இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 67

இலக்கிய வளர்ச்சிக் கழகம்  திருவாரூர் புரட்டாசி 11, 2046 / செப். 28, 2015 மாலை 6.30 – 9.00 சிலப்பதிகாரத் தொடருரை பாட்டரங்கம் பாராட்டரங்கம் மாணவர் அரங்கம் பரிசரங்கம்

தமிழ்ப்பேராய விருதுகள் 2015

அன்புடையீர், வணக்கம். திஇநி / SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா புரட்டாசி 02, 2046 / செப்.19, 2015 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது. தமிழ்ப் படைப்பாளிகளுக்கும், தமிழறிஞர்களுக்கும் விருதளித்துச் சிறப்பிக்கும்  இவ் விழாவில் அனைவரும் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி.

ஆயிரம் கவிஞர்களின் சங்கமம் – சென்னைச் செந்தமிழ் முற்றம்

திருவையாறு தமிழ்ஐயா கல்விக்கழகம் கவிதைக்குவியல் வெளியீடு அப்துல்கலாம் நினைவு போற்றல் சென்னை புரட்டாசி 28, 2046 / அக்.15, 2015 பதிவு இறுதி நாள் : புரட்டாசி 08, 2046 / செப்.25, 2015

சென்னையில் ‘குடியம்’ ஆவணப்படம் திரையிடல்

புரட்டாசி 02, 2046 /19-09-2015  மாலை 05.00 தாகூர் திரைப்பட மையம் இராசா அண்ணாமலைபுரம்   திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரிலிருந்து 20  புதுக்கல் தொலைவில் உள்ள குடியம் எனுமிடத்தில் பழையகற்காலத்திலுள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அந்தப் குதிகளிலுள்ள குகைகள், பாறையமைவுகள்   2 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை விளக்கும் ஆவணப்படமே இந்தக் ‘குடியம்’. இதன் மூலம் தமிழர்களின் தொன்மம் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறியலாம். இங்குள்ள ஒவ்வொரு பாறையும் 140  பேரடி(மீட்டர்) உயரமுள்ளவை. இதுகுறித்து ஆவணப்படத்தில் அறிஞர்கள் கருத்துரைகள் இடம் பெறுகின்றன. …

இலக்கு & பாரதிய வித்யாபவன் : சிகரம் நம் சிம்மாசனம்

புரட்டாசி 01, 2046 / செப். 18, 2015 மாலை 06.30 வணக்கம். இளைஞர் நலனில் அக்கறைக் கொண்ட  ‘இலக்கு‘,   ‘தமிழ் வழி ஊடகக் கல்வியில் இருக்கிற வேலை வாய்ப்புகளை‘ப் பற்றி அறிந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறது. அழைப்பை உங்கள் உறவு நட்புடன் பகிர்ந்துதவ வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன், ப. சிபி நாராயண். ப. யாழினி.