சீரான கலைச்சொற்களுக்கு வேண்டுகோள் – செயபாண்டியன் கோட்டாளம்

   அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழில் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் உள்ள ஒரு பெரும் இடர்ப்பாடு என்னவென்றால், அதற்குத் தேவையான கலைச்சொற்கள் இல்லாததாகும். கலைச்சொல் இல்லாத ஒரு கருத்துருவுக்குப் பல எழுத்தாளர்களும் அவரவர் உடனடித் தேவைக்குத் தக்கவாறு பலவிதமாகக் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அவ்வாறு உருவாகும் கலைச்சொற்கள் ஒரே சீரான நடையைப் பின்பற்றி அமைவதில்லை. அவற்றுள் சில செந்தமிழ்ச் சொற்களாகவும், சில கலப்புமொழிச் சொற்களாகவும், வேறு சில ஆங்கிலச் சொற்களாவும் அமைகின்றன. எல்லா எழுத்தாளர்களும் ஒரே சீராக எழுத வேண்டுமானாலும், ஒன்றுடனொன்று இயைபுடைய அறிவியல் நூல்கள் தமிழில்…

உதவிக்காக ஏங்கும் திருவள்ளுவர்! – தமிழ் இராசேந்திரன்

  தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே வீரணம் என்ற ஊரில் 2003 ஆம் ஆண்டு 6 காணி(ஏக்கர்) இடத்தில் ஏழு அறைகளுடன் தொடங்கப்பட்டு (தமிழ்த்தேசிய மாபெரும் அறிஞர் பெருமக்களான தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் நண்பரான ) தமிழ்ப்பற்றாளர் ஆறுமுகம் ஐயா அவர்களால் நடத்தப்படும் திருவள்ளுவர் தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி 6 முதல் 10 ஆம் வகுப்புகளுடன் 482/500 என்ற அளவு மதிப்பெண் பெறும் மாணவர்களை உருவாக்கி வந்தது.   இந்நிலையில் அருகில் புதிதாகத் தோன்றிய ஆங்கில வழிப் பள்ளி நிருவாகத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நயவஞ்சகமாக…

பிரபாகரன் சிலையிடிப்பு : கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – வைகோ

பிரபாகரன் சிலையை இடித்துத் தகர்த்ததைக் கண்டித்து, 9 ஆம் நாள் நாகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! தமிழகம் முழுமையும் பிரபாகரன் சிலை எழும்; எந்த ஆற்றலாலும் தடுக்க முடியாது! வைகோ அறிக்கை! தமிழ்க்குலத்தின் தவமைந்தன், தரணியில் தமிழ் இனத்திற்கு அடையாளத்தை- முகவரியை நிலைநாட்டிய  வரலாற்று நாயகன், நான் உயிரினும் மேலாக நேசிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவச் சிலையை, நாகை மாவட்டத்தில் தெற்குப் பொய்கை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாழும் தமிழ் மக்கள், தாங்கள் வழிபடும் ஐயனார் கோவில் வளாகத்தில் வெள்ளைப் புரவியின்…

வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு

வரும் வைகாசி 6, 2046 சூன் மாதம் 21 – ஆம் நாள் வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு நடைபெற உள்ளது. திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் , கவிதைகள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்வரி: tamilkavinjarsangam@gmail.com     திருக்குறள் தேசிய நூலாகுவதற்கு ஒத்துழைப்பு தரும் வண்ணம் அனைவரும் இம் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமெனத் தமிழன்புடன் கேட்டுக்கொள்கிறேன். – க.ச.கலையரசன், தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம். 9551547027

கல்வியாற்றுரைக் கருத்தரங்கு – இந்து

‘தி இந்து’ – மாதா பொறியியல் கல்லூரி நடத்தும் வழிகாட்டல் நிகழ்ச்சி வைகாசி 10 / மே 24  நடைபெறுகிறது   + 2 முடித்து விட்டு அடுத்த என்ன படிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களுக்காகவே இந்து இதழ் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த படிப்பை எப்படித் தேர்ந்தெடுக்கலாம், எந்த படிப்புக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன? மாணவர்களின் வெற்றியை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும்…

‘தமிழாடல்’2015

‘தமிழாடல்‘2015 சிடிவி(GTV’) தமிழாடல்’2015 என்ற மாபெரும் தமிழ்ப்பேச்சுப் போட்டியொன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். மேடையில் தமிழ் பேசும் கலை அருகிவருகின்ற காலக்கட்டத்தில், மேடைப்பேச்சை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், அடுத்த தலைமுறையினர் தமிழில் மேடையில் பேசுவதற்கு ஆர்வத்தைத்தூண்டும்   நோக்கத்துடனும், இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுகின்றது.  இந்த நிகழ்ச்சியில், (1) 10 அகவைக்குட்பட்டவர்களை கீழ்ப்பிரிவாகவும், (2) 11 அகவை முதல் 16 அகவை வரை உள்ளவர்களை மத்தியப் பிரிவாகவும், (3) 17 அகவை முதல் 25 அகவை வரை உள்ளவர்களை மேற்பிரிவாகவும், என மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் 3…

சென்னையில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு

சென்னையில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு      தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் உலகப் பொது மறையாம் திருக்குறள் குறித்த பன்னாட்டு மாநாட்டினை உலகத் தமிழ்ச் சங்கமும், சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து அடுத்த மாதம் நடத்தவுள்ளன. இரண்டு நாள் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகளாவிய அறிஞர்கள், குறள் நெறி ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், பல்துறை அறிஞர்களிடம் இருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  திருவள்ளுவரும் கன்பூசியசும், திருக்குறளும் பௌத்தமும், திருக்குறளில் மேலாண்மை, திருக்குறளில் பெண்ணின் பெருமை, திருக்குறளில் கல்வி, திருக்குறளில் ஆட்சிமுறை, திருக்குறளில்…

நாவி சந்திப்பிழை திருத்தி

வணக்கம். நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் முதல் சொற்பிழை திருத்தி. ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்குப் பயன்படலாம் என்று அறியத் தருகிறேன்.   வாணி – http://vaani.neechalkaran.com/ பயனர் கையேடு http://vaani.neechalkaran.com/help.aspx

செவிலியர்கள், விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

   இந்தியச் செவிலியர் சங்கம் (Trained Nurses Association of India – TNAI ) தமிழ்நாடு கிளை ( Tamilnadu State Branch – TNSB ) உலகச் செவிலியர் நாளன்று  செவிலியர் விருதுகளை வழங்குகிறது.  சிறந்த தொண்டு சிறந்த ஆசிரியர் சிறந்த நிருவாகி  ஆகிய அடிப்படையில் விருதுகள் வழங்கப்பெறும்.   பொது நல்வாழ்வுத் துறை, மருத்துவமனைகள், செவிலியர் கல்வி நிறுவனங்கள் முதலானவற்றில் சிறப்பாகச் செயல்படும் செவிலியர்களைத் தேர்ந்தெடுத்து இவ் விருதுகள் வழங்கப்பட உள்ளன.   தகுதி உடையவர்கள் தங்கள் முழு விவரத்துடன்…

கணிணித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

தமிழன்பருக்கு, வணக்கம். கணிணித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் –  சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in  Fundamentals & Use of Tamil Computing சித்திரை 21 – வைகாசி 15, 2046 / 04.05.15 – 29.05.15  எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் தி.இ.நி./ SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணிணித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது.  கணிணியின் அடிப்படையையும் செயல்பாட்டையும் தெரிந்துகொண்டு  அனைவரும் கணிணியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ்மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்து கொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியிக்கப்படுகிறது.   இந்தப் பயிற்சியின் வாயிலாக ஊடகத்துறையில் பணிவாய்ப்புகள் பெறமுடியும்….

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி

  வல்லமையில் பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற தலைப்பிலான புதிய கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.   இணையம் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. இருந்த இடத்திலிருந்தே எதையும் எளிதில், விரைவாக, கூர்மையாகச் செய்து முடிக்க முடிகிறது. கல்வி, தொழில், பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு… என எண்ணற்ற துறைகளில், வகைகளில் இதன் விரிவையும் ஆழத்தையும் நாம் கண்டு வருகிறோம். கூகுள், யாஃகூ போன்ற பெரு நிறுவனத்தினர் முதல் தனியர்கள் வரை, புதிய புதிய பயனுள்ள இணையவழிச் சேவைகளை வழங்கி வருகின்றனர். இவற்றைப் பற்றி முழுதும் அறிந்தோர் சிலரே. இன்னும்…