தமிழ்ப் பயிற்று மொழி – பேராசிரியர் சி.இலக்குவனார்
கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று கல்விப் பெரியார்களும் நாட்டு நலனில் கருத்துடைய நற்றமிழ்த் தலைவர்களும் மாணவ மணிகளும் ஓயாது வேண்டிக்கொண்டுதான் உள்ளனர். ஆனால், மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் அற்றவர்கள், பதவிகளில் அமர்ந்து கொண்டு தமிழ்ப்பயிற்று மொழித் திட்டத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்லூரி முதல்வர் களுக்கெல்லாம் தமிழைப் பயிற்று மொழியாக்குவது பற்றிக் கடிதம் எழுதியதாகவும் எந்தக் கல்லூரி முதல்வரும் அதற்குச் சார்பாகக் கடிதம் எழுதிலர் என்றும் ஒரு செய்தி வெளிவந்தது. கல்லூரிப் புகுமுக…
தமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்
கல்லூரிகளில் இன்று ஆங்கிலத்தின் வழியாகப் படித்துப் பட்டம் பெறும் முறையேயுள்ளது. அவரவர் மொழிவழியாகப் பயிலலே இயற்கையோடு ஒத்ததும் எளிதும் ஆகும். உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் நிலை இருந்தது; அதனை மாற்றித் தமிழின் வழியாகப் படிக்குமாறு செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவ்வாறு கல்லூரிகளிலும் தமிழ் வழியாகவே படித்துப் பட்டம் பெறும் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழ்வழியாகப் படித்துவிட்டு கல்லூரிக்கு வந்தவுடன் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் முறையால் மாணவர்கள் இடர்ப்பாடு அடைகின்றனர். மாணவர்கள்…
புகுமுக வகுப்பில் புகுத்துக தமிழை – பேராசிரியர் சி.இலக்குவனார்
புகுமுக வகுப்புகளில் (Pre-University) ஆங்கிலத்தில் கற்பிக்குங்கால் – தமிழினும் – பேச்சுத் தமிழினும் – கற்பிக்கலாம் எனப் பல்கலைக்கழகத்திலிருந்து கல்லூரிகட்கு அறிவுரைக் குறிப்பு வந்துள்ளது. உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழிற் பயிலும் மாணவர்கள் கல்லூரிகட்குள் நுழைந்ததும் அயல்மொழியாம் ஆங்கிலத்தில் கற்பிப்பதை அறிந்த கொள்ள முடியாமல் இடர்ப்படுகின்றனர் என்பது நாடு அறிந்த ஒன்றாகும். தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போதே கல்லூரிப்பாடமொழியும் தமிழ்தான் என்று சட்டம் செய்திருக்க வேண்டும். பி.ஏ. வகுப்புகளில் விரும்புவோர் கலைப்பாடங்களை(arts) தமிழிற் படிக்கலாம் என்று கூறிவிட்டுத் …
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்க்கல்வி குறித்த இதழுரைகள்
பயிற்சிமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனாரும் தமிழ்க்கல்வி குறித்த அவரின் சில இதழுரைகளும் தமிழ்ப் பாடக்கல்வி, தமிழ்வழிக் கல்வி, தமிழ்மொழிக் கல்வி குறித்து ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர்ப் பேராசிரியர் எழுதிய இதழுரைகளில் சில இவ்விதழில் தரப்படுகின்றன. அன்றைக்குப் பள்ளிநிலையில் தமிழ்வழிக்கல்வி இரு்நதமையால் கல்லூரிகளில் தமிழ்க்கல்விக்காக அவர் போராடினார். அவரே, பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி வர இருப்பது குறித்து விழிப்புரையும் வழங்கினார். அவர் அஞ்சியவாறு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி பெருகிவிட்டது. இன்றைக்கு மேலும் இழிநிலையாக இருக்கின்ற தமிழ்வழிக்கல்விக்கு மூழுவிழா நடத்தப்பட்டு வருகின்றது. இச்சூழலில் அவரது இதழுரைகளைப்…
தமிழ் வழியாகப் படித்தல் – பிறப்புரிமை பேராசிரியர் சி.இலக்குவனார்
தமிழ் வழியாகப் படித்தலே தமிழர் பிறப்புரிமையாகும். அதுவே அறிவைப் பெருக்கும் எளிய இனிய வழியாகும். ஆங்கிலேயரக்கு அடிமைப்பட்ட நம் நாட்டிலேயன்றி வேறு எங்கணும் வேற்று மொழியாகப் படிக்கும் இயற்கைக்கு மாறுபட்ட நிலையைக் காண இயலாது. தமிழர் தமிழ் மொழி வாயிலாகப் படித்தலே தக்கது என்பதனை எல்லாரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆட்சியாளர்கள், பல்கலைக்கழகத்தினர், கல்லூரி நடத்துகின்றவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரும் தமிழ்வழியாகப் படித்தலைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் செயலில் காட்ட முன்வருவதற்கு அஞ்சுகின்றனர். தமிழ்வழியாகப் படிக்க வருவோர்க்கு உதவித்…
நாணுத்தக உடைத்தன்றோ? – பேராசிரியர் சி.இலக்குவனார்
இளங்கலை வகுப்புக்களில் தமிழ் வழியாகப் படித்தற்கு மாணவர்கள் முன்வரவில்லையாம். அதனால் தமிழ் வழியாகப் படிக்கும் திட்டத்தைச் சில கல்லூரிகளில் கைவிடப் போகின்றனராம். தமிழ்நாட்டில், தமிழர்கள் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டுள்ள அரசில் தமிழ்வழியாகப் படிக்க மாணவர்கள் விரும்பவில்லையென்பது காணுங்காலை நாணுத்தகவுடைத்தன்றோ? மாணவர்கள் ஏன் விரும்பிலர்? பள்ளியிறுதித் தேர்வு வரையில் தமிழ் வழியாகப் படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் சென்றவுடன் தமிழ் வழியாகப் படித்தலை வெறுப்பார்களா? மாணவர்கள் வெறுக்கவில்லை; அதனை விரும்புகின்றனர். அங்ஙனமாயின் தமிழ் வழிப் பயிலும் வகுப்புகளுக்கு அவர்கள் ஏன் சென்றிலர்? தமிழ்நாட்டு அரசு,…
மாண்புமிகு தமிழக முதல்வரை ‘அகரமுதல’ பாராட்டுகிறது.
மாநில முதல்வர், தலைமையாளரைச் சந்திப்பதும் மாநிலநலன்களுக்கான வேண்டுகைகளையும் நிதித் தேவைகளையும் தெரிவிப்பதும் வாதாடிப் பெறுவதும் இயல்பான ஒன்றுதான். அந்த வகையில், நரேந்திரர் தலைமையாளராகப் பதவியேற்றதும் தமிழக முதல்வர் (வைகாசி 20, 2045 / சூன் 3, 2014 அன்று) அவரைச் சந்தித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக ஏறத்தாழ 64 பக்க முறையீட்டை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் வேண்டப்படுவனவற்றைக் குறிப்பிட்டு அவற்றை நிறைவேற்ற உதவுமாறு வேண்டுவது வாலாயமான ஒன்றுதான். இவைபோல், முல்லை-பெரியாறு, காவிரிநீர் முதலான அண்மை மாநிலத்துடனான சிக்கல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இவற்றை…
மத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக
சூன் 3 ஆம் நாள் இந்தியத் தலைமையாளரைத் தமிழக முதல்வர் சந்திக்க இருப்பதாகச் செய்தி உலா வருகின்றது. அன்றோ வேறு என்றோ இருவர் சந்திப்பும் நிகழத்தான் போகிறது. ஆனால், இந்தச் சந்திப்பு, தமிழ்நாட்டிற்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும். மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட பாசகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. எனவே, அஇஅதிமுக ஆதரவு அதற்குத் தேவை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருங்கி வரலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசில் அஇஅதிமுக பங்கேற்கும் வாய்ப்பும்…
நரேந்திரரே! வியவற்க உம்மை! நயவற்க எம் பகையை!
மக்கள் தொகை அடிப்படையில் மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட பெரிய நாடு இந்தியா. இதன் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவது என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியதுதான். அந்தவகையில் நரேந்திரர் தலைமையாளர் பொறுப்பேற்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதில் வியப்பில்லை. ஆனால், தன் வலிமையைச் சிறப்பாக எண்ணி மகிழ்ச்சிக் கடலில் திளைப்பது இடையிலேயே ஆட்சி கவிழவும் வாய்ப்பாகலாம். அவருக்கு இரு முகம் உண்டு என்பது அவரே அறிந்ததுதான். ஒரு முகம் மக்களை ஈர்க்கும் முகம்! மற்றொன்று மக்கள் வெறுக்கும் முகம்! வெறுக்கப்படும் முகத்தை ஈர்க்கும் முகமாக மாற்றாமல் ஒரு…
தமிழுக்கு இழைக்கப்படும் அறக்கேட்டைத் தடுக்க….
அண்மையில் வெளிவந்த 12 ஆம் வகுப்புத் தேர்வில் முதல்நிலைகளில் மதிப்பெண் எடுத்திருந்தவர்கள் எடுத்துள்ள மொழிப்பாடம் சமற்கிருதம். இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவ்வாறுதான் உள்ளது. ஆனால், இவர்கள் பெற்ற சமற்கிருதக் கல்வி இதே வகுப்பில் உள்ள தமிழ்ப் பாடக் கல்விக்கு இணையானது அல்ல. தொடக்க நிலைபோன்ற பாடத்திட்டமும் அதற்கேற்ற எளிய வினாக்களும் கொண்டதே சமசுகிருதப்பாடம். இரு வேறுபட்ட நிலையில் உள்ள மொழிப்பாடங்களின் மதிப்பெண்களை இணையாகப் பார்ப்பதே தவறாகும். சமற்கிருத மொழியைச் செத்த மொழி என்கிறோம். ஆனால், மத்திய அரசின் முயற்சியால் உலகெங்கும் அம்மொழி கற்பிக்கப்பட்டு…
எழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்!
அப்பாவிகள் எழுவரும் அவர்கள் குடும்பத்தினரும் தமிழ்ச்சுற்றத்தினரும் மனிதநேயர்களும் மகிழ வேண்டிய வாய்ப்பு பறிபோய்விட்டது! பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு ஒன்று பொல்லாச் செய்தியாக மாறி விட்டது. ஏனிந்த அவலம்? யாரிதற்குப் பின்னணி? சதியாளர்கள் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை. என்றாலும் இதுபோன்ற இன எதிர்ப்புக் குரல்களும் அதனை இனப்பற்றுள்ளவர் என்ற நம்பிக்கைக்கு ஆளானவர்களே எதிரொலிப்பதும் தமிழினத்திற்கே உரியன போலும்! ஆட்சியில் இருந்தால் ‘இந்தியனா’கவும் இல்லாவிட்டால் ‘தமிழனா’கவும் நடந்து கொள்ளும் முதுபெரும் தலைவர், ஆட்சியில் இல்லாத பொழுதும் ‘இந்தியனா’க நடந்து…
பாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடிப் பைந்தமிழ் காப்போம்!
உலகின் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் போற்றப்பட வேண்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், தமிழ்நாட்டில்கூட அவரின் தகைமை பெரும்பான்மையரால் அறியப்படவில்லை. பாரதிதாசன் என்றால் தமிழுணர்வு என அவரை அறிந்தவர்கள் அடையாளம் காண்கின்றனர். ஆனால், அரசியல் அறம், அறிவியல், இசைத்தமிழ், இயற்கை போற்றல், சிறுவர் இலக்கியம், தொழிலாளர் நலம், பகுத்தறிவு, பெண்ணுரிமை, பொதுவுடைமை, மண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு , எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர் பாரதிதாசன். இவரைப்பற்றித் தமிழ்ப்பாட நூல்களிலேயே போதிய கட்டுரைகள் இடம் பெறவில்லை. இவரைப்பற்றி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாடநூல்களிலும்…
