குறிஞ்சி நிலத்தவர் உணவு – மா.இராசமாணிக்கம்
குறிஞ்சி நிலத்தவர் உணவு சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கும் விற்று மீன், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் (பொ.ஆ.படை அடி:214-15). சிறப்பு நாள்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது. (குறிஞ்சிப்பாட்டு அடி: 304). நன்னனுக்குரிய சவ்வாது மலையில் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். (மலைபடுகடாம் அடி:168-169). நன்னனுடைய மலைகளைச் சேர்ந்த குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் உண்டனர். நெல்லால் சமைத்த…
பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! : 1
தமிழனாய்ப் பிறந்ததால் வாழ்வைத் தொலைத்த பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! : 1 வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் அவரது வழக்கறிஞர் மூலமாக இளைய விகடனுக்குச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! 25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. இஃது, ஏதோ அரசியல் வானில் அடியெடுத்துவைத்து அடைந்துவிட்ட பெரும் பதவியின் ஆர்ப்பாட்டமான வெள்ளிவிழா அல்ல… கலைத்துறையில் எனது 25 ஆண்டு அருவினையின் – சாதனையின் -வெற்றிக்கொண்டாட்டம் என நினைத்துவிடாதீர்கள். இருள்சூழ்ந்த…
தோல்வி என்பது தோல்வி அல்ல! – ஈழன்
தோல்வி என்பது தோல்வி அல்ல வெற்றியின் எதிர்ச்சொல் மாத்திரமே! ஒவ்வொரு முறையும் உனக்கு வெற்றிதான் கிடைக்கவில்லை! அதன் பொருள் தோல்வியல்ல! நீ எவ்வாறு வெற்றி கொள்வது என்பதற்கான படிப்பினைகள் வெற்றிக்கான படிக்கட்டுகள்! அதிகம், அதிகம் நீ வெற்றிகளை தவறவிடுகிறாய் என்றால்……….. அதிகம், அதிகம் நீ வெற்றிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறாய் என்று பொருள்! தோல்வி என்பது உனக்குள் நீ தோற்காதவரை உன்னோடு நீ தோற்காதவரை வெற்றிகளே! தோல்வி என்பது தோல்வி அல்ல வெற்றியின் மறைபொருள்களே! உன் முயற்சிக்கான வெற்றிகளே! உனக்குள் நீ தோற்காதவரை உன்னோடு நீ…
பண்பாளருக்குப் பரிசு -செல்வி
பல்கேரிய நாட்டுச் சிறுகதை பண்பாளருக்குப் பரிசு கதிரவன் மறைந்து நிலவு வந்தது. தன் வருகையை மகிழ்வுடன் வரவேற்காமல் கதிரவன் மறைவிற்குப் பூமி வருத்தமாக கருப்பு ஆடையை அணிந்து கொண்டு இருக்கிறதே என நிலா சினங்கொண்டு முகில் கூட்டத்தில் மறைந்தது. இருள் சூழ்ந்த இந்த நேரத்தில் ஏழ்மைத் தோற்றத்தில் இருந்த முதியவர் ஒருவர் அந்த ஊருக்குள் நுழைந்தார். ஊரின் தொடக்கத்தில் தெரிந்த பெரிய மாளிகை ஒன்றினுள் நுழைந்தார். அவ் வீட்டில் இருந்த பெண்மணியிடம் ”அம்மா இன்று இரவு மட்டும் தங்கிக் கொள்கின்றேன்” என்று…
சமுதாயம் அன்றும் இன்றும் – தி. வே. விசயலட்சுமி
சமுதாயம் அன்றும் இன்றும் மக்களினம் அறிவு வளர்ச்சி பெற்று நாகரிகம் மிகுந்து வளர வளர சமுதாய உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயக் கொள்கைகளுக்கும் இன்றையக் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தால் உண்மை புலனாகும். ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே -என்று பாடினார் புலவர் பொன்முடியார். அரசனுக்காகப் போர்புரிந்து வெற்றி பெற்றுத் தருதலே அக்கடமையாக இருந்தது. இன்றோ, போர் முயற்சியில் ஈடுபடாமல் உலக அமைதியை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதே இளைஞர்க்குக் கடமையாக…
கருப்பினப் போராளி அலி! -ஆரூர் தமிழ்நாடன்
முகமது அலி, உலகக்குத்துச்சண்டை உலகில் சுற்றிச் சுழன்ற கறுப்புச் சூறாவளி. அமெரிக்காவில் நிலவும் நிறவெறிக் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து மிகுவலுக் குத்துகளை விட்டுகொண்டிருந்த மாவீரர் அவர். நடுக்குவாத (Parkinson) நோயோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாய், மல்யுத்தம் நடத்திகொண்டிருந்த அந்த மாவீரர், தனது 74-ஆவது அகவையில், கடந்த 3-ஆம்நாள் தன் நேயர்களிடமிருந்து நிலையாக விடைபெற்றுக்கொண்டார். உலகைப் போட்டிகளில் அழுத்தமான குத்துகளால் எதிராளிகளை மிரட்டிய அவரது கைகள், அசைவற்ற அமைதியில் அமிழ்ந்துவிட்டன. அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942- இல் பிறந்த அலியின் இயற்பெயர்,…
சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! – பாவலர் கருமலைத்தமிழாழன்
சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப் பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார் பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று ! வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம் வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால் பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே ! பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும் பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள் ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால் கள்ளிப்பால்…
நான் தமிழ்! நீ தமிழ்! யாவும் தமிழ்! – கவிஞர் கல்முனையான்
நான் தமிழ்! நீ தமிழ்! யாவும் தமிழ்! இனிய தமிழ் என்றும் இனிக்கும் தமிழ் கண்கள் பனிக்கும் தமிழ் உழைக்கும் தமிழ் என்றும் தழைக்கும் தமிழ் ஈழம் அழைக்கும் தமிழ் மிளிரும் தமிழ் என்றும் குளிரும் தமிழ் எம்மில் ஒளிரும் தமிழ் தங்கத் தமிழ் என்றும் சிங்கத் தமிழ் எங்கள் சங்கத் தமிழ் செந்தமிழ் என்றும் பைந்தமிழ் வாழ்வின் தேன்தமிழ் ஆல் தமிழ் ஆழ் தமிழ் அகிலம் ஆள் தமிழ் உன் தமிழ் என்றும் உண் தமிழ் தமிழனின் கண் தமிழ் கல்…
அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்! – செயபாசுகரன்
தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் நா.அருணாசலம், வாழ்வின் விளிம்புக்குப் போனதையறிந்த தமிழ்ச்சுற்றங்கள், கவலையோடு அவர் இல்லத்தில் குழும… தேனிசை செல்லப்பா, புட்பவனம் குப்புசாமி போன்ற பாவாணர்கள், ஆனாரூனாவுக்குப் பிடித்த இன எழுச்சிப் பாடல்களை, அவர் காதுபடப் பாடினர். புட்பவனம், ஆனாரூனா அவர்களைப்பற்றி செயபாசுகரன் எழுதிய “தமிழ்மொழியின் வேரில் பாயும்’’ எனத்தொடங்கும் பாடலைத், தேம்பலுடன் பாடியபோது, அதைக் கேட்டபடியே ஆனாரூனா அவர்களின் இதயத் துடிப்பு கரைந்துவிட்டது. அப்பாடல் வருமாறு: அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்! தமிழ் மொழியின் வேரில் பாயும் தஞ்சை…
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! – வ.கோவிந்தசாமி
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! இந்தியச் சனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை! மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை! அடிமை வாழ்வை எண்ணி – அதில் கொடுமை நிலையெண்ணி விடுதலை வேட்கையிலே – அன்று வீரர் பலர் இருந்தனர் – அவர்கள் நித்தம் நித்தம் தம் நிலையை எண்ணி – தம் சித்தம் கலங்கி நின்றார் – அன்று சிந்தையில் துணிவு கொண்டார். யுத்தம் பல புரிந்து இரத்தம் பலர் சொரிந்து பெற்றது இந்தக் குடியரசு – அதை நன்றே பேணும் புவியரசு….
வாக்குகளுக்கு ஏனோ விலை? – சா.சந்திரசேகர்
வாக்குகளுக்கு ஏனோ விலை? பொழியுது வாக்குறுதி மழை வாக்குகளுக்கு ஏனோ விலை நயமாகப் பேசுவது தான் அரசியல் கலை நல்லோருக்கு வாக்களித்து மற்றோருக்கு வைப்போம் உலை – சா. சந்திரசேகர் கவிதைமணி, தினமணி 17.11.2015
திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! – கோ. மன்றவாணன்
திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! விரலில் கருப்பு மை வைக்கும்போதே தெரியவில்லையா… நம்நாடு நம்மக்களை நம்பவில்லை என்று! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் தரும் அட்சயப் பாத்திரம் ஆவோம் என்பவர்கள்… தேர்தலுக்குப் பிறகு எங்கள் திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! விதிமீறல்களை வேடிக்கை பார்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்புதானோ தேர்தல் ஆணையம். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்பது கனவு சனநாயகம். மந்திரிகள் மட்டுமே மன்னர்கள் ஆவது நவீன சனநாயகம்! ஊழலில் சிதறிய ஒரு சொட்டே வெள்ளமாய்ப் பாயும் விந்தையைப் பார்க்கலாம் தேர்தல் திருவிழாவில் மட்டுமே! பணம் வாங்கி வாக் களித்த…
