தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது! – பேரா.சி.இலக்குவனார்

தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது   தொல்காப்பியம் மொழியியலையும் இலக்கிய இயலையும் விளக்கும் நூலேயாயினும் தமிழர் வாழ்வியலையும் அறிவுறுத்தும் வரலாறாகவும் அமைந்துள்ளது. தமிழர் வரலாறு எழுதப் புகுவோர் தொல்காப்பியத்தை நன்கு கற்றல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழரின் உண்மை வரலாற்றை எழுத இயலும். ஆகவே, தமிழக வரலாறும் பண்பாடும் அறிய விரும்புவோர் தொல்காப்பியத்தைத் தவறாது கற்றல் வேண்டும். தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது என்ற குறிக்கோளைக் கொள்ளுதல் வேண்டும். கல்வித் திட்டமும் அதற்கு இடம் கொடுத்தல் வேண்டும். தொல்காப்பியம் கற்றுத்…

சாதிக் கட்சிகள் தோன்றாமலிருத்தலே சாலவும் நன்று! – முனைவர் சி.இலக்குவனார்

சாதிக் கட்சிகள் தோன்றாமலிருத்தலே சாலவும் நன்று!   இந்நிலையில் சாதிகளின் பெயரால் கட்சிகளை உருவாக்கித் தேர்தல்களில் போட்டியிட முனைவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்சி என்று அமைத்துக் கொண்டு தேர்தலில் ஈடுபடுவாரேல் தேர்தல் களம் போர்க்களமாக மாறி நாட்டின் அமைதியும் மக்களின் நல்லுறவும் கெட்டுவிடும் என்பதில் எட்டுணை ஐயமின்று. ஆதலின் சாதிகளின் பெயரால் கட்சிகள் அமைக்க வேண்டாமென அன்புடன் வேணடுகின்றோம். கொள்கைகள் அடிப்படையில் கட்சிகள் அமைவதுதான் மக்களாட்சி முறைக்கு ஏற்றதாகும். நாட்டுக்கு நலம் பயக்கும் கொள்கைகளை மக்களிடையே…

ஆரியத்தை உயர்த்துவதும் தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது

ஆரியத்தை உயர்த்துவதும் உண்மையான உயர்வுடைய தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது   தூயதமிழ்ச் சொற்களை ஆரிய மொழிச் சொற்கள் எனத் திரித்துக் கூறுவதும், தமிழர்க்கே உரிய நாகரிகத்தையும் பண்பாட்டையும் ஆரியர்க்குரியன என அறங்கோடி அறைவதும் இன்னும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றமை மிக மிக வருந்துவதற்குரியது. உண்மைக்குப் புறம்பான புனைந்துரை எழுதி ஆரியரே மேலோராய்த் தமிழர்க்கு நாகரிகம் கற்பித்தனர் எனக் கூறுவோரை உயர்ந்த வரலாற்று ஆசிரியர் என்பதும் காய்தல் உவத்தல் இன்றிஆராய்நது தமிழர் நாகரிகச் சிறப்பை உரைப்போரைக் குறுகிய நோக்கமுடைய குறுமதியாளர் எனக் குற்றம் கூறி இகழ்வதும்…

நம் நாட்டில் நடைபெறும் ஆட்சியே சாதிமுறை ஆட்சியாகிவிட்டது! – சி.இலக்குவனார்

நம் நாட்டில் நடைபெறும் ஆட்சியே சாதிமுறை ஆட்சியாகிவிட்டது.   சாதிகள் ஒழிய வேண்டுமென்று மேடைகளில் உரக்க முழங்குகின்றனர். இதழ்களில் இனிமை பொருந்த எழுதுகின்றனர். ஆனால் செயலில் சாதிப்பதற்கு அடிமையாகின்றனர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமே இந்நாட்டாரின் பெருவழக்காய்ப் போய்விட்டது. கற்றபின் நிற்க அதற்குத்தக என்பதனை உளங்கொள்வார் அரியராகிவிட்டனர்.   தேர்தல் முறை வந்தபிறகு சாதிகளின் செல்வாக்கு இன்னும் மிகுந்துவிட்டது. ‘வன்னியர் வாக்கு அந்நியர்க்கில்லை’ என்பது உலகறிந்த தேர்தல் முழக்கமாகும். சாதிகள் ஒழிக்க முற்பட்டுள்ள கட்சிகளும் சாதிகளின் நிலையறிந்தே தேர்தலுக்கு ஆட்களை நிறுத்தும் கடப்பாட்டுக்கு ஆளாகியுள்ளனர்….

ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்

ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்   தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும்பற்றித் தமிழர்களே கற்றவர் என உலகோரால் போற்றப்படும் தமிழரே நன்கு அறியாதவராய் உள்ளனர். ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இமயம் முதல் குமரி வரை இனிதே வாழ்ந்த தமிழர்கள் ஆரியர்களிடமிருந்தே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றனர் என்று கூறுவது உண்மை நிலையறியாத வரலாற்று ஆசிரியர்க்கு ஒரு மரபாகிவிட்டது. மேனாட்டு வரலாற்று ஆசிரியர்களில் சிலர் நடுநிலை நின்று ஆராய்ந்து ஆரியர்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்னரே தமிழர்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும்…

சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே! – சி.இலக்குவனார்

சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே!   சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே. சாதி என்ற சொல்லே தமிழன்று. இதுவே சாதி தமிழ் நாட்டில் தமிழரல்லாத வர்களால் புகுத்தப்பட்டது என்பதைத் தெற்றென அறிவிக்கும்.   சாதி இங்குச் செல்வாக்குப் பெற நுழைந்த காலத்திலேயே தமிழ் நாட்டுப் பெரியோர்கள் அதனைக் கடிந்து வந்துள்ளனர். தொல்காப்பியர் காலத்தில்கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் கால்கொள்ளவில்லை. திருவள்ளுவர் காலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் வேர் கொள்ளத் தொடங்கியுள்ளன. அதனாலேயே வாழ்வியல் அறம் உரைத்த வள்ளுவர் பெருமான் “பிறப்பொக்கும்…

சாதிகள் ஒழிந்தால் மக்களாட்சி வேரூன்றும்! – சி.இலக்குவனார்

சாதிகள் ஒழிந்தால் மக்களாட்சி வேரூன்றும்!   இன்னும் மக்களாட்சி முறைக்குரிய தேர்தலுக்கு வேட்பாளர் களை நிறுத்துவது சாதி அடிப்படையிலேயே நிகழ்கின்றது என்பதை யார்தாம் அறியார். வேட்பாளர் தகுதியறிந்து வாக்குகள் கொடாது சாதியறிந்துதானே கொடுக்கின்றனர் பெரும்பாலார். சாதிகள் வேண்டா என்று பறை சாற்றும் கட்சிகள்கூட இந்நிலையைப் புறக்கணிக்க முடியவில்லையே! ஆகவே சாதிகளின் பேரால் நிகழும் அனைத்தையும் தடுத்து நிறுத்தற்குச் சட்டத்தின் துணையை நாடல் முற்றிலும் பொருத்தமேயாகும். எம்முறையிலானும் சாதிகளை ஒழித்தல் வேண்டும். எவ்வளவு விரைவில் சாதிகன் ஒழிகின்றனவோ அவ்வாளவு விரைவில் நாட்டு நலம் காக்கப் பட்டதாகும்….

எம் தலைவர் தமிழ்ப் பெரியார் என்றும் வாழ்க! – கதி.சுந்தரம்

பெரியார் ஒருகுலத்துக் கொருநீதி உரைத்து நிற்கும் உயர்வில்லார் தலைசாயப் புரட்சி செய்த ஒரு தலைவர்; தென்னாட்டின் உயர்வைக் கூறும் உயர்கதிரோன்; சாதியென்னும் கொடிய காட்டுள் வருகின்ற இன்னலதை எதிர்த்துப் போக்கி வாளேந்தி முதற்பயணம் செய்த வீரர்; இருளகற்றும் பணிபுரிந்து நிற்கும் செம்மல், எம் தலைவர் தமிழ்ப் பெரியார் என்றும் வாழ்க! – கவிஞர் கதி.சுந்தரம்

முன்னணியில் மூவர் – கவிஞர் சகன்

முன்னணியில் மூவர் பாரதி இனிமையும் வளமும் கொண்ட எழில் மொழி தமிழே! அன்புக் கனிவுடன் உலகமெல்லாம் கலந்துற வேற்கத் தக்க தனிமொழி! சுவைமிக் கோங்கித் தனினிறை வெய்தி நிற்கும் பனிமொழி! வாழ்த்த வந்த பாரதிப் புகழும் வாழி! பெரியார் பொன்னான தமிழர், நாட்டுப் புகழினைக் காற்றில் விட்டுத் தன்மானம் சாய விட்டுத் தமிழ்மொழிப் பற்றும் விட்டுப் புன்மானப் புழுக்க ளென்னப் புதைந் தொழிந் திருந்த போழ்து தன்மான இயக்கந் தன்னைத் தழைத்திடத் தந்தான் தந்தை! அண்ணா ‘‘அன்னவன் பாதை காட்ட அவன் வழி முரசு…

கொள்கைச் சிற்பி அண்ணா – கதி.சுந்தரம்

தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை அறநெறியைப் பரப்புகின்ற தலைவர் அண்ணா; அருந்தமிழர் பெருமையதை முழக்கும் வீரர்; திறமை மிகு பேச்சுக்கோர் வடிவம் ஆவர்; சிந்தனை சேர் எழுத்துக்கோ ஒருவர் ஆவார்; குறள் நெறியைப் பரப்புகின்ற கொள்கைச் சிற்பி; கூறுபுகழ்த் தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை; உரனுடைய மனிதரெலாம் போற்றி நிற்கும்; உயர் தலைவர் தமிழ் அண்ணா வாழ்க! வாழ்க!! – கவிஞர் கதி.சுந்தரம்

பாராளுமன்றில் அறிஞர் அண்ணா – இந்து ஆங்கில நாளிதழ்

  பாராளுமன்றில் அறிஞர் அண்ணா   திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரும்பெருந் தலைவரான அறிஞர் அண்ணா அவர்கள் தமது பாராளுமன்ற முதற் சொற்பொழிவை வெறுப்பிற்கும், பகைமைக்கும், சினத்திற்கும் நடுவண் நிகழ்த்தினார்கள். அன்னார் முதற்பேச்சு இந்திய மேலவையின் வரலாற்றிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். தமிழ்ப் பெருங்குடி மக்களால் ‘அண்ணா’ என்று அழைக்கப்படுகின்ற அரிய தலைவர் இவர். பிரிவினையாளர், இந்தித் திணிப்பின் இணையற்ற எதிர்ப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர் என்னும் புகழோடு இந்திய மேலவைக்கு வந்தார்.   அறிஞர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய முதற் பேச்சு ‘சொற்பெருமழை’ என்று பாராளுமன்ற…

இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி இலக்குவனார் – இரா. இளங்குமரன்

  “தமிழ் மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்” எனும் உயிர்ப்போடு எழுந்தது தமிழ்க் காப்புக் கழகம். “தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயிலுக!” என்னும் நான்மணிகளைச் செயற்படுத்தும் செம்மாப்புடன் நான்மாடக்கூடல் திருநகரில் ஆடி 22, தி.பி. 1993 / 06.08.1962 இல் எழுந்தது தமிழ்ப்பாதுகாப்புக் கழகம். அதன் தலைவரும் நிறுவனரும் பேராசிரியர் சி. இலக்குவனார். . . . .                                …