தோழர் தியாகு எழுதுகிறார் 160 : சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 159 : மௌனத்தின் சொல்வன்மை தொடர்ச்சி) இனிய அன்பர்களே! வைக்கோல் போரில் மாடு படுத்துக் கிடக்க நியாயமுண்டு. ஆர்.எசு.எசு. ஆளுநர் ஆர்.என். இரவி படுத்துக் கிடக்க நியாயமே இல்லை. வைக்கோல் போரில் படுத்துக் கிடக்கவே நியாயமில்லை என்றால், சட்டப் பேரவை இயற்றும் சட்டமுன்வடிவுகளைக் கீழே போட்டு ஏறிப் படுத்துக் கிடக்க ஏது நியாயம்? இரவியின் அடாவடித்தனத்தால் முடங்கிக் கிடக்கும் முன்முயற்சிகளில் ஒன்று சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்னெடுப்பாகும். இது குறித்து சித்த மருத்துவப் பேரியக்கம் விடுத்துள்ள…

தோழர் தியாகு எழுதுகிறார் 159 : மௌனத்தின் சொல்வன்மை

(தோழர் தியாகு எழுதுகிறார் 158 : மே நாள் விடியல்! தொடர்ச்சி) மௌனத்தின் சொல்வன்மை 1886 மேத் திங்கள் 4ஆம் நாள் சிக்காகோவின் ஏயங்காடி (Haymarket)யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக 31 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் 8 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் சாமுவேல், பெல்டன், சவாசு ஆகியோருக்கு ஆளுநர் மன்னிப்பு வழங்கினார். உலூயிலிங்கு தூக்குதண்டனைக்கு முதல்நாள் சிறைச் சாலையில் அழிகுண்டு (Dynamite) வெடித்து இறந்தார். ஆல்பருட்டு பார்சன்சு, ஆல்காட்டு பைசு(Spies), ஃபிசர், எங்கெல் ஆகிய மற்ற நால்வரும் 1887  நவம்பர் மாதம் 11ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர். சிக்காகோவின் குக் கவுண்டி நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கும் இடையில் உள்ள தியர்பார்சன் தெருவின் நடைபாதையில் தூக்குமேடை அமைக்கப்பட்டது. மறுநாள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை. முதல்நாள் இரவு தூக்கம் வருமா? அவர்கள் நன்கு உறங்கினார்கள். காரணம்…

சிலைகள், படங்கள் குறித்த உயர்நீதிமன்ற நடவடிக்கை சரியே!-  இலக்குவனார் திருவள்ளுவன்

சிலைகள், படங்கள் குறித்த உயர்நீதிமன்ற நடவடிக்கை சரியே! அம்பேத்துகார் இ்நதியாவின் மாபெரும் தேசியத்தலைவர் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.  எனினும் அவர் வகுப்பார் அவரைச் சாதித்தலைவராகக் காட்சிப்படுத்துவதால் அவர் தொடர்பில் சாதிச் சண்டைகளும் இடம் பெறுகின்றன. எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்திய அவர் வழியில் நீதிமன்றங்களில் எந்தத் தலைவரின் படமும் இடம் பெறக்கூடாது என்ற உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை சரியே. எனினும் இப்போது அரசின் வேண்டுதலை ஏற்று அதனைத் திரும்பப்பெற்றுக்கொண்டதையும் பாராட்டுகிறோம். எனினும் இது குறிததுச் சில செய்திகளை நாம் …

தோழர் தியாகு எழுதுகிறார் 158 : மே நாள் விடியல்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 157 : திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இன்று அதிகாலை 4.30 –  கைப்பேசி ஒலித்தது. இது நண்பர் சம்ராசின் அழைப்பு. 1974 மே முதல் நாள் இந்த அதிகாலை நேரம் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அனைவரையும் எழுப்பி விட்டு போராட்டத்துக்கு அணியமானதை நினைவு கொள்ளும் அழைப்பு. தலைவர் ஏசிகே, தோழர் இலெனின், பாலகிருட்டிணன் எல்லாரும் போய் விட்டார்கள். அந்த ஆண்டே பாலகிருட்டிணன் தூக்க்கிலிடப்பட்டார். இடைப்பட்ட ஆண்டுகளில் இலெனின் மறைந்தார். சில ஆண்டுகளுக்கு முன் ஏசிகே போய் விட்டார். சென்ற ஆண்டு…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  770- 775

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 764 -767 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  770- 775 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 770. பாசியம்       :               விருத்தியுரை 771. எமதர்மன்    :               அறக்கடவுள் நூல்        :               வைணவ சமய…

தோழர் தியாகு எழுதுகிறார் 157 : திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை

(தோழர் தியாகு எழுதுகிறார் 156 : “மக்கார்த்தியம்” தொடர்ச்சி) திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை அன்பர் சிபி கேட்கிறார்… திராவிடம் என்பற்கு முதல் அல்லது அடிப்படை என்ன? அச்சொல் எங்கிருந்து வந்தது அல்லது எடுத்தாளப்பட்டது? அதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?  தாழி விடை: “திராவிடம் என்றால் என்ன?” என்பதனை விளக்கித் திரு வி.இ. குகநாதன் எழுதிய ஒரு கட்டுரையினைத் தருகின்றேன். ’திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது,…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 7

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 6 தொடர்ச்சி) நீதிமன்றப் பணி இப்படி இருந்தும் நீதிமன்றத்தில் ஒன்றாய் வேலை கற்றுவந்தோம். மத்தியான சிற்றுண்டியும் ஒன்றாய்ப் புசிப்போம்! இரண்டு பெயரும் 1898-ஆம் வருடம் வழக்குரைஞர்களாக பதிவு செய்யப்பட்டோம். 1891-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுகுண விலாச சபைக்கு இரண்டு பெயரும் சாயங்காலங்களில் போய்க் காலங்கழிப்போம். பிறகு 1924 இல் நான் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். அதே வருடம் எனது நண்பர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1928-ஆம் வருடம் நான் 55 ஆவது வயதில் விலக வேண்டி வந்தது….

உ.வே.சா.வின் என் சரித்திரம் 45 – (அத்தியாயம் 25) : விருத்தாசல (ரெட்டியா)ர்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் – அத்தியாயம் 25 செங்கணத்தில் வாசம் தொடர்ச்சி) விருத்தாசல (ரெட்டியா)ர் நான் விருத்த இலக்கணம் படித்த காலத்தில் சீர்கள் ‘அளவொத்து’ இருக்க வேண்டுமென்று தெரிந்துகொண்டேன். ஓரடியில் ஆறு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஆறு சீர்களே இருக்க வேண்டுமென்றும், ஏழு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஏழு சீர்களே இருக்க வேண்டுமென்றும், இவ்வாறே சீர்களின் எண்ணிக்கை நான்கடிகளிலும் சமமாக இருக்க வேண்டுமென்றும் நினைத்தேன். ‘அளவொத்தல்’ என்பதற்கு இதற்கு மேலும் ஓர் அர்த்தம் உண்டென்பதை அதற்கு முன் நான் அறிந்துகொள்ளவில்லை. அதைப்…

தோழர் தியாகு எழுதுகிறார் 156 : “மக்கார்த்தியம்”

(தோழர் தியாகு எழுதுகிறார் 155 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும் மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2 – தொடர்ச்சி) அன்பர் தமிழ்க்கதிர் கேட்கிறார்… இன்றைய தாழி (172) மடலில் பொதுமை, குமுகியம், குடியாட்சியம், தேசியம் என்ற தலைப்பில் தாங்கள் வரைந்த கட்டுரையில் – மக்கார்த்தியம் போன்ற பொதுமை வெறுப்புக் கொள்கைகள் எப்படிக் குடியாட்சியத்தை ஒடுக்க முயன்றன என்பது ஒரு வரலாற்றுப் பாடம் என்றுள்ளீர்கள். “மக்கார்த்தியம்” என்றால் என்ன தோழர்? தாழி விடை: சோசப்பு மக்கார்த்தி என்றோர் அமெரிக்கப் பேரவையினர் (செனட்டர்)  1950 பிப்பிரவரியில் குண்டு போடுவது போல் ஒரு செய்தி வெளியிட்டார், அமெரிக்க அயலுறவுத்…

தோழர் தியாகு எழுதுகிறார் 155 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும் மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2

(தோழர் தியாகு எழுதுகிறார் 154 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும் மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 1 தொடர்ச்சி) காந்தியாரின் இந்தி பிரசார சபாவும் மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2 தமிழ்ப் பிரசார சபாவுக்கு இந்திய அரசு ஒதுக்கும் சொற்ப நிதியும் தமிழ் வளர்ச்சி என்ற பெயரில் இந்துத்துவப் பரப்புரைக்குத்தான் பயன்படுத்திக் கொள்ளப்படும். தமிழறிஞர்கள் என்ற போர்வையில் ஆர்எசுஎசு ஆட்கள்தாம் இந்த சபாக்களை மேலாண்மை செய்வார்கள். உண்மையிலேயே தமிழ் வளர்ச்சிதான் நோக்கம் என்றால் பிரசார சபா என்ற இந்திப் பெயர் எதற்கு?…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 46 : பழந்தமிழும் தமிழரும் 6

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 45 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 6   உவமை நயந்தான் என்னே! இவ்வளவு பொருத்தமாக யாராலும் கூறமுடியாது. வந்து அகப்பட்டுக் கொண்டால் புலியின் மீது விழுந்த குருடன் போன்றவன் என்பதில் எவ்வளவு பொருட் செறிவு இருக்கின்றது. பகைவனைக் குருடனாக்கிக் தன்னைப் புலியாக்கிக் கொண்ட சிறப்புதான் என்ன! அன்றியும் புலியிடம் வலியச் சென்று மாள்வது போலத் தன்னிடம் வலியப் போருக்கு வந்ததனால் மாளுகின்னான் என்பதும் வெளிப்படுகின்றது. அழிப்பதின் எளிமையை விளக்க அழகான உவமை. யானைக் காலில் அகப்பட்ட…

தோழர் தியாகு எழுதுகிறார் 154 : காந்தியாரின் இந்திப் பிரசார சபாவும் மோதியாரின் தமிழ்ப் பிரசார சபாவும் 1

(தோழர் தியாகு எழுதுகிறார் 153 : சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி தொடர்ச்சி) காந்தியாரின் இந்திப் பிரசார சபாவும் மோதியாரின் தமிழ்ப் பிரசார சபாவும் 1   இனிய அன்பர்களே! வாயால் வடை சுடுவதில் வல்லவரான இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி புதிதாக ஒரு வடை சுட்டிருக்கிறார். அதுதான் ‘தமிழ்ப் பிரசார சபா’. இந்தி மொழியைப் பரப்ப 1918ஆம் ஆண்டு காந்தியார் தென்னிந்திய இந்திப் பிரசார சபை (தட்சிண் பாரத் இந்தி பிரசார சபா) அமைத்தது போல் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி நாடெங்கும்…