ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 1/2 பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையும் முதன்மையும் உடைய தமிழ் இலக்கியங்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்து போயின. என்றபோதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குள் உட்பட்ட சில இலக்கியங்களையாவது அழிவிலிருந்து மீட்ட அறிஞர்கள் சிலரால் செந்தமிழ் இலக்கியங்களை நாம் படித்து இன்புறும் பேறு பெற்றுள்ளோம். அச்சுப்பொறி நம் நிலப்பகுதியில் அறிமுகமானபோது முதலில் (1557) அச்சேறியவை தம்பிரான் வணக்கம் முதலான தமிழ் நூல்களே. இதன் பயனாய் அங்கும் இங்குமாய் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் எங்கெங்கும் புகழ்மணக்க அச்சுச்சுவடிகளில் அரங்கேறின….
ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை! – பாரதியார்
ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை! அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். “கான்பரென்சு’ என்றும் “மீட்டிங்’ என்றும் கூட்டங்கள் கூடிவிடிய விடிய வார்த்தைகள் சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமலிருக்கிறார்களே! பாரதியார்: தேசியக் கல்வி (கனடாவில் பாரதி தமிழ்க்கல்வி தொடக்க விழாவில் எடுக்கப்பட்ட படம், தினகரன், 24.07.15)
நாடகமன்றோ நடக்கிறது! ஐ.நா-வில் அமெரிக்கத் தீர்மானங்கள்
ஐ.நா.-வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் முழுமையான வடிவம் பல கண்ணோட்டங்களையும், எதிர்வு கூறல்களையும் கொண்டதாகவும், தமிழர்களினதும் பன்னாட்டினதும் எதிர்பார்ப்பைக் கொண்டதுமான அமெரிக்கத் தீர்மானம் ௧-௧௦-௨௦௧௫ (1.10.2015) வியாழக்கிழமை அன்று வாக்கெடுப்பின்றி ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ‘இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் அமெரிக்காவினால் இலங்கை குறித்தான திருத்தப்பட்ட தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வரைபை விடத் திருத்தப்பட்ட புதிய தீர்மானத்தில் பல விதயங்கள் மாற்றப்பட்டுள்ளன. முன்னைய வரைபில் காணப்பட்ட சில பத்திகள் சுருக்கப்பட்டுள்ளதுடன் 26 பத்திகள் 20 பத்திகளாகக்…
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சி
பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும் அனைவருக்கும் இனிய வணங்கங்கள்! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சி சப்பானில் வசிக்கும் தமிழ் மக்கள், சப்பானிய மக்களின் பேராதரவோடு கடந்த புரட்டாசி 16 /அக்டோபர்3 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமது பரம்பரை உணவு வகைகளான கம்பங்கூழ்,கேழ்வரகு கூழ், இட்டலி மற்றும் உளுந்தில் செய்யப்பட்ட உணவுகள் எனப் பல்வேறு வகையான உணவுகள் சப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. நாம் அமைத்திருந்த செம்மொழி நூலகம், தமிழர்களின் பரம்பரை விளையாட்டுகளான சடுகுடு, பூப்பறிக்க வருகிறோம்,கிளித்தட்டு நாற்கரம், சிறுவர் சிறுமியர்…
தண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா
தண்ணீர்க் கனவு மணலைப்பறி கொடுத்துவிட்டு ஏதிலியாய் நிற்கிறது ஆறு! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் ஆற்றினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ? -மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா
தாய்மை – காரைக்குடி பாத்திமா அமீது
தாய்மை இறைவனைக் காண நினைத்தேன் உன்திருமுகம் காணும் முன்பாக உணரத் துடித்தேன் சொர்க்கமதை உன்னிரு பாதங்களில் பணியும் முன்பாக. எழுத சொற்கள் இல்லையம்மா வளர்த்த விதம் சொல்வதற்கு பாடிடச் சொற்கள் கிடைக்கவில்லை பாடுபட்டு படிக்க வைத்ததற்கு! விறகடுப்பின் புகையில்நீ வெந்துஎம் பசிபோக்கினாய்! வியர்வை நீரூற்றி எங்களை வளர்த்து ஆளாக்கினாய்! பட்டங்கள் பெறவைத்துப் பார்த்துப் பூரித்துப்போனாய்! வெற்றிகள் பலகொடுத்து வேதனைகளை விரட்டினாய்! கவிதைகளால் தாலாட்டி கண்ணுறங்கச் செய்தாய்! வருணனைகள் பலதந்து என்னுள் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்! பாரங்களை இறக்கிட உன் பாதங்கள் வேண்டும் இனிதே தூங்கியெழ உன் மடிவேண்டும் ஒரு…
தென்மார்க்கில் “மெல்லத் தமிழ் இனி” : கலைவிழா
புரட்டாசி 26, 2046 / 10-10-2015 சனி மாலை 3 மணி தென்மார்க்கில் புரட்டாசி 26, 2046 / 10-10-2015 சனி மாலை 3 மணிக்குத் தொடங்கும் “மெல்லத் தமிழ் இனி” என்பதனை மையமாகக் கொண்ட மாபெரும் கலைவிழாவில் ஞானசேகரன் இணையர் தலைமை விருந்தினர்கள் ஆகவும் பேராசிரியர் திரு. கோபன் மகாதேவா (4 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு ஒருங்கிணைப்பாளர், தற்பொழுது வதியிடம் இலண்டன்) பாரதி இலக்கியச் செல்வர் திரு. கருணானந்தராசா (யுகபாரதி – இலண்டன்) கவிஞர். திரு. பொன் புத்திசிகாமணி…
தனித் தமிழீழம் வேண்டும்!
தமிழீழம் எனது ஈழக் கனவு தனித் தமிழீழம் வேண்டும் – அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். புரட்சி வெடிக்கும் முகத்தில் – துளிப் புன்னகை மலர வேண்டும். வெறியாட்டம் கண்ட கண்கள் – இனி வாண வேடிக்கைகள் காண வேண்டும். சயனைடு எடுத்தக் கைகள் – இனிச் சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச் சாகும்படிச் செய்யக்கூடாது. சாவுகளைக் கண்ட மனிதர்கள் – மனச் சாந்தத்தோடு வாழ வேண்டும். ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் – கடவுள் ஆலயம் நோக்கி நடக்க வேண்டும். வெடிகுண்டு…
சிலப்பதிகார விழா 2015 – சிட்னி
கார்த்திகை 12, 2046 / நவ.28, 2015 மாலை6.00 – 9.30
நான் – காரைக்குடி பாத்திமா அமீத்து
நான் ஏதோசில கற்பனைகள் என்னுள்ளே எப்போதும்! மனிதவாழ்வே வேண்டா மரமாய்ப்பிறக்க வேண்டும்நான்! இளைப்பாறநிழல் கொடுத்து இனியகனிகள் அளித்து, பறவைகள் கூடமைத்துவாழ பாதுகாப்பளித்திட வேண்டும்நான்! நீராகநான்மாறி உயிர்களின் வேட்கைதீர்த்திட வேண்டும்நான்! காற்றாகமாறி அனைவரின் மூச்சாக வேண்டும்நான்! கல்லாகமாறி உளியால் சிலையாக வேண்டும்நான்! அலையாகமாறிப் பெருங்கடலில் சங்கமிக்க வேண்டும்நான்! மலராய்ப் பிறந்து மணம்தந்து உதிரவேண்டும்நான்! நிலவாய் உதித்து வளர்ந்து தேயவேண்டும்நான்! கடவுளோர்நாள் வந்தென்னிடம் கண்முன்னே தோன்றினால், ஈசலாகப் பிறந்து ஓர்நாளில் பிறந்துமடியும் வரமொன்று கேட்பேன் நான்…..நான்! நான், காரைக்குடி பாத்திமா அமீத்து, சார்சா தரவு…
திலீபனைப் படம் பிடித்த கவி கத்தூரி
நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை ! அழகென்றால் என்ன ? உடல் அழகு, கல்வியழகு, கவிதையழகு என்று எத்தனையோ விதமாக அழகுகள் பேசப்படுகின்றன. எல்லா அழகுகளுக்கும் மனிதன் தன் வசதிக்கேற்ப வரைவிலக்கணம் வகுத்திருக்கிறான். அழியும் அழகை நம்பி ஆகா இதுவல்லவோ அழகென்று ஓடி ஏமாறுவோர் உலகில் பலர் உண்டு. ஆனால் அழியா அழகென்று ஒன்றிருக்கிறது. அதுதான் மனிதனை என்றும் உற்சாகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அழகை அடையாளம் காணும் உணர்வை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளித்து வைத்திருக்கிறான். மற்றவரின் கருத்துப் பாதிப்பிற்கு…
உலகத் தொல்காப்பியர் மன்றத் தொடக்க விழா, பிரான்சு
புரட்டாசி 10, 2046 / செப்.27, 2015 முற்பகல் 11.00 – நண்பகல் 1.00
