‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி

‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி 17.11.2022 அன்று வரும் உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியைத் தமிழ்க்காப்புக் கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்துகின்றன. ஏ4 அளவில் 4 பக்கம் குறையாமல் 6 பக்கம் மிகாமல் கட்டுரை இருத்தல் வேண்டும். இந்திய விடுதலை நாளில் இருந்து ஒன்றிய அரசு செய்துவரும் இந்தித்திணிப்புகளையும் அவற்றால் தேசிய மொழிகளுக்கு ஏற்பட்டு வரும் இடர்களையும்…

இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு – சீமான்

இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு “அன்னைத் தமிழில் அருச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு (அருச்சனை) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாம் அறிந்த வரை இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. நாடு “தமிழ்”நாடு. ஆனால், தமிழில் வழிபாடு செய்யப் போராட வேண்டிய நிலையில் தான் கடந்த 55-ஆண்டுக் காலத் திராவிட அரசுகள் இயங்கி இருக்கின்றன….

பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், மே 2023

பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், மே 2023  பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படைத்த ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய முதல் தொகுப்பு சூலை 26, 2022 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. எளிமையாகவும் சீரிய முறையிலும் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ தலைமையில், மன்றத்தின் துணைத்தலைவர் திரு. முனைவர். சுந்தரமூர்த்தி, செயற்குழு அலுவலர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் திரு.கோ.விசுவநாதன் (வேந்தர், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) ,தொழிலதிபர் திரு. வி.சி. சந்தோசம் ஆகியோர் வெளியிடச்…

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! -பெ.மணியரசன்

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! வள்ளலார் வழி ஆன்மிகச் சான்றோராக விளங்கிய தவத்திரு ஊரன் அடிகளார் இன்று (14.7.2022) அடக்கம் ஆனார்கள் என்ற செய்தி மிகவும் துயரமளிக்கிறது. வள்ளலார் வழியில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, வடலூர் சன்மார்க்க நிலைய வளாகத்தையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டவர் ஊரன் அடிகளார். நான் திருச்சி தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி) படிக்கும் போது, தங்கிப் படித்த திருச்சி சிந்தாமணி பாப்பம்பாள் சத்திர அறக்கட்டளை விடுதியில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்பாகச் சைவநெறி, வள்ளலார்நெறி ஆகியவை…

தமிழன்னைக்குப் பெருமை சேர்க்க வருகிறாள் தமிழணங்கு

  உலகத் தமிழர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் முயற்சி நடைபெறுவதால் ‘தமிழராய் இணைவோம்‘ என்ற இலக்குடன் தமிழணங்கு மாத இதழ் தொடங்கப்பட்டுள்ளது. இணையத்திலும் அச்சிலும் வெளிவருகிறது. தமிழ் மரபு, பண்பாடு, சமயம், வரலாறு, மொழி இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. rajetamiljuly1@gmail.com  க்கு கட்டுரைகளை அனுப்புங்கள். முதல் இதழ் 134 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது. விலை உரூ120/- ஆசிரியர்: முனைவர் செ. இராசேசுவரி amazon.in amazon.com தளங்களில் வாங்கலாம்.

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்  தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.தாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. தமிழ் மொழி – இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்மன்பதை உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது. பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்துமகாகவி…

தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கான தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022 முதல் பரிசு: அமெரிக்கப்பணம்  $ 1000.00 இரண்டாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 500.00 மூன்றாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 250.00 கட்டுரைகள் திருக்குறள் குறித்து தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும். கட்டுரைகள் 1000 சொற்களுக்குக் குறையாமலும் 1500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒருவர் எத்தனைக் கட்டுரைகளும் அனுப்பலாம் ஆனால், வெவ்வேறு தலைப்புகளில் இருக்க வேண்டும். கட்டுரைகள் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும். கட்டுரை குறித்த 5 நிமைய…

தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா

தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா விழா மலருக்குப் படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்வரி malar@fetna.org 750 சொற்களுக்கு மிகாமல் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும். கடைசி நாள்: மாசி 17, 2053 / 01.03.2022 கூடுதல் தகவலறிய : http://fetna-convention.org    

குழந்தை வளர்ப்பிற்கான இணைய வழிப் பயிலரங்கம்

பெண்களுக்கான குழந்தை வளர்ப்பு இணைய வழிப் பயிலரங்கம் பிப்.11-16, 2022 பதிவுக்கட்டணம் உரூ.499/- தொடர்பிற்கு: 75982 33858 ; 93455 53486 தகவல்: முதுவை இதாயத்து துபாய் 00971 50 51 96 433 muduvaihidayath@gmail.com   

திருவள்ளுவர் விருதுக்கு மீனாட்சி சுந்தரம்; காமராசர் விருது குமரி அனந்தனுக்கு: முதல்வர் தாலின் அறிவிப்பு

திருவள்ளுவர் விருதுக்கு மீனாட்சி சுந்தரம்;  காமராசர் விருது குமரி அனந்தனுக்கு: முதல்வர் தாலின் அறிவிப்பு  சென்னை: 2022ஆம் ஆண்டிற்கான ஐயன் திருவள்ளுவர் விருது பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கக் காரணமாக இருந்த மீனாட்சி சுந்தரத்திற்கும், பழம்பெரும் காங்கிரசு  தலைவர் குமரி அனந்தனுக்குப் பெருந்தலைவர் காமராசர் விருதும் வழங்கப்படுவதாக முதல்வர் தாலின் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசால் ஒவ்வோர் ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டுபுரிந்தும் வருபவர்களுக்கு ஐயன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பெங்களுர் தமிழ்ச்…

மகாத்மா காந்தியின்   75-ஆவது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

மகாத்மா காந்தியின்   75-ஆவது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி அன்புள்ள தம்பி தங்கைகளுக்கு,வணக்கம். “எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை அன்பளிப்பாகப் பெறுங்கள்! விளக்கம் இதோ:நம் நாட்டு விடுதலை மூலம் உலகிற்கே அகிம்சைப் பாடம் நடத்திய அண்ணல் காந்தியை நம்மில் ஊறியிருந்த வன்முறை உணர்வுகளுக்கு நாமே பலியாக்கினோம். எனினும் அகிம்சைக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அது அமைந்தது அல்லவா? அகிம்சைக்கு மேலும் வலுவூட்ட அகிலத்தையே ஆன்ம சக்தியால் நிரப்ப வேண்டிய…

சதுரங்கப் போட்டி, வ.அ.த.ச.

வணக்கம்! வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வணக்கம் வட அமெரிக்காவின் ஏழு வண்ணப் போட்டிகளோடு சதுரங்கப் போட்டியையும் நடத்த ஆயத்தமாக உள்ளது. போட்டியில் பங்கு பெற இந்த இணைப்பைச் சொடுக்கவும். https://tinyurl.com/VVAChessRegistration போட்டியின் அனைத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்களுக்கு இங்கே சொடுக்கவும். https://tinyurl.com/VVAChessRules சதுரங்கப் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வெல்வீர்! தமிழ் வாழ்க!