது தமிழ் மொழியை மட்டுமே நம்பி அதற்காகத் தங்கள் உயிர் உடைமை உறவுகளைத் கூடத்தொலைக்கும் மக்களுக்கு முதன்மையானது. அந்தத் தேடலின் ஒரு பகுதி திருக்குறளில் தொடர்பாடல் பற்றி என்ன சொல்கின்றது என அறிந்துகொள்வதாகும்.   மனித இன முயற்சியின் இன்றைய மிகப்பெரும் வளர்ச்சி எது என்று கேட்டால்…

14 ஆவது தமிழ் இணைய மாநாடு, சிங்கப்பூர்

 வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015 நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதி (முழுமையாக வெளியிடும் வகையில் நிகழ்நிரல் இல்லை. அழைப்பிதழும் வராததால் முழு விவரத்தையும் அளிக்க இயலவில்லை.)  

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 6

(சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி) காட்சி ஆறு   முடிவை நோக்கிச் சீதை இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு. நேரம்:  மாலை வேளை பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதை, இலட்சுமணன், பரதன்,  சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, துறவகச் சீடர்கள். மலை  மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை  கட்டப்பட்டுள்ளது. (இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது,  இலவா, குசா இருவரும் குதித்தோடிச்…