சட்டச் சொற்கள் விளக்கம் 236-240 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 231 – 235 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 236-240 236. Absolutely முற்றிலும்   தனித்த நிறைவாக ஐயத்திற்கிடமின்றி ஆம்.(உடன்பாட்டைக் குறிக்கையில் ஆம், சரி என்ற பொருளில் வரும்.) 237. Absolutely unavoidable முற்றிலும் தவிர்க்க இயலாதது   செய்தலோ செய்யாமையோ ஒதுக்கித் தள்ள வழியின்றி இன்றியமையாது நிகழ்த்தும் சூழலே முற்றிலும் தவிர்க்க இயலாதது ஆகிறது. 238. Absolve   விடுவி   நீக்கு   பழியினின்று நீக்கு குற்றச்சாட்டினின்று விடுவி கடமை அல்லது…

ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

தமிழே விழி!                                                                                     தமிழா விழி! உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.  (திருவள்ளுவர், திருக்குறள், 394) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்ச்சி நாள்: சித்திரை 01, 2055 / 14.04.2024– இணைய அரங்கம் ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழ்த்திரு த.மகராசன் புலவர் தி.வே.விசயலட்சுமி தொடர்ந்து முற்பகல் 11.00…

சட்டச் சொற்கள் விளக்கம் 231-235 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 231 – 235 231. absolute right முழு உரிமை   முழு உரிமைகளை எக்காரணங் கொண்டும் மட்டுப்படுத்த முடியாது.   எந்தச்சூழலும் முழுமையான உரிமைகளின் தகுதியையோ வரம்பையோநியாயப்படுத்த முடியாது.   அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின்போதும் முழுமையான உரிமைகளை இடைநிறுத்தவோ கட்டுப்டுத்தவோ முடியாது. 232. absolute title   முழுமை உரிமைமூலம் முழுவுரிமை மூலம்‌ முழு உரிமை ஆவணம் முழு உரிமை யாவணம்   முழுமையான நிறைவான உரிமையுடைமை….

மலர்க்கொடிஅன்னையின்‌ மலரடிபோற்றி!

மலர்க்கொடி அன்னையின்‌ மலரடி போற்றி! யார்‌அர செனினும்‌ தமிழ்க்குக்‌ கேடெனில்‌ போர்முர சார்த்த வீறுடை மறவர்‌ இலக்குவனாரின்‌ இனிய துணையாய்‌ செருக்களம்‌ நோக்கிச்‌ செல்கென விடுத்த தருக்குடை மறத்தி;தமிழ்நலன்‌ காக்கும்‌ விருப்புடன்‌ துணைவர்‌ சிறைக்களம்‌ புகினும்‌ பொறுப்புடன்‌ மக்கள்‌ சுற்றம்‌ காத்திடும்‌ பெருந்துணை நல்லாள்‌; இல்லம்‌ ஏகிய மறைமலை அடிகளும்‌ திருக்குறளாரும்‌ முத்தமிழ்க்‌ காவலர்‌ கி.ஆ.பெ. அவர்களும்‌ வள்ளுவர்‌ காட்டிய வாழ்க்கைத்‌ துணையாய்‌ விருந்து பேணிடும்‌ குறள்நெறிச்‌ செம்மல்‌ என்று பாராட்டிய ஏந்திசை நல்லாள்‌; கலக்கம்‌ நீக்கிக்‌ கனிவைப்‌ பொழிந்து இலக்குவர்‌ போற்றிய இனிய…

சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 221-225 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 226. absolute privilege   வரையிலாச் சிறப்புரிமை   நிபந்தனையற்ற சிறப்புரிமை அல்லது சலுகை உரிமை. இது நிபந்தனையுள்ள சிறப்புரிமை அல்லது சலுகை உரிமையினின்றும் வேறுபட்டது. 227. absolute property முழுச் சொத்துரிமை   இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததற்கு முன்னரோ, பின்னரோ, எய்தியிருந்த உடைமைக்கு வரையறுக்கப்பட்ட உரிமையாளராக இல்லாமல், முழு உரிமையாளராவார். (இந்து மரபுரிமையர் சட்டம், 1956, பிரிவு 14(1) ) 228. absolute responsibility…

புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும்- இலக்குவனார் திருவள்ளுவன்

புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் புதுச்சேரியில் கல்விக்கொள்கையில் மாற்றம் செய்து மத்தியக்கல்வி வாரியக்கல்வி முறையைப் புகுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். பொம்மைப் பதவியான ஆளுநர் பதவியில் இருந்த தமிழிசையால் அரசின் கல்விக் கொள்கையில் குறுக்கிட்டுப் புகுத்தப்பட்டதே இக் கொள்கை. பா.ச.க. வின் வெளிப்படையான கொள்கையே நாட்டை இந்துமயமாகவும் இந்திய மயமாகவும் மாற்றுவதுதான். இதற்காகவே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி முறை, ஒரே மொழி என்பனவற்றை வலியுறுத்தி வருகிறது; வாய்ப்புள்ள நேர்வுகளில் எல்லாம் அதற்கேற்பவே செயற்பட்டு வருகிறது….

சட்டச் சொற்கள் விளக்கம் 221-225 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 221-225 221. absolute owner   முழுச்‌ சொந்தக்காரன் ;   தனி உரிமையாளர்   முழுச்‌சொத்துரிமையர் முழு உரிமையாளர்.   தளவாடங்கள், கட்டடங்கள், நிலம், ஊர்திகள் போன்ற சொத்துகளின் ஒரே உரிமையாளர்.   வில்லங்கத்திற்கோ பிணைப்பொறுப்பிற்கோ உட்பட்டிருந்த போதிலும் சொத்தின் முழு உரிமையையும் மாற்றி வழங்கும் தகுதியுடையவர். 222. Absolute owners of all property . அனைத்துச் சொத்து முழு உரிமையாளர்கள்   ஒன்றின்மீதான அனைத்து…

சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 211-215 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 216. absolute monarch முழு முடியாட்சியர்   முழுமை முடியாட்சி என்பது மன்னர் அல்லது ஆட்சித் தலைவர் தம் சொந்த உரிமை அல்லது அதிகாரத்தில் ஆட்சி செய்யும் அமைப்பாகும். 217. absolute monopoly முழு முற்றுரிமை   தனி வல்லாண்மை முழு வணிக உரிமை முழு நிறைவுத் தனியுரிமை முழுத் தனி வல்லாண்மை   தொழிலில் அல்லது வணிகத்தில் அல்லது துறையில் விற்பனையாளர் அல்லது உற்பத்தியாளர் முழு உரிமையுடன்…

கனடாவில் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, 9/2024

கனடா – தொல்காப்பிய மன்றம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு தொரண்டோ நகர், கனடா புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024 கட்டுரையாளர்கள் நேரடியாகவோ இணைய வழியாகவோ பங்கேற்கலாம் ஆய்வுத் தலைப்புகள் இணைப்பிதழில் உள்ளன. கட்டுரை ஒருங்குகுறி எழுத்துருவில் 12 உரு அளவில் 1.5 இடைவெளியில் இருக்க வேண்டும். இரு பக்க ஆய்வுச் சுருக்கம் வந்து சேர வேண்டிய நாள்: 01.05.2024 இற்கு முன் கட்டுரை ஏற்பு…

சட்டச் சொற்கள் விளக்கம்  211-215 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம்  206-210 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  211-215 211.absolute justice முழுமை நீதி   முழுமையான நீதி என்பதை ஒரு கோட்பாடாகக் கருதுகின்றனர். குறிப்பாகக் கடற்படையினர், கடல்சார் சோட்பாட்டின் மையக் கொள்கையாகக் கருதுகின்றனர்.   முழுமை நீதி ஆதரவாளர்கள் அனைத்துத் தீய, சட்டஎதிர் செயல்களை ஒழிப்பதையும் அரசாங்கத்தின் சட்டங்களை மீறுபவர்கள் மீது வழக்கு தொடுப்பதையும் மிக உயர்ந்த முன்னுரிமையாகக் கருதுகிறார்கள்.   “எந்த இடர்ப்பாடு குறைபாடு அல்லது ஊறுபாடுகளினால் ஏற்படும் தீங்கிலிருந்து காப்பாற்றும் முழுமை நீதி என்று…

சட்டச் சொற்கள் விளக்கம்  206-210 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம்  201-205 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  206-210 206. absolute duty   பூரணத் தீர்வை வரைக்கட்டு(நிபந்தனை) அற்ற தீர்வை   முழுமைக் கடமை     உடனிணைந்த உரிமைகளற்ற கடமை   வணிகவியலில் தீர்வை வரியைக் குறிக்கிறது.   நேரம், முயற்சி, செலவு ஆகியவற்றைப்பொருட்படுத்தாமல்  தொடர்புடைய ஒழுங்குமுறைக்கேற்பக் கடமையாற்றுதல்.   அ.) பிற தீயரைத்தவிர்த்தல், ஆ.) மக்களைச் சமமாக மதித்தல், இ.) பிறரிடம் உள்ள நல்லனவற்றை ஊக்குவித்தல் ஆகிய முந்நிலைப்பாடும் உள்ளவற்றை முழுமையான கடமை என்பார்கள்….

ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

தமிழே விழி!                                                                                     தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்ச்சி நாள்: பங்குனி 11, 2055 / 24.03.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம்  இணைய அரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் பாவலர் மதுரன் தமிழவேள், இங்கிலாந்து பகுத்தறிவுத்…