பாரிய நிலவெடிப்பு 48 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம் பெயர்வு
பாரிய நிலவெடிப்பு 48 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம் பெயர்வு கல ஃகா, துனாலி, மல்பேரி பிரிவு ஊரில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட பாரிய நில வெடிப்பின் காரணமாக 48 குடும்பங்களைச் சேர்ந்த 191 பேர் இடம் பெயர்ந்து துனாலி தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். குறித்த பகுதியில் பல இடங்கில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீடுகள் வெடித்துள்ளன மரங்கள் சாய்துள்ளன. சில மரங்கள் சாயும் நிலையில் காணப்படுகின்றன. நீர் ஓட்டம் மற்றும் கசிவு அதிகமாகக் காணப்படுகின்றன. இதனால் இவர்களைக்…
இலங்கையில் நல்லாட்சியா ? பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் !
இலங்கையில் நல்லாட்சியா ? பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ! நல்லாட்சி என்ற மாயைக்குள் இலங்கைத்தீவில் தொடர்ந்தும் நடந்தேறும் மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தி இலண்டனில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும், வெள்ளைஊர்தி(வான்) கடத்தலுக்கு எதிராகவும், புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களைத் திருப்ப அனுப்ப வேண்டா எனத் தெரிவித்தும் இக்கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறுகின்றது. பிரித்தானிய அரசிற்கு இக் கோரிக்கைகளை முன் வைக்கும் அதேநேரம், பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று…
கனடா : முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் மருத்துவர் வரதராசா ஆற்றிய உரை
கனடாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது களத்திலே வைத்திய பணியாற்றிய மருத்துவர் வரதராசா ஆற்றிய உரை,கண்ணீர் மல்க வைக்கும் வாக்குமுலம். https://www.facebook.com/eelamranjanvot/posts/10157045139000637?notif_t=like¬if_id=14637860392190 ஈழம் இரஞ்சன்
மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! -இலக்குவனார் திருவள்ளுவன்
: மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த நிலப்பகுதி, பெருங்கடல்கோள்களால் தனித்தீவாக மாறிய நிலப்பகுதி, அதுவே இலங்கை என்றும் ஈழம் என்றும் அழைக்கப்பெறும் தமிழர்க்கான நிலப்பகுதி. இங்கோ சாதி வேறுபாடுகளையும் உயர்வு தாழ்வுகளையும் கற்பித்த ஆரியச் சமயத்தால் அழிவினைச் சந்தித்தது தமிழகம். அங்கோ வந்தவர்க்கு அடைக்கலம் கொடுத்ததால், அருள்நெறி போற்றும் புத்தச் சமத்தினரின் இன வெறியால் சிங்களம் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தித்…
அழிந்து வரும் நிலையில் ஃகெல்சிரிகம பேருந்து நிலையம் – பா.திருஞானம்
அழிந்து வரும் நிலையில் பேருந்து நிலையம் கொத்(து)மலை பகுதிக்குட்பட்ட ஃகெல்பொட தோட்டம் ஃகெல்சிரிகம பகுதியில் காணப்படும் பேருந்து நிலையம் அண்மைக் காலமாக உடைந்து காணப்படுகின்றது. இதனால் இந்தப் பேருந்து தரிப்பிடத்தைப் பாவித்து வரும் பயணிகள், பாடசாலை மாணவர்கள், பல இன்னல்களைத் துய்த்து வருகின்றனர். இந்தப் பேருந்து தரிப்பிடத்தில் நுவரெலியா, வெளிமடை, பண்டாரவலை, பதுளை, தியத்தலாவ, கதிர்காமம், பூண்டுலோயா பகுதிகளில் இருந்து கண்டி, கொழும்பு, யாழ்ப்பானம், கம்பளை போன்ற இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. நாளாந்தம் 1000 த்திற்கு மேற்பட்ட பயனிகள் பாவித்தும் வருகின்றனர்….
சின்னம் அணிவித்தலும் நீர் வழங்கலும்
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] பாடசாலை மாணவர்களுக்குச் சின்னம் அணிவித்தலும் பாடசாலைக்கான நீர் வழங்கலும் நுவரெலியா கல்வி வலையத்திற்கு உட்பட்ட கிகிலியம்மான மகா வித்தியாலயம் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தல், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கபட்ட பாடசாலைக்கான நீர் வழங்கல் திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்குக் கையளித்தல் ஆகிய நிகழ்வு சித்திரை 26, 2047 / மே 09,.2016 அன்று மாநிலக்கல்வியமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பாடசாலை அதிபர், நுவரெலியா கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகள்,…
சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 06 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – இன் தொடர்ச்சி) 6/6 இர.சிறீகந்தராசா: நீங்கள் எவ்வளவு காலம் மொத்தமாக உள்ளே இருந்தீர்கள்? து.வரதராசா: மூன்றரை மாதங்கள் இருக்கும். இர.சிறீகந்தராசா: நீங்கள் வெளியில் வந்ததும் அங்கே என்ன செய்தீர்கள்? து.வரதராசா: நாங்கள் வெளியில் வந்தவுடன் கடமையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. ஏனென்றால், எங்களை மீண்டும் கடமையாற்ற விடுவதற்குப் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ அமைச்சு ஆகியவற்றிடம் இருந்து நலவாழ்வுத் திணைக்களத்திற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையை எடுப்பதற்குக் கொஞ்ச காலம் எடுத்தது. அதன் பின்புதான்…
நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! கொடுவினையில், சதிவலையில் இறந்தவர்களை நினைக்கும்பொழுது தீவினையரை மறந்துவிடுவோமோ! கொலைக்குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை கிடைக்க வேண்டாவா? அன்றுதானே நம் மனம் ஆறுதல் அடையும்! இறந்தவர்களை நினைவுகூர்வோம்! இருப்பவர்களுக்குத் துணை நிற்போம்! இறந்தவர்கள் கனவை நனவாக்குவோம்! இருப்பவர்கள் வாழ்வை வளமாக்குவோம்! அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 625) – இலக்குவனார் திருவள்ளுவன்
முகிழ்த்து முழங்கிடும் மீண்டும் தமிழீழம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
முகிழ்த்து முழங்கிடும் மீண்டும் தமிழீழம்! முள்ளி வாய்க்காலில் முடங்கிய தமிழினம், துள்ளி மண்மீட்கத் துணிவுடன் எழுந்து, கள்ளச் சிங்களர் கயமைக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் புலன்கள் ஓயாது! முதிர்ந்த அறிவோடு தமிழினம் காத்திடும், மற்றொரு தலைவனை மீண்டும் பெற்று, மாற்றுச் சிந்தனை அரசியல் செய்து, முயன்று போராட்டம் தொடர்ந்து நடத்தினால், முன்பு வாய்க்காத மாபெரும் வாய்ப்புகள் மலர்ந்து மணம்வீசி முகிழ்க்கும் ஈழம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்! சடலம் ஆக்கிச் சிதைத்தானோ? ஐயோ! சிதைத்துச் சடலம் ஆக்கினானோ? சுவரில் அடித்த செம்மண் கலமாய், சிதறிக் கிடந்த உடல்கள் மீது, சிறுநீர் கழித்தும் அடங்கா வெறியில், சிரங்களை அறுத்து ஒருபுறம் குவித்து, சித்திரம் போன்ற நம்குலப் பெண்களின், செந்தமிழ் மார்பை அறுத்தானே! நீசன், செந்தமிழ் மார்பை அறுத்தானே! நாமும் செய்வ தறியாது திகைத்தோமே! சிதிலம் அடைந்த உயிர்கள் கண்டு, விதியென் என்றொதுங்கி வீழ்ந்திட மாட்டோம், உதிரம் கொதித்துத் தமிழன்னை அருளால், விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்! சிறுவர், மழலையர்…
சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 இன் தொடர்ச்சி) 5 இர.சிறீகந்தராசா: நீங்கள் அங்கு இருந்தபொழுது உடனிருந்த கைதிகள் உடலளவிலோ உளவியலளவிலோ ஏதேனும் வதைகளுக்கு உட்பட்ட காட்சிகளைக் காண முடிந்ததா? து.வரதராசா: உளவியல் தாக்குதல் எல்லாருக்குமே இருந்தது. எனக்குக் கூட! மற்றைய மருத்துவர்களுக்கும் எல்லாம். தொடக்கத்தில் நாங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் நம்ப மறுத்திருந்தார்கள். மறுத்திருந்த பொழுது அவர்களுடைய சித்திரவதை முறைகளைச் சொல்வார்கள், உண்மையைச் சொல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்கும் என்று. இர.சிறீகந்தராசா: எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறுங்கள்! து.வரதராசா: எங்களை அந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதாகக் கூறுவார்கள்….
வட்டுக்கோட்டை இந்துஇளைஞர் சங்கத்தின் வீடமைப்பு அன்பளிப்பு
வட்டுக்கோட்டை இந்துஇளைஞர் சங்கத்தினால் வீடு சீரமைப்பிற்காக உரூ.50,000 பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கத்தினால் கடந்தகாலப்போரில் தன் இரு கண்களையும் இழந்து நான்கு பிள்ளைகளுடன் பல இன்னல்களுடன் வாழ்ந்து வரும் கீரிமலை வீதி சித்தங்கேணியைச் சேர்ந்த மா.குணரத்தினம் என்பவருக்கு இவ் வீடு சீரமைப்பிற்கான உதவி (சித்திரை 24, 2047 / மே7,2016) வழங்கப்பட்டுள்ளது. மா.குணரத்தினம் வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்திடம் விண்ணப்பம் விடுத்திருந்தார். இதன்படி, வீடு சீரமைப்பிற்காக அவரது வீட்டில் சனிக்கிழமை(7/05/2016), கூரைத்தகடுகள், காரைக்குழாய்கள், கம்பிகள், வீட்டுவேலைகளுக்கான கூலி…
