வெருளி நோய்கள் 509-513: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 504-508 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 509-513 எலுமிச்சை(lemon) குறித்த அளவுகடந்த பேரச்சம் எலுமிச்சை வெருளி.எலுமிச்சை எளியோரும் பயன்படுத்தக் கூடிய எல்லாக் காலத்திலும் கிடைக்கும் மருத்துவப் பயன்கள் நிறைந்த ஒன்றாகும். எனினும் எலுமிச்சைச்சாறு பற்சிப்பியைப்(tooth enamel) பாதிக்கும், பற் சிதைவு அடையும், நெஞ்சு எரிச்சல் வரும், வயிற்றுப் புண்ணை உண்டாக்கும், வாய்ப்புண்ணை ஏற்படுத்தும் என்றெல்லாம் பக்க விளைவுகளை எண்ணி, அளவோடு பயன்படுத்தும் எண்ணம் கொள்ளாமல் அஞ்சுவோர் உள்ளனர். 00 எலுமிச்சைப் பானம்(lemonade)மீதான மிகையான பேரச்சம் எலுமிச்சைப் பான வெருளி.எலுமிச்சை வெருளி உள்ளவர்களுக்கு எலுமிச்சம்…

வெருளி நோய் 504-508 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 499-503 : தொடர்ச்சி) வெருளி நோய் 504-508 எரி கற்களால் துன்பம் ஏற்படும் எனத் தேவையற்ற சூழலில் அஞ்சுவது எரிமீன் வெருளி ஆகும்.கீழே வீழ்வதால் வீழ்மீன் என்றும் உல் என்றால் எரிதல்; எரிகின்ற சிறுபகுதி என்னும் பொருளில் உற்கை என்றும், உற்கம் என்றால் தீத்திரள்; அதனடிப்படையிலும் உற்கை என்றும் விண்ணிலுள்ள கல் என்ற பொருளில் விண்கல் என்றும் எரிகின்ற கல் என்ற பொருளில் எரிகல் என்றும் விண்ணில் இருந்து வரும் நெருப்பு என்ற பொருளில் விண்கொள்ளி என்றும் எரி மீனைக் குறிக்கின்றனர். நாம்…

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010) 11.ஆந்திரா, பீகார், தில்லி (2 இடங்கள்), கேரளா, மகாராட்டிரா, ஒரிசா, இராசசுதான், உ.பி., குசராத் ஆகிய மாநிலங்களில் சமசுகிருதப் பல்கலைக்கழகம் இயங்க மத்திய அரசின் முழு நல்கை வழங்கப்படுகிறது. வாழ்வு கொடுக்கப்பட்டு வரும்  மொழியான  சமசுகிருதத்திற்கு முழுநல்கை வழங்கப்படுவது போல், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ப்  பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படும்; தமிழ் மக்கள் 50,000 எண்ணிக்கைக்குக் குறையாமல் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கானல்நீராகப்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23 சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! ““- – என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப;சாலார் சாலார் பாலர் ஆகுபவே.” புறநானூறு 218 : 5 – 7 பாடியவர்: கண்ணகனார், நத்தத்தனார் எனவும் சொல்வர்.திணை: பொதுவியல். துறை: கையறு நிலை.குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்ததனைக் கண்டு பாடியது. சான்றோர், சான்றோர் பக்கமே சேர்வர்; சால்பில்லாதார் பக்கமே சால்பில்லாதார் சேர்வர்.இவை பாடலின்…

தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 144 & 145 + நூலரங்கம்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.      (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௪ – 414) தமிழே விழி!                                                                தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 144 & 145; நூலரங்கம் புரட்டாசி 26, 2056 ஞாயிறு 12.10.2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர்…

 வெருளி அறிவியல் 499-503 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 494-498: தொடர்ச்சி) வெருளி அறிவியல் 499-503 எபிரேயர்/(இ)யூதர்கள்(Jews) மீதும் இவர்கள் தொடர்பானவை மீதும் ஏற்படும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் எபிரேயர் வெருளி.எபிரேய இனத்தைச் சேர்ந்த (இ)யூதம் என்னும் சமயத்தைப் பின்பற்றும் இவர்கள் மீது ஈவிரக்கமற்றவர்கள், அளவுகடந்து சூழ்ச்சி செய்து ஏமாற்றுபவர்கள், எவரையும் எளிதில் நம்பாதவர்கள் என்றெல்லாம் எண்ணுபவர்கள், இவர்கள் மீது வெறுப்பும் அச்சமும் கொள்கின்றனர்.1096இல் நடைபெற்ற முதலாம் சிலுவைப் போர், 1290இல் பிரித்தானியாவிலிருந்து எபிரேயர் /(இ)யூதர்கள் வெளியேற்றப் பட்டமை, 1391 இல் எசுபானியாவில் எபிரேயர் / (இ)யூதப் படுகொலை நிகழ்ந்தது, 1492இல் எசுபானியாவிலிருந்து…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 : Conference  Call – பன்முகஅழைப்பு : தொடர்ச்சி) ‘என’, இனி’ அடுத்து வல்லினம் மிகும் . .என தெரிவிக்கிறேன்’ என்று உள்ளது “என’ என்னும் இடைச்சொல் அடுத்து வல்லின எழுத்து மிகுதியாய் வரவேண்டும். இவ்வாறு அடிக்கடி வருமிடங்களை நினைவில் கொண்டால் தவறின்றி எழுதலாம். எனத் தெரிவிக்கிறேன் எனக் கூறினான் எனச் சொல்லேன் எனப் படிக்க வேண்டும் எனத் திட்டமிடு எனத் தெளிவாகக் கூறு எனத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பாராட்டினார் எனக் குறிப்பாணையில் குறிக்கப்பட்டுளளது…

வெருளி நோய்கள் 494-498: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 489-493: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 494-498 எதிரொளிப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் எதிரொளிப்பு வெருளி.கண்ணாடி தவிர, நீர்ப்பகுதி, பளபளப்பான பகுதி முதலிய பிறவற்றில் எதிரொளிப்பது குறித்து மிகை பேரச்சம் கொள்கின்றனர்.00 எதிர்காலம் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது எதிர்கால வெருளி.பேரிடர், நேர்ச்சி போன்றவற்றால் யாரையோ எதையோ இழந்தவர்களுக்கு எதிர்கால வெருளி மிகுதியாக வருகிறது.எதிர்காலம்பற்றிய அச்சம், நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கையின்மை போன்றவற்றால் எதிர்கால வெருளிக்கு ஆளாகின்றனர்.00 எதிர்ம எழுது பலகை(boogieboard) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எழுது பலகை வெருளி.எதிருரு ஒளிர்வுக் காட்சி முறையில் எழுதப்பெறும்…

வெருளி நோய்கள் 489-493: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 484-488: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 489-493 எட்டின் கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் எட்டின் கூறு வெருளி.எட்டாம் எண் வெருளி உள்ளவர்களுக்கு எட்டின் கூறு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00

தொல்காப்பியமும் பாணினியமும் – 6 : பாணினியத்தின் சிறப்பு?!-இலக்குவனார் திருவள்ளுவன் 

(தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்  – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 6 பாணினியத்தின் சிறப்பு?! தொல்காப்பியம் இயல்பிலேயே தமிழாகிய சிறந்த மொழிக்கான இலக்கணம் என்பதால் சிறப்பானதாக அமைந்துள்ளது. ஆனால் பாணினியின் அட்டாத்தியாயி சிறப்பாகத் திரித்துக் கூறப்படும் சிறப்பற்ற மொழியான சமற்கிருததத்திற்கானது என்பதால் திரிக்கப்பட்ட சிறப்பையும் உண்மையில் சிறப்பின்மையையும் கொண்டுள்ளது. பாணினியத்துக்கு மிக விரிந்ததொரு உரை செய்த பதஞ்சலி,  “இச்சூத்திரங்களின் பெருமையை நோக்குமிடத்து, பொருளில்லாத ஒரு எழுத்தையேனும் அவற்றினுள்ளே யான் காண்கிலேன்” என்று அட்டத்தாயி குறித்துக் கூறியுள்ளார். “எங்கப்பன் குதிருக்குள்…

சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- இலக்குவனார் திருவள்ளுவன்

எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! அன்புமிகு சான்றோர் பேரவை உறுப்பினர்களுக்கும் நிகழ்ச்சியினை நேரடியாக கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இப்பதிவொலி வழியாக கேட்க இருப்பவர்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அறிமுக உரையாற்றி இந்நிகழ்ச்சியினை எனக்கு அளித்த அரவிந்தன் அவர்களுக்கும் என் வணக்கமும் நன்றியும். தலைப்பைக் கேட்டுச் சிலருக்கு ஆனா உரூனா ஐயாவுடைய தமிழ்ச் சான்றோர் பேரவை இந்த தலைப்பிலா நிகழ்ச்சி நடத்துகிறது என்று எண்ணலாம். “சமற்கிருதத்திற்கு மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீடும் பிற மொழிகளுக்கு மிகக் குறைந்த  நிதி ஒதுக்கீடும்” என்றுதான் பேசச் சொன்னார்கள். இரண்டு்ம் ஒன்றுதான். என்று…

வெருளி நோய்கள் 484-488: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 479-483 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 484-488 உமிழ்நீர் அல்லது எச்சில் துப்புவது குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் எச்சில் வெருளி.தங்கள் மீது பிறர் எச்சில் படுவதால் மட்டுமல்ல, தங்கள் எச்சில் வடிந்து தங்கள்மேல் பட்டாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.வாயிலிருக்கும் உமிழ்நீர் தானாக வெளியேறும் பொழுது எச்சில் வடிதலாகவும் நாமாக வெளியேற்றும் பொழுது எச்சில் துப்புவதாகவும் அமைந்து விடுகிறது.பயணங்களில் அடுத்தவர் மீது விழும் வகையில் எச்சில் வடியத் தூங்குபவர் உள்ளனர். எனவே, அடுத்து இருப்பவர் பேரச்சத்திற்கு ஆளாகிறார். எனினும் இது துயில்எச்சில் வெருளி(aquadormophobia)…