குறள் மாநாடு இரண்டாம் நாள் அமர்வு

புது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. தொடக்கத்தில் திருக்குறள் தொண்டு மையத்தின் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது. இரண்டாம் நாள் நடைபெற்ற அமர்வின் ஒளிப்படங்கள். படங்களைப் பெரிதாகக் காண அவற்றை அழுத்தவும்.

குறள் மாநாடு – வடபுல நாட்டிய நிகழ்ச்சி

புது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. முதல் நாள் நிறைவாகப் புது தில்லியில் உள்ள நாட்டியக் குழு ஒன்றின் நாட்டிய நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.

மூன்றாவது திருக்குறள் மாநாடு – முதல் நாள் அமர்வுகள்

புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019 நாள்களில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் அமர்வு – ஒளிப்படங்கள் படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.

மூன்றாவது திருக்குறள் மாநாட்டின் தொடக்க விழா ஒளிப்படங்கள்

புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019 ஆகிய நாள்களில் மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாடு நடைபெற்றது.  முதல்நாள் காலையில் சிறுமியரின் திருக்குறள் இசை நிகழ்ச்சிக்கும் மங்கல இசைக்கும் பின்னர் விழா தொடங்கியது. படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.

தில்லியில் தமிழகச் சிறுமியர் குரலில் குறள்

புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019 ஆகிய நாள்களில் மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாடு நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியாகத் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு சங்கரராமன் சேலம், கிருட்டிணகிரி, தருமபுரி முதலான வெவ்வேறு மாவட்டச் சிறுமியர் முப்பத்தறுவருக்குப் பயிற்சி அளித்து அழைத்து வந்திருந்தார். ஓரிடத்தில் பயிற்சி பெற்றாலே ஒன்றுபோல் பாடுவது அரிதான ஒன்றாகும். ஆனால், கணிணி மூலம் பயிற்சி அளித்தும் அனைவரும் ஒன்றுபோல் சிறப்பாகத் திருக்குறள் இசை நிகழ்ச்சியை அளித்தனர். திருக்குறள்…

திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக! இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக! தமிழைப் போற்றாமல் திருக்குறளையோ பிற இலக்கியங்களையோ போற்றிப் பயனில்லை. இங்கே கூறப்படுவது அனைத்து விழா ஏற்பாட்டாளருக்கும் பொதுவானது. இருப்பினும் திருக்குறள் மாநாட்டை அளவீடாகக் கொண்டு பார்ப்போம். கருத்தரங்கத்தில் தமிழ் தொலைக்கப்படுவதைக் காணும் பொழுது இரத்தக் கொதிப்பு வருகிறதே! ஆகச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இவ்வமைப்பினர் நடத்தும் அழைப்பிதழ் பதாகைகள் முதலான எவற்றிலும் தமிழ் இல்லை. தமிழ் நூல் குறித்த தமிழர் நடத்தும் மாநாடுகளில் அல்லது கருத்தரங்கங்களில் தமிழ் இல்லை என்பது தலைக்குனிவு அல்லவா?    புது தில்லியில் அதே…

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி தமிழ் அகராதிகளில் பாராட்டுதலுக்குரிய முதன்மை அகராதி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. 12 மடலங்களாகவும் இவை 31 பிரிவுகளாகவும் வந்துள்ள மிகுதியான சொல் வளம் உடைய அகராதியாகும். இது தமிழின் சொல்வளத்தை உலகிற்கு உணர்த்தும் சிறப்பான அகராதியாகத் திகழ்கிறது.. இவ்வகராதி மேலும் சிறப்பாக அமைய, நிறைகாணும் முயற்சியில் சில கருத்துகளைக் காண்போம். சமசுகிருதச் சொல், மயக்கமாக உள்ளவற்றை அவை தமிழ்ச்சொற்களே என்பதை இப்பேரகரமுதலி விளக்குகிறது. எனினும் அயற்சொற் மடலத்தில் இடம் பெற்றுள்ள சொற்களுள் நூற்றுகணக்கான தமிழ்ச்சொற்களும் இடம் பெறுகின்றன. இதேபோல் …

நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்! பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால் உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார். (நாலடியார், பாடல் 18) பொருள்: வயது எவ்வளவு கடந்துள்ளது? பற்களின் வலிமை எவ்வாறுள்ளது? வலிமையான உணவையும் உண்ண முடியுமா? என்று கருதப்படும் மறைந்துவரும் இளமையை அறிவுடையவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். சொல் விளக்கம்: பருவம்=அகவை; எனைத்து=எத்தனை; உள=ஆகியுள்ளன; பல்லின்=பற்களினுடைய; பால்=வலிமைத்தன்மை; ஏனை=எவ்வளவு; இருசிகையும்= இரண்டு பிடியளவேனும் அல்லது வன்மை மென்மை ஆகிய இருவகை…

நாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு! ஆட்பார்த் துழலு மருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்திற் கொண்டுய்ம்மின் – பீள் பிதுக்கிப் பிள்ளையைத் தாயலறக் கோடலான் மற்றதன் கள்ளங் கடைப்பிடித்த னன்று. (நாலடியார், பாடல் 20) பொருள்: தான் கொண்டு போகவேண்டிய உயிரைத் தேடித் தேடி அலைந்து கொண்டுபோகும் அருளற்றவன் யமன். கருவில் இருந்தாலும் அல்லது பிறந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அழ அக்குழந்தையின் உயிரை எடுத்துச் செல்லும் இரக்கம் அற்றவன் அவன். அவன் வஞ்சகத்தைப் புரிந்துகொண்டு, வழிப்பயணத்தில் உதவும் கட்டுச்சோறு போன்ற…

நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா – தறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியா னற்கா யுதிர்தலு முண்டு. (நாலடியார், பாடல் 19) பொருள்: கொடுங்காற்றால் கனி மட்டும் அல்ல, கனியாத காய்களும் வீழ்வதுண்டு. எனவே, இளமையாகத்தான் உள்ளோம், பின்னர் நல்வினை புரியலாம் என எண்ணாது உள்ளதை மறைக்காது அறம் செய்க! சொல் விளக்கம்: முற்றி=முதிர்ந்து; இருந்த= இருந்த; கனி=பழங்கள்; ஒழிய= மட்டுமல்லாமல்; தீவளியால்= வலிய காற்றால்; நல்= நல்ல; காய்=காய்கள்; உதிர்தலும்=விழுதலும்;…