விரல் நுனிகளில் தீ – இரவி கல்யாணராமன்

விரல் நுனிகளில் தீ! தீ! – அவள் விரல் நுனிகளில் தீ! மிகஅழகிய முகமும் – ஒரு கொடியசைகிற உடலும் இளவயதினள் கனிமொழியினள் எழிலுருவினள் எனினும் – அவள் விரல் நுனிகளில் தீ கண்ணனைத் தொட்டவளோ – கவிதை எழுதுவதால் வெம்மை யுற்றவளோ கண்ணகி யாய்த்தன் காற்சிலம்பை – எறிந்து விட்டவளோ ஊரைச் சுட்டவளோ – அவள் விரல் நுனிகளில் தீ வீணை இசைப்பாளோ – ஓவியம் தீட்டி இழைப்பாளோ சின்ன குழந்தையைத்தன் – நெஞ்சில் வாரி அணைப்பாளோ தென்றலை ஒதுக்கிவிட்டுக் – கை…

பொழிவது அனல் மழை தானே! -பவித்திரா நந்தகுமார்

பொழிவது அனல் மழை தானே! விடுதலை வேண்டி வீழ்ந்தவர் உணர்வைப் பாடிட வேண்டும் வா மழையே! விதைக்குள் வீரம் வெளிக்கிடும் நேரம் தழுவிட வேண்டும் வா மழையே! ஈழ மண்ணில் வீசுகின்ற காற்றும் கூட காவியம் ஈகம் செய்த மாவீரம் எங்கள் வாழ்வியம் மெல்ல சாரல் பூவைத் தூவிடு சாதனைகள் பாடிடு சந்ததியை வாழ வைக்கும் கல்லறையைத் தழுவிடு களம் பல ஆடித் தாய் நிலம் காத்த விழி தொட வேண்டும் வா மழையே! காவியப் பூக்கள் கால் தடம் தேடி கரைந்திட வேண்டும்…

தமிழர் எழுவருக்கான விடுதலைப் பேரணி, சென்னை : ஒளிப்படங்கள்

 சென்னை எழும்பூரிலிருந்து கோட்டை வரையிலான எழுவர் விடுதலைப் பேரணி  : ஒளிப்படங்கள் [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]   முகிலன் பிரபாகரன் செகதீசுவரன் பிரசாந்து துறையூர் மயில் வாகனன் பரணிப்பாவலன் வாஞ்சிநாதன்

கருப்பினப் போராளி அலி! -ஆரூர் தமிழ்நாடன்

  முகமது அலி, உலகக்குத்துச்சண்டை உலகில் சுற்றிச் சுழன்ற கறுப்புச் சூறாவளி.  அமெரிக்காவில் நிலவும் நிறவெறிக் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து மிகுவலுக் குத்துகளை விட்டுகொண்டிருந்த மாவீரர் அவர். நடுக்குவாத (Parkinson) நோயோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாய், மல்யுத்தம் நடத்திகொண்டிருந்த அந்த மாவீரர், தனது 74-ஆவது  அகவையில், கடந்த 3-ஆம்நாள் தன்  நேயர்களிடமிருந்து  நிலையாக விடைபெற்றுக்கொண்டார். உலகைப் போட்டிகளில் அழுத்தமான குத்துகளால் எதிராளிகளை மிரட்டிய அவரது கைகள், அசைவற்ற  அமைதியில் அமிழ்ந்துவிட்டன.     அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942- இல் பிறந்த அலியின் இயற்பெயர்,…

அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்! – செயபாசுகரன்

  தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர்  நா.அருணாசலம், வாழ்வின் விளிம்புக்குப் போனதையறிந்த தமிழ்ச்சுற்றங்கள், கவலையோடு அவர் இல்லத்தில் குழும… தேனிசை செல்லப்பா, புட்பவனம் குப்புசாமி போன்ற பாவாணர்கள், ஆனாரூனாவுக்குப் பிடித்த இன எழுச்சிப் பாடல்களை, அவர் காதுபடப் பாடினர். புட்பவனம்,  ஆனாரூனா அவர்களைப்பற்றி  செயபாசுகரன் எழுதிய “தமிழ்மொழியின் வேரில் பாயும்’’  எனத்தொடங்கும்  பாடலைத்,   தேம்பலுடன் பாடியபோது, அதைக் கேட்டபடியே ஆனாரூனா அவர்களின் இதயத் துடிப்பு கரைந்துவிட்டது. அப்பாடல் வருமாறு: அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்!   தமிழ் மொழியின் வேரில் பாயும் தஞ்சை…

ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! மோதியுமிழ் என்றுரைத்த பாரதியின் பாட்டினையும், சாதியில்லை என்றுரைத்த பெரியாரின் கூற்றினையும், காதினிலே வாங்காமல் கண் மூடிக் கிடப்பதனால், நீதிநெறி தவறாத தலைவர்கள் இல்லாமல், நாதியற்று நெஞ்சுடைந்து நற்றமிழன் சாகின்றான்!   போதிமர நீழல்கள் பொய்யாகிக் கருகியதால், தீதிலுயர் ஊழல்கள் தொய்வின்றிப் பரவியதால், சாதனைகள் செய்வதாகச் சத்தியங்கள் செய்து, சூதாட்டக் களமாகத் தேர்தலினை மாற்றி, வேதனையில் தமிழர்களை வீழவைத்துத் தூகிலேற்றி, பாதியுயிர் பறித்தெடுத்துக் குற்றுயிராய் நிற்கவைத்தார்! மீதியுயிர் போகும்முன் மனந்தெளிந்து எழுந்து, நூதனமாய்ச் சிந்தித்து நல்லவரைத் தேர்ந்து, சோதிநிறை நன்னிலமாய்…

நீரோடு நிலம் காப்பவனை ஆட்சியில் அமர்த்து! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தமிழினத்தின் பொற்காலம்! வாரங்கள் ஒன்றிரண்டு மட்டும் தான் உள்ளதடா, ஊரெங்கும் பரப்புரை ஒளிவேகம் எடுக்குதடா, கூரம்பாய் சிந்தனையை நீ கொஞ்சம் தீட்டிடடா, பாரங்கள் தீர்ப்பவர்கள் யாரென்று தேர்ந்திடடா! வீரங்கொண் டிதுவரையில் வசனங்கள் பேசியவர், கோரப்பல் சிரிப்பாலே கொடுங்கோலாய்ச் சீறியவர், வேரின்றி வீழ்கின்ற மரம்போலுன் காலடியில், பேரன்புச் சாயமிட்டு வீழ்வார்கள் புறந்தள்ளடா! ஈரங்கொண் டுள்ளத்தில் எரிமலையாய் வெடிப்பவனை, மாரெங்கும் தமிழனென்னும் பெருமிதத்தில் திளைப்பவனை, பாரெங்கும் தமிழகத்தின் பெருமைகளை வளர்ப்பவனை, நீரோடு நிலம் காக்கப் போராடும் நல்லவனை, யாரென்ன சொன்னாலும் தடுமாற்றம் இல்லாமல், ஆராய்ந்து பார்த்தபின் ஆட்சியில்…

வாக்குச் சீட்டு காகிதமா ? ஆயுதமா ? – இரவி கல்யாணராமன்

வாக்குச் சீட்டு காகிதமா? ஆயுதமா? நெஞ்சைப் பிழிந்து கண்ணீர் மல்கக் கெஞ்சிக் கேட்கிறேன் அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் அடிமையாகி வீழ்ந்தது போதும் கொஞ்சம் நிமிர்ந்து நோக்குங்கள் எங்கும் உங்கள் குரலொலிக் கட்டும் தானம் இலஞ்சம் மறுத்து விடுங்கள் – தன் மானம் காக்க வாக்களியுங்கள் நேர்மை, துணிவு, பணிவெல்லாம் தேர்வு செய்து வாக்களியுங்கள் உங்களுக் காக உழைப்பேன் என்று வேலை கேட்டு வருகிறார்கள் வேட்பாளர்களாய் வீதிதோறும் வாக்கு கேட்டு வருகிறார்கள் பரப்புரையை நிறுத்தி விட்டுச் சிக்கல்களைக் கேட்கச் சொல்லுங்கள் அடக்கமாக வரச் சொல்லுங்கள்…

மதி படைத்த யானை! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதி படைத்த யானை   குள்ளநரிகள் கள்ளவெறியில் தேர்தல் மணியை அடிக்குதாம், குருட்டு மறிகள் அந்த ஒலியில் பழசையெல்லாம் மறக்குதாம், குருதி வெறியில் நரிகளோடு கழுதைப்புலிகள் சேருதாம், குற்றுயிராய்க் குலையுயிராய் மறிகள்சாகு மென்றறிந்து, கொல்லும் அலகுக் கழுகுகளும் ஆசையோடு பறக்குதாம்! உள்ளம் குமுறிக் கண்டவர்கள் என்னசொல்லித் தடுத்த போதும், உண்மை அறியும் ஆற்றலின்றி ஊனமறிகள் சிரிக்குதாம்! மறிகளுக்கு அறிவையூட்டி, நல்வழியைக் காட்ட, மதிபடைத்த யானைஒன்று, தரை நடுங்க வருகுதாம்! தமிழ் நலம்பெருக்க வருகுதாம்! தன் நலம்மறந்து வருகுதாம்! தேர்தல் களம்வெல்ல வருகுதாம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

இலங்கை வேந்தன் கல்லூரியின் 5 நாள் இயல் இசை நாடக விழா புதன்கிழமை தொடங்கும்

இலங்கை வேந்தன் கல்லூரியின்  5 நாள் இயல் இசை நாடக விழா புதன்கிழமை  தொடங்கும்  யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியின் இயல் இசை நாடக விழா சித்திரை 21, 2017 / மே 04  புதன்கிழமை அன்று  தொடங்குகின்றது. தொடாந்து ஐந்து நாட்களுக்கு யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில் நீராவியடிப் பிள்ளையார் கோவிலை இணைக்கும் கல்லூரி வீதியில் உள்ள இந்த மண்டபத்தில் இடம்பெறவுள்ள கலைவிழா மூன்றாவது தடவையாக இடம்பெறுகின்றது. நுழைவு இலவசம் எனவும் யாழ். கலைஞர்களின் முயற்சிகளில் பங்கேற்று ஆதரவு நல்குமாறும் ஏற்பாட்டாளரான இலங்கை…

தாழ்த்தப்பட்ட தமிழினம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தாழ்த்தப்பட்ட தமிழினம்! உயர்ந்தவ ரென்றும், தாழ்ந்தவ ரென்றும், உனக்குள் பகைமையை ஊதி வளர்த்து, இயன்ற வரையினில் திருடிப் பொருள்சேர்க்க, இலக்குகள் வைத்துச் செயல்படும் கூட்டத்தை, வியந்து பாராட்டி, வாய் உலரப் பேசி, வறண்ட சுனைபோல வாடும் தமிழா! பயந்து பயந்து நீ வாழ்ந்தது போதும், பணிந்து குனிந்து நெஞ்சம் பாழ்பட வேண்டா. அயர்ந்து கண்தூங்கி அழிந்தது போதும், அடர்ந்த அமிலமாய்ப் பொங்கிட வேண்டும்! இயங்கித் துணிவோடு களத்தில் நம்முடன், இறங்கிச் செயலாற்றி இன்னல் களைந்திட, முயன்று முனைப்புடன் முன்வரும் ஒருவனை, முதல்வன் ஆக்கினால் மாற்றம்…

உன்பிள்ளை குட்டிகளைக் காப்பதுன் பொறுப்பு! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

உன்பிள்ளை குட்டிகளைக் காப்பதுன் பொறுப்பு! சண்டாளக் காசுவந்து செந்தமிழர் ஒற்றுமையைத், துண்டாடிக் கூசாமல் வெந்தழித்து நாசமாக்க, வண்டாடுஞ் சோலைகளும் வாவிகளும் செத்துவீழ, அன்றாடச் சோற்றுக்கு அல்லாடித் திரிந்தாலும், பங்காளிச் சண்டையிலே பகுத்தறிவை இழந்து, இரண்டாக நிற்கின்ற என்னன்புத் தமிழா! குண்டூசி அளவேனும் சிந்தித்துப் பாரடா! முண்டாசுக் கவிஞன் சொன்ன சொற்களை மறந்தாய், மண்டூகப் பேய்களுக்கு வாக்களித்து ஒழிந்தாய்! திண்டாடிச் சீரழியும் தமிழினத்தின் நிலைமைக்கு, என்றேனும் காரணம்யார் என்றெண்ணிப் பார்த்தாயா? வெண்டாக உடல்வெடித்து ஓடாகத் தேய்ந்தாலும், என்போடு சதையொட்டி கூடாக ஆனாலும், “என்பாடு” இதுவல்ல என்று…