மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற என் நண்பர் ஒருவர் நல்ல படிப்பாளி, நிறைய படித்திருக்கிறார். அவரிடம் நான் கேட்டேன், “பூ.ஆலாலசுந்தரனார் குறித்து உங்களிடம் செய்தி ஏதாவது இருக்கிறதா?” அவர் சொன்னார், “இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்” சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நண்பரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். “இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது!” இப்படிச் சொன்னார்…

மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 4/5   45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சன சபையில் மறைமலையடிகளார் பேசுகின்றபொழுது “கடவுள் நம்பிக்கை வர வரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணி(ப் பிள்ளை)யும், ச.ச.(J.S.) கண்ணப்பரும் “பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்” என நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள்.  நான் அதுசமயம்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (25)   தொடர்ச்சி)   ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26)  7. அறச் சீற்றமும் புதுமை நோக்கும்  துறை தோறும் மண்டிக் கிடக்கின்ற சிறுமைகளும் சீரழிவுகளும் பெருங்கவிக்கோவின் உள்ளத்தை உறுத்து கின்றன. அவரைக் கோபம் கொள்ளச் செய்கின்றன. ஐயோ, நம் நாடும் நம் மக்களும் இப்படி இருக்கிறார்களே என்ற வேதனையால் எழும் அறச்சீற்றம் அவர் கவிதைகளில் சூடாகப் பரவிப் பாய்வதை பல இடங்களில் காண முடிகிறது. நமக்குள் தமிழர்க்குள் நாம் காணும் பெருங்குறை என்? நமக்குள் நாமே நாவளர்த்து நயம்…

மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 2/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 3/5   குறித்த நாளில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக் கால் மண்டபத்தில் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழா தொடங்குகின்ற நேரம். எல்லோரும் வந்துவிட்டார்கள். 9.15 ஆகியும் தலைவர் வரவில்லை. கூட்டத்தில் ஒரு பெரிய சலசலப்பு. எல்லோர் கையிலும் துண்டு அறிக்கைகள். அதில் ‘மறைமலையடிகள் ஒரு சைவரா?’ என்ற தலைப்பில் சில கேள்விகள் அச்சிடப் பெற்றிருந்தன. இது வந்திருந்தோர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தையும், தலைவர் உள்ளத்தில் ஒரு வருத்தத்தையும் உண்டாக்கிவிட்டது. தலைவர் வராமைக்குக் காரணம் அது…

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல் – எழில்.இளங்கோவன்

இராபர்ட்டு கால்டுவெல்  முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) அவர்களின் தாயகம்,  காட்டுலாந்து(Scotland). ஜரோப்பாவின் மிகப்பெருந் தீவான அயர்லாந்தில் அவர் பிறந்தார். அந்நாட்டின் கிளாடி(Clady) ஆற்றங்கரையில் அமைந்த பெல்பாட்டு என்ற சிற்றூர் அவரின் சொந்த ஊர்.  சித்திரை 26,  1845 / 1814 ஆம் ஆண்டு மேத் திங்கள் 7 ஆம் நாள் அவர் பிறந்தார். தொடக்கக் கல்வியை அயர்லாந்தில் பயின்ற அவர் தன் பத்தாம் அகவையில்  பெற்றோருடன் காட்டுலாந்துக்குப் போய்விட்டார். பதினோறாம் அகவையில் ஆங்கில இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுறப் பயின்ற கால்டுவெல், தன்…

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் : மறை. திருநாவுக்கரசு

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம்   மறைமலையடிகளின் நாட்குறிப்பு : 13-1-1899 :  மாண்புமிகுந்த இராமானுசர் கி.பி. 986இல் பிறந்தார். விளக்கம் : இவர், வைணவ சமய ஆசிரியராவர். ‘பாஃசியகாரர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். வைணவ சித்தாந்தத்தைத் தம் பேருரைகளாலான நூல்களாலும், சொற்பொழிவுகளாலும் பாரத நாடெங்கும் பரப்பியவர். வடமொழியிற் பலவும், தமிழிற் சிலவும் ஆக நூல்களையியற்றியவர். -வித்துவான். மறை. திருநாவுக்கரசு

மறைமலையடிகள் 2/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 2/5    அவரது நூல்களிற் பல தமிழ்ப்பற்றையும் சமயப் பற்றையும் வளர்க்கக் கூடியவை. சில ஆராய்ச்சி அறிவை வளர்க்கக் கூடியவை. அவரது ஆழ்ந்த, அகன்ற நுண்ணறிவைப் பல நூல்களிலும் கண்டு மகிழலாம். அவற்றுள் சில அவரது அச்சகத்திலேயே அச்சிடப் பெற்றவை. சிலரது நூல்களிற் காணப்படுவதுபோன்ற அச்சுப்பிழைகள் எதையும் அவரது நூல்களிற் காணமுடியாது. அவர் தலைமை வகிக்காத, சொற்பொழிவு நிகழ்த்தாத, தமிழ்க் கழகங்களோ, சைவ சபைகளோ தமிழகத்தில் ஒன்றுகூட இல்லை.   1914-இல் வடநாடுகளுக்கும், 1915-இல்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (25) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24)   தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 25   பண்பு நலன்களாலேயே ஒருவன் நன்மணி மனிதன் ஆவான் என்றும், பழியிலா வாழ்வே பண்பின் ஒழுக்கமே பயன்தரு உயர்வாகும் என்றும் அவர் உறுதியாய்க் கூறுகிறார். எது தெய்வம் என்று கேட்டுப்பெருங்கவிக்கோ தெளிவுபடுத்தியுள்ள கவிதைகள் அவரது உளப்பண்பை, நல்நோக்கை, மனவிரிவைப் புலப்படுத்துகின்றன. தீதில்லா நெறியினிலே தெய்வம் உண்டு! திக்கெல்லாம் உறவாடும் இயற்கைத் தாயாள் மோதிவரும் அழகுருவில் தெய்வம் உண்டு!. முதிர்கின்ற அனுபவத்தில் தெய்வம் உண்டு! யாதினிலும் இனிய தெய்வம் நம்மை…

மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ.

  மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ. மறைமலையடிகள் சுவாமி வேதாசலம் என்கிற பல்லாவரம் உயர்திரு மறைமலையடிகள் தமிழ்த்தாயின் தவமகன். பிறப்பு : 1876இல் பிறந்த நாள் : சூலை 15 பிறந்த ஊர் :  காடம்பாடி வட்டம் : நாகப்பட்டினம் தந்தையார் பெயர் : சொக்கநாதப்பிள்ளை இளமைப் பெயர் : வேதாசலம்  படித்த கல்லூரி : நாகை வெசுலி மிசன்  சைவ ஆசிரியர் :  சோமசுந்தர(நாயக்க)ர் பொதுத் தொண்டு : 16ஆம் ஆண்டில் முதல் தோற்றம் : இந்து மதாபிமான சங்கம் திருமணம் : 17ஆம் ஆண்டில்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23)   தொடர்ச்சி)] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24)  இருள் மூடும் தமிழகத்தில் அருட்கதிராய் வந்து, மண்ணிலே மனிதகுலம் ஒன்றே என்று நல்மார்க்கத்தை அறிமுகம் செய்த வள்ளலாரை விதவிதமாய்ப் போற்றி இசைக்க பெருங்கவிக்கோ அலுக்கவில்லை. வேறொரு இடத்தில் வள்ளலார் பெருமையை அவர் இவ்வாறு பாடுகிறார்: – இருட்சாதி மதத்தொழுநோய் இவ்வுலகம் முற்றும் இவன்பெரியன் நான்பெரியன் என்பதன்றிவேறு அருட்தன்மை எல்லேரர்க்கும்.காட்டுவதாய் இல்லை அவரவர்கள் தம்பெயர்க்கே அதர்மங்கள் கண்டார் பொருட்தன்மை பெரிதல்ல புண்ணியங்கள் அல்ல பூமியுள்ள மனிதரெல்லாம் மதங்களாலே பிரிந்தே மருட்தன்மை…

தமிழ் மொழி மீட்புப் போராளி இராமலிங்க அடிகளார் – சேசாத்திரி சீதரன்

தமிழ் மொழி மீட்புப் போராளி இராமலிங்க அடிகளார் ‘தமிழ் மொழி மீட்புப்போராளி’ இராமலிங்க அடிகளார் பிறந்த நாள் புரட்டாசி 21, தி.பி. 1854 / 5.10.1823  ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் வரலாற்றில் ஆதிக்காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. திருவள்ளுவர் இதனைத் தொடங்கி வைத்தார். பிறகு ஆன்மீகத் தளத்தில் நின்று சித்தர்கள் போர் தொடுத்தனர். இருப்பினும் ஆரியம் தமிழோடு கலந்து தன்னைப் புதுப்பித்துக் கொண்டது. இதனை எதிர்த்துத் தமிழை கருவியாக்கிப் போராடிய மாபெரும் புரட்சியாளர்தான் இராமலிங்க அடிகளார்.   அவர் எப்போதும் தமிழை இயற்கையுண்மைச் சிறப்பியல்…

பேராசிரியர் கா.சு.(பிள்ளை) – எழில்.இளங்கோவன்

பேராசிரியர் கா.சு.(பிள்ளை)   ஓலைச் சுவடிகளுள் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான உ.வே.சாமிநாதரின் மாணவர்.  திராவிட இயக்கத் தலைவர்களான நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் ஆசிரியர்.  தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் பரிந்துரையால், சென்னை  சட்டக் கல்லூரியில் பேராசிரியராக அமர்த்தப் பட்டவர்.  நீதிக் கட்சியின் அன்றைய உறுப்பினர்களுள் ஒருவரான எம்.ஏ. முத்தையா (செட்டியார்) அவர்களால் பாராட்டப்பட்டு, தமிழ்ப் பணிக்கான செப்புப் பட்டயம் பெற்றவர்.  சென்னைப் பல்கலைக் கழகத்தின், சென்னை மாகாணக் கலைச் சொல்லாக்கக் குழுவின் …