கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்!  – தங்க. சங்கரபாண்டியன்

கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்!      ‘கல்விப் பெருவள்ளல்’, ‘புதுக்கோட்டை அண்ணல்’ என்றெல்லாம் புகழப்படும் பு.அ. சுப்பிரமணியனார், ஐயாக்கண்ணு – மாணிக்கத்தம்மாள் இணையருக்கு ஐப்பசி 07, 1929   – 22.10.1898-ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையார் மறைவினால் கல்லூரியில் படித்து வந்த அண்ணலாரின் படிப்பு பாதியில் தடைபட்டது. அதனால் இவர் கல்விச் செல்வத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கிலும், கல்விச் செல்வம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் பேரவாவிலும், 1924-ஆம் ஆண்டு ‘கல்வி வளர்ச்சிக் கழகம்‘ ஒன்றைத் தொடங்கினார்.  …

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018, சிட்டினி

    சித்திரை 15, 2049  –  28.04.2018 மாலை 4,30 முதல் இரவு 9.30 வரை அருள்மிகு துருக்கை அம்மன் கோயில் வளாகம் பகரர் பூங்கா, சிட்டினி  (Regents Park, Sydney) தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018, சிட்டினி சிட்டினித்  தமிழ் இலக்கியக் கலை மன்றம் ஆத்திரேலியத் தமிழ்ச்சங்கம் ஓபன் தமிழர் கழகம்   பெருமைக்குரிய சான்றோர்கள் சி.வை.தாமோதரம்(பிள்ளை) கவிஞர் கண்ணதாசன்  

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39     ஒரு கவி அரங்கத்தில் தலைமை வகிக்க நேர்ந்த ஒருவரை, “தக்கவன் நீ”! என்று கவிஞர் பாராட்டுகிறார். அதற்குரிய காரணத்தை அவர் கூறுகிறார், “உன் தலைமையில் என் கவிதையை நான் தரும் வாய்ப்பை நீ பெற்றிருக்கிறாயே, அதனால் தான்“ என்று பெருமிதத்துடன். “புல்லர் தமை வாழ்த்தாத என் பா கொண்டு போற்றுகிறேன், வணங்குகிறேன் பெருங்கவிக்கோ“ என்றும் பாடுகிறார். இவ்வாறு சொல்லக் கூடிய துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது? இந்த…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 – வல்லிக்கண்ணன்

 (ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 பெருங்கவிக்கோவின் துணிச்சல் வியக்கப்பட வேண்டியதேயாகும். தனக்குப் பிடிக்காத முறையில், சரியில்லாத கருத்தை, யார் எங்கே சொன்னாலும், அந்த இடத்திலேயே எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார் அவர். கவி அரங்கத்தில் தலைமை வகிப்போருடன் அவர் கருத்து மோதல் நடத்தியிருக்கிறார். பெருங்கவிக்கோ ஐயப்ப பக்தர். சபரி மலைக்குப் போவதற்கு நோன்புகள் ஏற்று நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பவர். அவருடைய கோலத்தை ஒரு கவி அரங்கத்தின் போது தலைமைவகித்த பகுத்தறிவுவாதி பழித்துப் பேசி விட்டார்,…

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 4.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 3. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- 4. ஆதிமந்தியார் இவர் பெண்பாலர் என்பதும், இவர் நல்லிசைப்புலமை வாய்ந்தவர் என்பதும், ‘மக்க ணுதலிய வகனைந் திணையுஞ் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஆ’ என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர், ‘மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் ண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலு மாடுகள மகனே’. (குறுந்தொகை-31) என்னும் பாடலை எடுத்தோதி, ‘இது காதலற் கெடுத்த…

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 4

(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 3. தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள்   4 வீர நெஞ்சத்தாலும் ஈர உணர்வாலும் நிகரற்று விளங்கியவன் வேள்பாரி. அவன் ஆண்ட பறம்பு மலை, பகை வேந்தர் பல்லாண்டு முற்றுகையிடினும் ‘கொளற்கரி தாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார் நிலைக்கெளிதாய்‘ (குறள், 745) அரண் ஆற்றல் மிக்கதாய் விளங்கியது. கலப்பை ஏந்தும் உழவர் எல்லாரும் கூர்வாள் ஏந்திப் போர் முனை புகினும் சிறியிலை மூங்கிலின் நெல்லும், தீஞ்சுவைப் பலாவின் சுளையும், வள்ளிக்கிழங்கும், நறுஞ்சுவைத் தேனும் வேண்டளவும் கிடைக்கும் வற்றா வளமுடையது அவன்…

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 3.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 2. தொடர்ச்சி)      நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – 3 மற்றும் அவ் வடநூலுள் ஒருசாரார், சூத்திரசாதியாரும் பெண்பாலாரும் வேதத்தின் சொல்வழக்கும் பொருளுணர்ச்சியும் மெய்யுணர்தலும் வீடும் எய்தப்பெறார் என்று கூறி, அவரை அறியாமையுள்ளே நிறுத்துப. இஃதெல்லார்க்கும் உடன்பாடன்று. பெரும்பாலார் வேதத்தை முறையே நியமிக்கப்பட்ட ஒலியுடன் ஓதற்கண் சூத்திரசாதியாரையும் பெண்பாலாரையும் விலக்குபவல்லது, அதன் சொல்வழக்கினும் பொருளுணர்ச்சியினும் மெய்யுணர்ந்து வீடுபெறுதலினும் விலக்கார். இதுவே இத் தமிழ்நாட்டுச் சிறந்த சைவ வைணவ நல்லாசிரியர் தொன்னெறி மரபாம். சைன பௌத்தரும் மெய்யுணர்ந்து வீடு…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 – வல்லிக்கண்ணன்

 (ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 8. தன்னம்பிக்கையும் தன்மான வீரமும்   பெருங்கவிக்கோ தன்னம்பிக்கை மிகுந்தவர்; தனது திறமைகளை நன்கு உணர்ந்தவர்; தன்மானம் மிக்கவர்; அதில் முகிழ்த்த வீரமும் துடிப்பும் கொண்டவர். அவருடைய இப்பண்புகள் அவரது கவிதைகளில் ஒளிப்பொறி சிதறிப் பல இடங்களிலும் பரவிக் கிடப்பதைக் காணலாம். காலமெல்லாம் விழித்திருந்தே கடமையாற்றும் கவிஞன் நான் அவனும் இவனும் எவனும் ஒன்றாய் ஆகும் கொள்கை யுடையவன் யான் விருப்பு வெறுப்பை வென்று வாழும் வேதாந்தி போல்…

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 3.

 (சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 2. தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள்   3 1. கபிலர்  தொடர்ச்சி  மாவும் பலாவும், வாழையும் வள்ளியும், ஆரமும் கமுகும், வேங்கையும் விரிமலர் வெட்சியும், தேனும் தினையும் பெருகிக் கிடக்கும் குறிஞ்சி நிலத்தில் இயற்கை அன்னையின் இன்பத் திருவிளையாடல் ஏற்றமுற்று விளங்குவது இயல்பேயன்றோ? அத்தகைய பல்வளமும் மல்கிக் கிடக்கும் பேறு பெற்று விளங்கியது மாவண்பாரியின் புகழ் பரப்பும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்ந்த பறம்பு மலை. பறம்பின் வளத்தைக் கபிலர் பாடியுள்ள திறத்தினை என்னென்று போற்றுவது! சங்கச் சான்றோர்க்கே உரிய…

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 3

(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2 தொடர்ச்சி) திருவள்ளுவர்  : 3   தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். (263)   நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் மறையாவா நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலின். (கலி. நெய்தல்-8)   களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும். (928)   . . . . . . . . . காமம் மறையிறந்து மன்று படும். (1138)   தோழிநாங், காணாமை யுண்ட கருங்கள்ளை…

தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 2

(தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 1 – தொடர்ச்சி)   தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 2   இனிக் கும்பகோணக் கலாசாலையில் தமிழ்ப் புலமை நடாத்திவரும் மகா வித்துவான் பிரம்மசிரீ  உ.வே. சுவாமிநாத(ஐய)ரவர்கள் தாம் பதிப்பித்த சிலப்பதிகாரத்தினும்  மணிமேகலையிலும் தமிழ் நூல்கள் பலவற்றைப் பற்றிய குறிப்புக்களெழுதி யிருக்கின்றனர். இன்னும் புறநானூற்றிலும் நல்லிசைப் புலவர் பலருடைய சரித்திரக் குறிப்புக்களும் அப்புலவர்களை யாதரித்தாரைப்பற்றிய குறிப்புகளும் வரையப்பட்டுள. இவையனைத்தையும் ஒருங்கு தொகுத்து இன்னுந் தாம் அருமையாகக் கண்டு குறித்துவைத்துள விசயங் களையுங் கூட்டித் தனி…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36  படக்கலை இதர கலைகளை எல்லாம் பாழாக்கி வருவதைக் கண்டு கவிஞர் வேதனையோடும் உளக்கொதிப்போடும் பாடல்கள் பாடியிருக்கிறார். பிழைப்புக்காக அங்கு நல்லவர்களும் கெட்டுப் போவதை எண்ணி மனம் வருந்துகிறார். கலையை வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் வயிற்றைத்தான் வளர்க்கின்றார் என்பதைச் சுட்டுகிறார்.    தமிழரின் பெருமைகளை எண்ணி மகிழும் பெருங்கவிக்கோ இன்றையத் தமிழரின் இழிதன்மைகளை எடுத்துக்கூறப் பின் வாங்குவதில்லை. யார் என்று கேட்டு, இந்தத் தமிழன்தான், தமிழன்தான், தமிழன்தான்…