அழித்தவர்களைப் பழி தீர்க்க வரலாறு காத்திருக்கிறது! – பாவா சமத்துவன்

அழித்தவர்களைப் பழி தீர்க்க வரலாறு காத்திருக்கிறது! தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்றான் பாரதிதாசன். தமிழனையே அழித்தவர்கள் மீண்டும் மீண்டும் கூட்டு சேர்ந்து வாக்கு கேட்டு நம் வாசலுக்கே வருகிறார்கள்.. என்ன செய்யலாம் தமிழர்களே..? உன் விரலசைவிற்கு வரலாறு காத்திருக்கிறது..!   பாவா சமத்துவன்

‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40′ : தமிழ்த்தேசியக்கருத்தரங்கு, செருமனி

‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40′ யேர்மனியில் தமிழ்த் தேசியக் கருத்தரங்கு – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை. ‘ வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதன் 40ஆவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு சிறப்பு பெற்றுள்ளது. தந்தை செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் விடுதலைத் தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிலையான தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும்…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 இன் தொடர்ச்சி) [இனிவரும் பகுதிகளில் கொழும்பு நான்காம் மாடியில் தான் எதிர்கொண்ட  இன்னல்களையும், தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் தான் மேற்கொண்டு வரும் பணிகளையும் விவரிக்கின்றார். தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமையான இன அழிப்பிற்குப் பன்னாட்டு நீதி உசாவலின் (விசாரணையின்) மூலமே தீர்வு கிட்ட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துவதோடு, உள்நாட்டு உசாவல் (விசாரணை) எந்தப் பயனையும் தராது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறுகின்றார். ‘ஈழமுரசு’ இதழுக்காக அவரைச் செவ்வி கண்டவர் கலாநிதி இர.சிறீகந்தராசா.] இர.சிறீகந்தராசா: நீங்கள் கிளிநொச்சி தடுப்பு…

தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல் – முள்ளிவாய்க்கால் பேரவல 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்

  மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கிப் பெரும் மக்கள் கூட்டமாக திரண்டு வாருங்கள். இனப்படுகொலை நடத்தப்பட்ட மண்ணில் நின்றுகொண்டு, தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோருவோம். வவுனியா மக்கள் குழு, முல்லைத்தீவு மாவட்ட  மக்கள் உரிமைக்கான அமையம், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கங்கள் (FSHKFDR – Tamil Homeland)   கூட்டாக அறைகூவல் ! கூட்டு ஊடக அறிக்கை: மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கிப் பெரும் மக்கள் கூட்டமாக திரண்டு வாருங்கள்! இனப்படுகொலை நடத்தப்பட்ட மண்ணில்…

வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கம் மிதிவண்டிகள், தையல் பொறி வழங்கியது!

வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கம் மிதிவண்டிகள், தையல் பொறி வழங்கியது!  வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்)சங்கத் தலைமைச்செயலகத்தில்  பாடசாலை மாணவர்கள் நான்கு பேருக்கு  மிதிவண்டிகளும் ஒருவருக்குத் தையல்பொறியும் வழங்கப்பட்டுள்ளன.   சங்கத் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட்டு இந்துஇளைஞர்(வாலிபர்) சங்கத்திடம் தமது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி புரியும் முகமாக  மிதி வண்டிகள், தையல் இயந்திரம் என்பன தந்துதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வட்டு இந்துக் கல்லூரி, வட்டு  மத்திய கல்லூரி, வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை, மூளாய் சுப்பிரமணிய வித்திய சாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு …

வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்

வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்   சித்திரை  முழுநிலா அன்று இளங்கோஅடிகள் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள  இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் சமூகச்சேவை அலுவலர் திரு. எசு.எசு. சீனிவாசன் அவர்களினால் அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.   இந்நிகழ்வில் முன்னாள்  நகரத்துணைத்தலைவரும், இளங்கோ அடிகளின் திருவுருவச் சிலையினை நிறுவியவருமான திரு. க. சந்திரகுலசிங்கம், மாவட்டச்சிற்றூர் ஆட்சி அலுவலர் திரு. எம். விசயரட்ணம், மாவட்டக்…

தமிழர்கள் எழுவரையும் காப்புவிடுப்பில்(parole)விடுவிக்கப் பழ.நெடுமாறன் வேண்டுகோள்!

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இராசீவு கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழர்கள் ஏழு பேர் விடுதலை குறித்து  விடுத்துள்ள அறிக்கை!   இராசீவுகாந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்ற ஏழு பேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது.   கடந்த 24 ஆண்டுக் காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என்று 2014ஆம் ஆண்டு…

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல்

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு  தொடர்பாக  சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று கல்வி இணையமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் (19/4) நடைபெற்றது.  இக் கலந்துரையாடலில்  மத்திய மாகாண  அவை உறுப்பினர் ஆர். இராசாராம், பெருந்தோட்ட  நிறுவனங்களின்ன் முகாமையாளர்கள்,  வீடமைப்பு  மேம்பாட்டு(அபிவிருத்தி) அதிகார  அவையின் அதிகாரிகள், தோட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் இந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ள வீடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

இர.சிறீகந்தராசா: நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கிளிநொச்சிக் கமுக்க (இரகசிய) முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன? து.வரதராசா:: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய ஊர்தியில் வவுனியா மருத்துவமனைக்குப் பண்டுவத்துக்காக அனுப்புவதாகத்தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கி விடப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பேருந்திலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சிறிது நேரத்தில் திரும்பி…

அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த் திருவிழா

முத்தேர்த் திருவிழா   நுவரெலியா ஆவேலியா  அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின்  ஆண்டு சித்திரை முழுநிலவு முத்தேர்த்திருவிழா  சித்திரை 07, 2016 / 21.04.2016 காலை 10.30  மணியளவில் தொடங்கிச்சிறப்பாக நடைபெற்றது.   ஊர்வலத்தில் கலை  பண்பாடடு நிகழ்வுகளுடன் முத்தேர் பவனி நகர்வலம் வருவதையும் ஆலயத்தின்  செயற்குழுத் தலைவரும் கல்வி இணையமைச்சருமான வேலுசாமி இராதாகிருட்டிணன், ஆலய ஆயுட் காப்பாளரும் முன்னால்   சார்பு அமைச்சருமான முத்து சிவலிங்கம்,  ஆலயச் செயற்குழு உறுப்பினர்களையும் படங்களில் காணலாம். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]