மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா? மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடக் கூடாது எனக் கூக்குரல்கள் எழும்புகின்றன. மூட நம்பிக்கைகளை அறுவடை செய்வோர், தங்கள் அறுவடைக்குக் குந்தகம் விளையுமோ என அஞ்சி இவ்வாறு எதிர்க்கின்றனர். உலக நாடுகள் அனைத்திலுமே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சீர்திருத்தக் கருத்துகள் அந்தந்த நாட்டு அரசுகளின் மூலம்தான் நிறைவேறியுள்ளன. சீர்திருத்தவாதிகள் தங்கள் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றிற்குச் சட்ட ஏற்பு கொடுத்து நிலையாக மாற்றுவதற்கு அரசுகளே காரணமாக அமைகின்றன. இந்தியாவிலும் அப்படித்தான். 1829இல் இராசாராம் மோகன்ராய் துணையுடன் வில்லியம்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 52 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 51 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2 – தொடர்ச்சி) அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2 “தழைகள் விரவியுள்ள பசுமையான சோலையில் இருக்கும் சிவப்பாகிய மாணிக்கத்தைப் பார்த்த கரடியானது, அதனைத் தீயென்று எண்ணிப் பயந்து வேறு காட்டுக்குச் செல்ல, அங்கே இரவில் அக்காடு சோதிமரம் நிறைந்தமையால் நெருப்புப்போலப் பிரகாசிக்க அதைக் கண்டு, இந்த நெருப்பு நம்மை விடாதுபோல் இருக்கின்றதேயென்று எண்ணி மனத்துள்ளே துயரத்தையடையும்; அறிவில்லாதவர்கள் எங்கே போனாலும் சுகமடையமாட்டார்கள்” என்பது இதன் பொருள். பிள்ளையவர்கள்…

தோழர் தியாகு எழுதுகிறார் 206 : வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 2/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 205 : வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2 – தொடர்ச்சி) வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 2/2 இரண்டு, காவல்துறை , ஆய்தப் படைகளைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகள் என்று உறுதியாகத் தெரிந்தாலும் ஆட்சித் தலைமையில் இருப்பவர்கள் அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றவே முற்படுகின்றார்கள். காவல்துறையின் மனவுறுதியை (morale of the police) பாதுகாப்பது என்று காரணமும் சொல்லப்படுகிறது.  மூன்று, புலனாய்வின் தேவை அல்லது உடனுக்குடன் நீதி செய்தல் என்ற பெயரில் காவல்துறையின் சித்திரவதையை நியாயப்படுத்தும் மனநிலை பொதுச் சமூகத்தில் காணப்படுகிறது….

ஊரும் பேரும் 48 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும்   3

(ஊரும் பேரும் 47 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும்  2- தொடர்ச்சி) ஊரும் பேரும் கோயிலும் வாயிலும்   3 திருமுல்லைவாயில்      காவிரி யாற்றின் வட கரையில் கடலருகே யுள்ளது திருமுல்லை வாயில்.22 அது திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது.         “வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து         மிளிர்கின்ற பொன்னி வடபால்         திரைவந்து வந்து செறிதேறல் ஆடு         திருமுல்லை வாயில் இதுவே” என்னும் திருப் பாட்டில் கடற்கரையி லமைந்த முல்லை வாயிலின் கோலம் நன்கு விளங்குகின்றது. அங்குக் கோயில் கொண்டுள்ள…

தோழர் தியாகு எழுதுகிறார் 205 : வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 204 : கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்! – தொடர்ச்சி) வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2 நேற்று 26/06 காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் சித்திரவதை எதிர்ப்புப் பரப்புரையைப் பசுமைவழிச் சாலையில் இடம் பெற்றுள்ள மாநில மனிதவுரிமை ஆணையத்திலிருந்தே தொடங்கியது மிகப் பொருத்தமாக அமைந்தது. மாநில மனிதவுரிமை ஆணையத்தின் தலைவர் நீதியர் எசு. பாசுகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராசு, மாநில மனிதவுரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், நீதியர் இராச இளங்கோ, அசீதா, பிரிட்டோ,…

தமிழ் வளர்த்த நகரங்கள் 5. – அ. க. நவநீத கிருட்டிணன் தமிழ் வளர்த்த சங்கங்கள் 2/2

(தமிழ் வளர்த்த நகரங்கள் 4. – அ. க. நவநீத கிருட்டிணன் தமிழ் வளர்த்த சங்கங்கள் 1/2 -தொடர்ச்சி) அத்தியாயம் 2. தமிழ் வளர்த்த சங்கங்கள் தொடர்ச்சி மதுரையில் கடைச்சங்கம் இச்செய்திகளால் இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் இராமாயண காலத்திலும் பாரத காலத்திலும் சீரிய நிலையில் இருந்த செய்தி தெளிவாகின்றது. முதற் சங்கம் விளங்கிய தென்மதுரையும் இடைச்சங்கம் இருந்த கபாடபுரமும் கடல்கோளால் அழிந்தபின்னர், இந்நாளில் உள்ள மதுரை மாநகரில் கடைச்சங்கம் நிறுவப்பெற்ற செய்தி, பல புலவர்களால் கூறப்படுகின்றது. மதுரை மாநகரில் இயற்றமிழ்ச் சங்கமும் இசைத்தமிழ்ச் சங்கமும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 204 : கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 203 : நெல்லையில் ஊடகச் சந்திப்பு – தொடர்ச்சி) கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்! நெல்லை வரும் போதெல்லாம் சுடலைமாடன் தெருவில் தோழர் தி.க.சி.யைப் பார்த்துப் பேசாமல் திரும்ப மாட்டேன். என்னோடு உரையாடும் அந்தக் குறுகிய நேரத்தில் தன் மகிழ்வுகளையும் மனக்குறைகளையும் கொட்டித் தீர்த்து விடுவார். அவரது மனநிலையை அகவை முதிர்ந்த தந்தை தன் மகன் போன்ற ஒருவரைப் பார்க்கிற உணர்வு என்று சொல்ல முடியாது. நான் நெல்லை வரும் செய்தி கிடைத்ததிலிருந்தே வழி மேல் விழி வைத்து என்னை…

சனாதனம்: உதயநிதிக்கு நன்றி!- இலக்குவனார் திருவள்ளுவன்

சனாதனம்: உதயநிதிக்கு நன்றி! உதயநிதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது பா.ச.க.தானே! செல்லாக்காசாகப் போகும் பாசகவைச் செல்லுபடியாக்க வழி வகுத்ததால் பா.ச.க.தானே நன்றி சொல்ல வேண்டும் என்கிறீர்களா? மறுபுறம், இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகத் தமிழ்நாட்டில் இருந்த உதயநிதி தாலின் இன்றைக்கு இந்தியாவில் பேசு பொருளாக ஆகி உள்ளார். அதற்காகப் பா.ச.க.விற்கு உதயநிதிதானே நன்றி சொல்ல வேண்டும் என எண்ணுகிறீர்களா? இரண்டும் உண்மைதான். ஆனால், சனாதனம் என்பது குறித்து இந்தியா முழுவதும் பேசும்படிச் செய்ததற்கும் உலகின் கவனத்தைத் திருப்பியதற்கும் தமிழுலகும் அறவாணர்களும் உதயநிதிக்கு நன்றி…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 53 : அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 3/3

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 52 : அத்தியாயம் 11 தமிழ் மறுமலர்ச்சி 2/3 தொடர்ச்சி) பழந்தமிழ் அத்தியாயம் 11 தமிழ் மறுமலர்ச்சி 3/3   மக்களுக்கும் மாக்களுக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்று பழமையைப்பற்றி அறிவதேயாகும். மக்களால் அறிய இயலும்; மாக்களால் அறிய இயலாது (It was observed by that remarkable twelth-Century Chronicler, Henry of Huntington that an interest in his past was one of the distinguishing characteristics of man as compared with the…

தோழர் தியாகு எழுதுகிறார் 203 : நெல்லையில் ஊடகச் சந்திப்பு

(தோழர் தியாகு எழுதுகிறார் 202 : எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி? – தொடர்ச்சி) நெல்லையில் ஊடகச் சந்திப்பு இனிய அன்பர்களே! சாத்தான்குளத்துக்காகத்தான் நெல்லைப் பயணம் என்றாலும், பென்னிக்குசு-செயராசு நினைவேந்தல், சாத்தான்குளக் காவல்நிலையப் பார்வை ஆகியவற்றை முடித்துக் கொண்டு அதே நாள் மாலை தங்கசாமியின் காவல் சாவுக்கு (புளியங்குடி காவல்நிலையமா? பாளையங்கோட்டை நடுவண் சிறையா?) நீதிகோரிப் போராடப் புளியங்குடியும் செல்ல வேண்டியதாயிற்று. மறுநாள் (23/06/2023) மதியம் 11 மணியளவில் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக சந்திப்புக்கு அன்பர் பீட்டர் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த சில…

தோழர் தியாகு எழுதுகிறார் 202 : எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி?

(தோழர் தியாகு எழுதுகிறார் 201 : சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு – தொடர்ச்சி) எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி? தென்காசி மாவட்டம் புளியங்குடி நடுக்கருப்பழகுத் தெருவைச் சேர்ந்த தங்கசாமி (த/பெ மாடசாமி) சென்ற 11.06.2023 அன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை. அவர் வெளியூர் வேலைக்குச் செல்வதும், அங்கேயே தங்கி விடுவதும் வழக்கமே என்பதால் குடும்பத்தினர் – அம்மாவும், தம்பி ஈஸ்வரனும் – நண்பர்களும் பெரிதாக அலட்டிக் கொண்டார்களில்லை. தங்கசாமி மறு நாளும் வரவில்லை, அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பும்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  814-821

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 808 – 813– தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 814-821 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 814. Press – எழுத்தகம் இவ்வெளியீட்டைத் தமது போலெண்ணித் தமது எழுத்தகத்தில் (அச்சுக்கூடம்) பதிப்பிட்டுதவிய தோழர்…